தூத்துக்குடியில் 6 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமைக்கு செய்து எரிக்க முயன்ற சிறுவன்!
தூத்துக்குடியில் 6 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கி செய்து செய்து, உடலை மண்ணெண்ணெய் ஊற்றி எரித்து சிறுவன் கொடூர செயல்.
தூத்துக்குடி மாவட்டம் கீழத்தட்டாப்பாறை கிராமத்தை சேர்ந்த 6 வயது சிறுமி, அப்பகுதியில் உள்ள அங்கன்வாடியில் படித்து வந்தார். நேற்று இரவு சிறுமியின் பெற்றோர் வெளியே சென்றுவிட்ட நிலையில், சிறுமி மட்டும் வீட்டில் தனியாக இருப்பதையறிந்த அதே பகுதியைச் சேர்ந்த 14 வயது சிறுவன் ஒருவன் பாலியல் வன்கொடுமை செய்துள்ளான்.
இதனால் அலறிய சிறுமியின் கழுத்தை துண்டால் நெறித்துக் கொலை செய்த அவன், உடல் மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்து எரித்துள்ளான். சிறுமியின் வீட்டில் இருந்து புகை வருவதைக் கண்ட அருகிலிருந்தோர் வீட்டினுள் சென்று பார்த்தபோது, அவர் கொலை செய்யப்பட்டுக் கிடப்பது கண்டு அதிர்ச்சியடைந்து போலீசாருக்கு தகவல் அளித்தனர்.
இதையடுத்து அங்கு சென்ற போலீசார், சிறுமியின் உடலை பிரேதபரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் கொலை செய்த சிறுவனிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.