கயத்தாறில் கோவில் திருவிழா…!! தேரோட்டத்தின்போது…!! மழை காரணமாக ஏற்பட்ட சகதியில் சிக்கிய தேர்…!!!

Default Image

தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறில் கோவில் திருவிழா தேரோட்டத்தின்போது சேற்றில் சிக்கிய தேர் இயந்திரங்கள் கொண்டு மீட்க்கப்பட்டது. கயத்தாறில் 100 அண்டுகள் பழமை வாய்ந்ததாகக் கூறப்படும் அகிலாண்டேஸ்வரி சமேத கோதண்டராமேஸ்வரர் திருக்கோயில் சித்திரைத் தேரோட்டம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

அப்போது ரதவீதியில் அண்மையில் பெய்த மழை காரணமாக உண்டான சகதியில் தேரின் சக்கரங்கள் சிக்கின. நீண்ட நேரம் போராடியும் வெளியே எடுக்க முடியாததால், ஜேசிபி, கிரேன் உள்ளிட்ட இயந்திரங்கள் கொண்டுவரப்பட்டு சேற்றிலிருந்து தேர் மீட்கப்பட்டது.பழமைவாய்ந்த கோவில் என்கிற வகையில் மண்பாதையாகக் காணப்படும் ரதவீதியில் தார் சாலை அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்