செயின்ட் மதர் தெரசா பொறியியல் கல்லூரி மாணவர்கள் குமரெட்டியாபுரம் கிராம மக்களுடன் சேர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தூத்துக்குடியில் உள்ள காப்பர் தயாரிக்கும் ஸ்டெர்லைட் ஆலையால் விவசாயம் பாதிக்கப்படுவதோடு குடிநீரால் அப்பகுதி மக்களும் பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
தூத்துக்குடியில் இயங்கி வரும் ‘வேதாந்தா’ நிறுவனத்தின் அங்கமான ஸ்டெர்லைட் ஆலையின் 25 ஆண்டு ஒப்பந்தம், அடுத்த ஆண்டு முடிவடைகிறது.ஆலையின் அடுத்த விரிவாக்கத்திற்காக, அந்நிறுவனம் விரிவாக்கப் பணியினை தொடங்கி உள்ளது. ஆலையிலிருந்து வெளியாகும் நச்சுப் புகையால், சுற்றுச்சூழல் பாதிப்பும், சுற்றியுள்ள கிராம மக்களுக்கு, மூச்சுத்திணறல் முதல் புற்று நோய் வரை பல நோய்கள் வருவதாகவும் கூறி, ஸ்டெர்லைட் விரிவாக்கத்திற்கு எதிராக குமரெட்டியாபுரம் கிராம மக்கள் தொடர்ந்து போராடி வருகின்றனர்.இதனால் பொதுமக்கள் 49 நாட்களாக மேலாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
தூத்துக்குடியில் கடந்த மார்ச் 24ஆம் தேதி நடைபெற்ற போராட்டத்தில், ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்றுள்ளனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. போராட்டத்திற்கு அரசியல் கட்சிகள் சார்பிலும் ஆதரவு தெரிவிக்கப்பட்டு வருகிறது. தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலை மூட வேண்டும் என வலியுறுத்தி நடைபெறும் போராட்டத்திற்கு உலக தமிழர்கள் தரப்பிலும் ஆதரவு தெரிவிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் தூத்துக்குடியில் செயின்ட்.மதர் தெரசா பொறியியல் கல்லூரி மாணவர்கள் 100-க்கும் மேற்பட்டோர் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரே நின்று முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.பின்னர் செயின்ட் மதர் தெரசா பொறியியல் கல்லூரி மாணவர்கள் குமரெட்டியாபுரம் கிராம மக்களுடன் சேர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.இந்த போராட்டத்தில் 200-க்கும் மேற்பட்ட மாணவர்கள் குமரெட்டியாபுரம் கிராம மக்களுடன் சேர்ந்து ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான முழக்கங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர்.இதேபோல் செயின்ட் மதர் தெரசா பொறியியல் கல்லூரி மாணவர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலும் போராட்டத்தில் ஈடுபட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
ஜார்க்கண்ட் : காங்கிரஸ் எம்பியும், மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தியின் ஹெலிகாப்டர் விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டின் (ஏடிசி) அனுமதி…
சென்னை -திருக்கார்த்திகை ஸ்பெஷல் அப்பம் செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான பொருட்கள்; வெல்லம் =முக்கால்…
சென்னை : சிவகார்த்திகேயன் நடிப்பில் அமரன் படம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியான நிலையில், வெளியாகி 15 நாட்களைக் கடந்து…
சென்னை : நடிகர் ஜெயம் ரவிக்கும் - ஆர்த்தி என்பவருக்கும் கடந்த 2009இல் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு 2 குழந்தைகள்…
சென்னை : கிண்டி அரசு மருத்துவமனையில், வயிற்று வலி காரணமாக அனுமதிக்கப்பட்ட இளைஞர் உயிரிழந்ததால் பதற்றம் எழுந்துள்ளது. தீவிர சிகிச்சை…
டெக்ஸாஸ் : அமெரிக்காவின் தொழில்முறையிலான குத்துச்சண்டை போட்டி நடைபெற்று வருகிறது. இதில், இன்று நடைபெறும் போட்டியில் அமெரிக்காவின் முன்னாள் ஹெவி…