“மீண்டும் போலீஸ் குவிப்பு” ஸ்டெர்லைட்க்கு ஆதரவாக மோதல்..!! பரபரப்பில் தூத்துக்குடி .
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கத்திற்கு தடைவிதிக்கக் கோரி குமரெட்டியார்புரம் கிராம மக்கள் மற்றும் தூத்துகுடியின் பல்வேறு பகுதி மக்கள் போராட்டம் நடத்தினர் .மே 22ஆம் தேதி மக்கள் 100வது மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கி முற்றுகை நடத்தினர்.
ஆனால் ஏற்கனவே போலீஸ் 144 தடை உத்தரவு போட்டு இருந்தார்கள்.அதை மீறி மக்கள் போலீசாரின் பேச்சை கேட்காமல் அவர்கள் தொடர்ச்சியாக தங்களது போராட்டத்தை முன்னெடுத்தனர்.அவர்களை போலீசார் தடுப்புகளை வைத்து தடுத்து பார்த்தனர். அப்போது போலீசாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.அதேபோல தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரும் நடைபெற்ற போராட்டத்தில் பொதுமக்கள்- காவல்துறை இடையே மோதல் ஏற்பட்டது. அப்போது போராட்டக்காரர்கள் போலீஸ் வேனை கவிழ்த்ததோடு, போலீஸ் மீது கல்வீசித் தாக்குதல் நடத்தி இறுதியாக கலவரமாக மாறியது.
போராட்டக்காரர்கள் மீது போலீஸ் தூப்பாக்கிசுடு நடத்தினர்.இதில் 13 உயிர் இழந்தனர்.இன்நிலையில் ஆலையை மூடகோரி தமிழக அரசு ஆணை பிறப்பித்து ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டது.அதை தொடர்ந்து இன்று வரை ஸ்டெர்லைட் ஆலை திறக்கப்பட வில்லை.
இந்நிலையில் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை ஆய்வு செய்ய தேசிய பசுமை தீர்ப்பாயம் 3 பேர் கொண்ட குழுவை அமைத்தது .அந்த குழு நேற்று தூத்துக்குடி ஆய்வுய்களை மேற்கொண்டது.அப்போது ஸ்டெர்லைட் ஆய்வு குழுவிடம் பொதுமக்கள் இரண்டாவது நாள் அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் நடைபெறும் ஆலோசனை கூட்டத்தில் தங்கள் கருத்தை தெரிவிக்கலாம் என்று மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியது.
அதை தொடர்ந்து இரண்டாவது நாளான இன்றுதேசிய பசுமை தீர்ப்பாயம் 3 பேர் கொண்ட குழு ஸ்டெர்லைட் ஆலை மற்றும் போராட்டம் நடந்த குமாரரெட்டியாபுறம் என்று ஆய்வுகளை மேற்கொண்டது.இறுதியாக தூத்துக்குடி அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் மக்கள் கருத்து கேட்பு கூட்டம் நடக்கும் இடத்துக்கு நேரடியாக வந்தது.
இந்நிலையில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக மனு கொடுக்க , புகார் அளிக்க ஆயிரக்கணக்கான பொது மக்கள் திரண்டிருந்தனர்.அப்போது தீடிரென ஸ்டெர்லைட்க்கு ஆதரவாக மனு கொடுக்க ஒரு தரப்பினர் வந்ததால் அங்கே பரபரப்பு ஏற்பட்டது.
ஒரு தரப்பினர் ஸ்டெர்லைட் வேண்டாம் என்ற பதாகைகளுடன் கோஷம் எழுப்பினர்.ஒரு தரப்பு ஸ்டெர்லைட் ஆலைக்கு ஆதரவாக ஸ்டெர்லைட் ஆலை வேண்டுமென்று மனு அளிக்க வந்தனர்.இதனால் சில நொடிகளில் இரண்டு தரப்புக்கும் மோதல் வெடித்தது. காவல்துறை ஒருவழியாக கட்டுபடுத்தி சமாளித்தனர்.இதனால் அதிக போலீஸ் குவிக்கப்பட்டு தூத்துக்குடி மீண்டும் பரபரப்பாகி உள்ளது.
DINASUVADU