செயின்ட்.மதர் தெரசா பொறியியல் கல்லூரி மாணவர்கள் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரே முற்றுகை போராட்டம்!

Published by
Venu

தூத்துக்குடியில் செயின்ட்.மதர் தெரசா பொறியியல் கல்லூரி மாணவர்கள் 100-க்கும் மேற்பட்டோர் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரே நின்று முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

தூத்துக்குடியில் உள்ள காப்பர் தயாரிக்கும் ஸ்டெர்லைட் ஆலையால் விவசாயம் பாதிக்கப்படுவதோடு குடிநீரால் அப்பகுதி மக்களும் பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

தூத்துக்குடியில் இயங்கி வரும் ‘வேதாந்தா’ நிறுவனத்தின் அங்கமான ஸ்டெர்லைட் ஆலையின் 25 ஆண்டு ஒப்பந்தம், அடுத்த ஆண்டு முடிவடைகிறது.ஆலையின் அடுத்த விரிவாக்கத்திற்காக, அந்நிறுவனம் விரிவாக்கப் பணியினை தொடங்கி உள்ளது. ஆலையிலிருந்து வெளியாகும் நச்சுப் புகையால், சுற்றுச்சூழல் பாதிப்பும், சுற்றியுள்ள கிராம மக்களுக்கு, மூச்சுத்திணறல் முதல் புற்று நோய் வரை பல நோய்கள் வருவதாகவும் கூறி, ஸ்டெர்லைட் விரிவாக்கத்திற்கு எதிராக குமரெட்டியாபுரம் கிராம மக்கள் தொடர்ந்து போராடி வருகின்றனர்.இதனால் பொதுமக்கள் 49 நாட்களாக மேலாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

தூத்துக்குடியில் கடந்த மார்ச் 24ஆம் தேதி நடைபெற்ற போராட்டத்தில், ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்றுள்ளனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. போராட்டத்திற்கு அரசியல் கட்சிகள் சார்பிலும் ஆதரவு தெரிவிக்கப்பட்டு வருகிறது. தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலை மூட வேண்டும் என வலியுறுத்தி நடைபெறும் போராட்டத்திற்கு உலக தமிழர்கள் தரப்பிலும் ஆதரவு தெரிவிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் தூத்துக்குடியில் செயின்ட்.மதர் தெரசா பொறியியல் கல்லூரி மாணவர்கள் 100-க்கும் மேற்பட்டோர் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரே நின்று முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Recent Posts

கோலி மட்டும் கேப்டன் இருந்தா அஸ்வின் ஓய்வு பெற்றிருக்க மாட்டார்! பாசித் அலி பேச்சு!

கோலி மட்டும் கேப்டன் இருந்தா அஸ்வின் ஓய்வு பெற்றிருக்க மாட்டார்! பாசித் அலி பேச்சு!

சென்னை : இந்திய கிரிக்கெட் வீரர் அஸ்வின் திடீரென தான் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தது இன்னுமே…

24 minutes ago

ஹரியானா முன்னாள் முதல்வர் ஓம் பிரகாஷ் சௌதாலா மறைந்தார்!

ஹரியானா: இந்திய தேசிய லோக் தளம் கட்சித் தலைவரும், ஹரியாணா முன்னாள் முதல்வருமான ஓம் பிரகாஷ் சௌதாலா(89) மாரடைப்பால் காலமானார்.…

33 minutes ago

“ஜன.6ம் தேதி ஆளுநர் உரையுடன் சட்டப்பேரவை கூடுகிறது” – சபாநாயகர் அப்பாவு!

 சென்னை: 2025ம் ஆண்டுக்கான தமிழக சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடர் ஜனவரி 6ம் தேதி தொடங்கும் என்றும், அன்று தமிழக ஆளுநர்…

1 hour ago

நெல்லை நீதிமன்றம் முன்பு இளைஞர் வெட்டிக்கொலை! 6 பேர் கைது!

நெல்லை : இன்று தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஆழ்த்தும் வகையில் அதிர்ச்சியான சம்பவம் திருநெல்வேலி மாவட்டத்தில் நடந்துள்ளது. பட்ட பகலில் நெல்லை…

2 hours ago

பிபின் ராவத் மரணம்.. ஹெலிகாப்டர் விபத்துக்கு மனித தவறே காரணம்! வெளியான நிலைக்குழு அறிக்கை!

டெல்லி: முன்னாள் முப்படைகளில் தலைமைத் தளபதியான பிபின் ராவத் பயணம் செய்த ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கி அவர் உயிரிழந்ததற்கு மனித…

2 hours ago

பழனிசாமி கத்திக் கூப்பாடு போட்டாலும் அதில் உண்மை இருக்காது..முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!

சென்னை : அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடந்த சில நாட்களாக தொடர்ச்சியாக திமுகவை விமர்சித்து பேசி வருவதால் அவருக்கு திமுக…

2 hours ago