தேசிய அளவிலான சிலம்பம் போட்டி : தூத்துக்குடி மாணவர்கள் ஒரு தங்கம் உட்பட 12 பதக்கம் வென்று சாதனை

Default Image

அகில இந்திய சிலம்பம் சம்மேளனம், உலக சிலம்பம் பெடரேசன் ஆகிய அமைப்புகள் இணைந்து 14வது தேசிய அளவிலான சிலம்பப் போட்டிகள் நடத்தியது. இந்தியா முழுவதிலும் இருந்து 400க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்ட இப்போட்டியில் மினி சப் ஜூனியர், ஜூனியர்,சூப்பர் சீனியர் ஆகிய பிரிவுகளில் போட்டிகள் சென்னை, மாம்பலம் அருகே உள்ள தனலெட்சுமி பொறியியல் கல்லூரியில் நடைபெற்றது.  கடந்த 24ம் தேதி முதல் 26ம் தேதி வரை 3 நாட்கள் நடைபெற்ற இப்போட்டியில், தமிழகம் சார்பில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து மாணவ, மாணவிகள் கலந்துக் கொண்டனர். இதில், தூத்துக்குடியிலிருந்து சுமார் 12 பேர் கலந்து கொண்டதில் 1 தங்கம், 4 வெள்ளி, 7 வெண்கலம் வென்று சாதனை படைத்துள்ளனர்.

இதில், 7 வயதிற்குட்பட்ட மினி சப் ஜூனியர் பிரிவில் மில்கின் ஜெனித் தங்கம் வென்று சாதனை படைத்துள்ளார். இந்நிலையில் வெற்றி பெற்ற மாணவர்களை  தூத்துக்குடி மாவட்ட சிலம்பாட்ட கழகம் செயலாளர் முத்து சங்கர், துணைத்தலைவர் முனியசாமி ஆகியோர் பாராட்டியுள்ளனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்