நாடாளுமன்ற உறுப்பினர் சசிகலா புஷ்பாவுக்கு, வரும் 26ம் தேதி மறுமணம் நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிமுக நாடாளுமன்ற உறுப்பினரான சசிகலா புஷ்பா,தூத்துக்குடி முன்னாள் மேயரான இவர் தற்போது டில்லியில் வசித்து வருகிறார். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உயிருடன் இருந்தபோது, அவரும், சசிகலாவும் தன்னை சேர்ந்து தாக்கியதாக கூறி, மாநிலங்களவையில் பெரும் பரபரப்பை அவர் ஏற்படுத்தினார். இதன் காரணமாக அவர் அதிமுக கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார். ஆனால் இன்றைய தேதி வரை, அது தொடர்பாக எந்த அறிக்கையும் மாநிலங்களவையில் வழங்கப்படாததால், அவர் அதிமுக நாடாளுமன்ற உறுப்பினராகவே இன்று வரையில் தொடர்கிறார்.
கடந்த இரு ஆண்டுகளாக நாடாளுமன்ற உறுப்பினர் சசிகலா புஷ்பாவுக்கு, அவரது கணவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு வந்தது. இதன் காரணமாக டில்லியில் தனிமையில் வசித்து வந்த அவர், டெல்லியில் உள்ள துவாரகா மாவட்ட நீதிமன்றத்தில் தனக்கு விவகாரத்து கோரியும் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கில் கடந்த சனிக்கிழமை தீர்ப்பு வழங்கப்பட்டது. அதில், சசிகலா புஷ்பா கேட்டுக்கொண்டது போல விவாகரத்து அளிக்கப்பட்டது. இந்நிலையில் வரும் 26ம் தேதி சசிகலா புஷ்பாவுக்கும், ஓரியண்டல் சயின்ஸ் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர், முனைவர் ராமசாமிக்கும் வரும் டெல்லியில் உள்ள லலித் ஓட்டலில் திருமணம் நடக்க உள்ளது. இது தொடர்பான பத்திரிக்கை செய்திகள் நேற்று வெளியான நிலையில், அது பேஷ்புக்,ட்விட்டர் போன்ற சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
இவர் ஏற்கனவே திமுக நாடாளுமன்ற உறுப்பினர் திருச்சி சிவாவுடன் தொடர்பில் உள்ளது போன்ற புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வெளியாகி சர்ச்சைக்கு உள்ளானது என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : சென்னை அடையாறு முத்தமிழ் பேரவை சிவாஜி நினைவிடம் அருகே, திராவிட இயக்கத் தமிழர் பேரவை நடத்தும் "திராவிடமே…
சென்னை : கடந்த மாதம் 27-ல் விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் தவெக கட்சியின் முதல் மாநாடு நடைபெற்றது. தவெக வெற்றிக்…
கோவை : முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் திமுக செய்தி தொடர்பாளருமான கோவை செல்வராஜ் (66) மாரடைப்பால் இன்று காலமானார். திருப்பதியில்…
சென்னை : நடிகர் சிவகார்த்திகேயன் நடித்திருக்கும் 'அமரன்' திரைப்படத்தில் இஸ்லாமியர்களை தீவிரவாதிகளாக சித்தரிப்பதாக குற்றச்சாட்டை முன்வைத்து எஸ்டிபிஐ கட்சியினர், கோவை,…
ஐரோப்பா : மறைந்த பிரிட்டன் அரசி எலிசபெத் இந்த மண்ணைவிட்டு மறைந்தாலும் அவர் பயன்படுத்திய பொருட்கள் பிரமாண்ட விலைக்கு ஏலத்தில்…
சென்னை : நடிகர் சூர்யாவின் “கங்குவா” படத்தை வெளியிடத் தடையில்லை என ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. ரூ.55 கோடி ரூபாயை வழங்காமல்…