அகில இந்திய சிலம்பம் சம்மேளனம், உலக சிலம்பம் பெடரேசன் ஆகிய அமைப்புகள் இணைந்து 14வது தேசிய அளவிலான சிலம்பப் போட்டிகள் நடத்தியது. இந்தியா முழுவதிலும் இருந்து 400க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்ட இப்போட்டியில் மினி சப் ஜூனியர், ஜூனியர்,சூப்பர் சீனியர் ஆகிய பிரிவுகளில் போட்டிகள் சென்னை, மாம்பலம் அருகே உள்ள தனலெட்சுமி பொறியியல் கல்லூரியில் நடைபெற்றது. கடந்த 24ம் தேதி முதல் 26ம் தேதி வரை 3 நாட்கள் நடைபெற்ற இப்போட்டியில், தமிழகம் சார்பில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து மாணவ, மாணவிகள் கலந்துக் கொண்டனர். இதில், தூத்துக்குடியிலிருந்து சுமார் 12 பேர் கலந்து கொண்டதில் 1 தங்கம், 4 வெள்ளி, 7 வெண்கலம் வென்று சாதனை படைத்துள்ளனர்.
இதில், 7 வயதிற்குட்பட்ட மினி சப் ஜூனியர் பிரிவில் மில்கின் ஜெனித் தங்கம் வென்று சாதனை படைத்துள்ளார். இந்நிலையில் வெற்றி பெற்ற மாணவர்களை தூத்துக்குடி மாவட்ட சிலம்பாட்ட கழகம் செயலாளர் முத்து சங்கர், துணைத்தலைவர் முனியசாமி ஆகியோர் பாராட்டியுள்ளனர்.
சென்னை : இன்று (நவம்பர் 22) சென்னை அண்ணா அறிவாலயத்தில் தமிழக முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக…
டெல்லி : உலகளவில் பெரும்பாலான ஸ்மார்ட் போன் பயன்பாட்டாளர்களின் இணையவழி தேடல் எஞ்சினாக செயல்பட்டு வருகிறது கூகுள் குரோம். இந்த…
சேலம் : பள்ளி மாணவர்களை பள்ளிகளில் வேலை வாங்கும் நிகழ்வுக்கு அவ்வபோது உயர் கல்வி அதிகாரிகள் நடவடிக்கைகள் எடுத்து வந்தாலும்,…
சென்னை : கடந்த அக்டோபர் 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் உள்ள வி.சாலை பகுதியில் தமிழக வெற்றிக் கழகம்…
சென்னை : தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் இன்று ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.…
ஆஸ்திரேலியா : அதானி குழுமத்திற்கு இந்த வாரம் அடிமேல் அடியாக விழுந்து கொண்டிருக்கிறது. ஏற்கனவே அமெரிக்க வழக்கறிஞர்கள் அளித்த லஞ்ச…