கடந்த மாதம் கஜா புயல் டெல்ட்டா மாவட்டங்களை கோரத்தாண்டவம் ஆடியது.குறிப்பாக தஞ்சை , நாகை மற்றும் புதுகோட்டை ஆகிய மாவட்டங்கள் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டு மக்கள் வாழ்வாதாரத்தை இழந்து நடுத்தெருவில் நிற்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
கஜா புயலின் கோரத்தாண்டவத்தில் சிக்கிய டெல்ட்டா பகுதி மக்களின் வாழ்வாதாரத்தை மீட்டுட்க்க தமிழகம் உள்ளிட்ட பல்வேறு பகுதியில் இருந்து அரசியல் கட்சிகள் , பல்வேறு அமைப்புகள் , மாணவர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் என ஏராளமானோர் உதவி செய்து வருகின்றனர்.
இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டம் விளாத்திக்குளம் தாலுகாவில் உள்ள மனோன்மணியம் சுந்தரனார் உறுப்புக்கல்லுரி NSS மாணவர்கள் கடந்த இரண்டு வாரங்களாக கடைகள் , பேரூந்துநிலையம் , கிராமங்கள் மற்றும் பொதுமக்கள் என கஜா புயல் நிவாரணம் வசூல் செய்தனர்.இந்த வசூலில் NSS திட்ட அலுவலர் பேராசிரியர் எஸ்.சுரேஷ்பாண்டி மாணவர்களுடன் சென்று நேரடியாக நிவாரண வசூலில் பங்கேற்றார்.
இந்நிலையில் கடந்த இரண்டு வாரங்களாக நிவாரண செய்த பொருட்களுடன் கஜா புயலால் பாதிக்கப்பட்ட நாகை மாவட்டம் சிகார் கிராமத்திற்கு சென்று , சுமார் 126 குடும்பங்களுக்கு தேவையான அரிசி , மெழுகுவர்த்தி , கொசுவர்த்தி , பிஸ்கட் , பால் , நாப்கின்ஸ் , டார்ச் லைட் , துணிகள் என சுமார் 60,000 மதிப்பிலான நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது.
புயல் பாதிப்பால் படிக்கின்ற மாணவர்களின் நோட் , புக் சேதமடைந்ததையடுத்து அந்த கிராமத்தில் உள்ள 50 மாணவர்களுக்கு நோட் புக் மற்றும் மாணவ மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகையும் வழங்கி மக்களின் துயரத்தில் பங்கெடுத்துக் கொண்டனர்.2 வாரங்களில் நேரடியாக வசூல் செய்தது மட்டுமில்லாமல் பல்வேறு மக்களிடம் கஜா புயல் பாதித்த மக்களுக்கு நிவாரணம் என்று தொலைபேசி , சமூக வலைத்தளம் மூலமாக குழந்தைகளின் கல்விச் செலவுக்கு மற்றும் அடுத்தகட்டமாக நிவாரண உதவி என்ற முறையில் சுமார் 80 இலட்சம் ரூபாய் மதிப்பிலான நிவாரண பொருட்கள் மற்றும் கல்விஉதவித் தொகை வழங்க ஏற்பாடு செய்தது குறிப்பிடத்தக்கது.
சாதாரண கல்லூரி மாணவர்களால் கிட்டதட்ட ரூபாய் 60,000 மதிப்பிலான நிவாரணம் பொருட்கள் கொடுத்து , சுமார் ரூ 80,00,000 வரை நிவாரண பொருட்கள் மற்றும் கல்வி உதவித்தொகை வழங்க ஏற்பாடு செய்த மாணவர்களை பார்த்து நெகிழ்த்த கிராம மக்கள் மாணவர்களை கண்ணீருடன் கட்டியணைத்து வாழ்த்தினர்.இதில் நாகலாபுரம் மனோ கல்லூரி NSS திட்ட அலுவலர் பேராசிரியர் எஸ்.சுரேஷ்பாண்டி மற்றும் கல்லூரி NSS மாணவர்கள் உட்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.
சென்னை : கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டார்.…
மெல்போர்ன் : ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் கோப்பைக்கான…
சென்னை : சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் இரவு ஒரு மாணவி 2 பேரால்…
சென்னை : இன்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மூத்த தலைவர் நல்லகண்ணு அவர்களின் நூற்றாண்டு பிறந்தநாள் விழா கொண்டாடப்படுகிறது. சென்னையில்…
சென்னை : இன்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு அவர்களுக்கு நூற்றாண்டு பிறந்தநாள் விழா நிகழ்வு சென்னையில்…
மெல்போர்ன் : ரோகித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட…