தூத்துக்குடியில் தசரா திருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம். தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்த அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில், தூத்துக்குடியில், வரும் 26-ம் தேதி தசரா திருவிழாவின், முக்கிய நிகழ்வான, சூரசம்ஹாரம் நடைபெற உள்ள நிலையில், கொரோனா ச்சுறுத்தல் காரணமாக குலசேகரப்பட்டினத்தில், பக்தர்கள் இன்றி தசரா திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லப்பாண்டியனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் தாக்கம் தற்போது தமிழகம் முழுவதிலும் வேகமாக பரவி வரும் நிலையில், பல்வேறு அமைச்சர்களும் எம்எல்ஏக்களும் தான் அதிகமாக பாதிக்கப்படுகின்றனர். இந்நிலையில் முன்னாள் அமைச்சரும் அதிமுக அமைப்பு செயலாளருமாகிய சி.த.செல்லப்பாண்டியன் அவர்களுக்கு தற்பொழுது கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்புதான் தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் நடந்த பொது நிகழ்ச்சிகள் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்க கூடிய நிகழ்ச்சிகளில் பங்கேற்றுள்ளார். […]
மத்திய அரசு வாக்குறுதி அளித்தபடி உடனடியாக அருங்காட்சியகம் அமைக்க வேண்டும் என கனிமொழி கூறியுள்ளார். தூத்துக்குடியில் உள்ள ஸ்ரீவைகுண்டம் அருகே ஆதிச்சநல்லூரில் தமிழக அரசு சார்பில் தற்பொழுது ஆய்வு பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் 40 இடங்களில் நடைபெறக்கூடிய இந்த அகழ்வுப் பணிகள் இந்த மாதத்துடன் முடிவடைய உள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து அவ்விடத்தை நேரில் சென்று பார்வையிட்ட தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி மற்றும் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் வெங்கடேசன் அவர்கள் அந்த ஆய்வில் கண்டறியப்பட்ட […]
குடும்ப வறுமை காரணமாக வாழைப்பழம் விற்று பெற்றோருக்கு உதவும் 5ஆம் வகுப்பு மாணவன். தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி ஜோதிநகர் பகுதியை சேர்ந்தவர் முருகன் மற்றும் கணேஷ்வரி தம்பதி. இவர்களுக்கு முனிஸ்வரன், கோகுல் என்ற 2 மகன்கள். இதில் முனிஸ்வரன் தனியார் பள்ளியில் 5ஆம் வகுப்பு படித்து வருகிறார். முருகன் மற்று கணேஷ்வரி தம்பதி ஒப்பந்த அடிப்படையில் தீப்பெட்டி ஒட்டும் தொழில் செய்து வந்தனர். ஆனால் தற்போது, கொரோனா ஊரடங்கு காரணமாக அவர்களது தொழில் முடக்கமடைந்தது.தளர்வுகள் அளிக்கப்பட்டாலும், சில […]
சட்டம் ஒழுங்கு கோமாவில் இருக்க காரணம் அந்தந்த காவல் துறையை மாவட்டத்திலுள்ள அதிமுகவினரே கவனிப்பதால் தான் என உதயநிதி ஸ்டாலின் சாடியுள்ளார். கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள தட்டார்மடம் பகுதியை சேர்ந்த செல்வன் என்பவர் உடனான நிலத்தகராறில் அதிமுக பிரமுகர் திருமணவேலு தூண்டுதலின் பேரில் தட்டார்மடம் காவல் ஆய்வாளர் ஹரிகிருஷ்ணன் செல்வனை கடத்திக் கொலை செய்ததாக புகார் எழுந்தது.செல்வனின் கொலைக்கு நியாயம் கேட்டு அவரது குடும்பத்தினர் கடந்த 4 நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டு […]
திருச்செந்தூர் திமுக எம்.எல்.ஏ கார் உடைப்பு சம்பவம் தொடர்பாக இருவர் கைது. தூத்துக்குடி மாவட்டத்தில் தட்டார்மடம் எனும் பகுதியில் செல்வன் என்பவரின் குடும்பத்தாருக்கும் அந்த பகுதியில் உள்ள அதிமுக மாவட்ட வர்த்தக அணி செயலாளர் திருமண வேலு என்பவருக்குமான நிலத்தகராறில் இருவருக்கும் ஏற்பட்ட பிரச்சனையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு செல்வன் அடித்துக் கொல்லப் பட்டுள்ளார். இதனால் செல்வனின் குடும்பத்தார் நியாயம் கேட்டு கடந்த 4 நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் செல்வத்தின் குடும்பத்திற்கு ஆறுதல் […]
திமுக சட்டமன்ற உறுப்பினரின் கார் நள்ளிரவில் அடித்து நொறுக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி தட்டார்மடம் பகுதியை சேர்ந்த செல்வன் குடும்பத்தினருக்கும் அந்த பகுதியில் உள்ள அதிமுக மாவட்ட வர்த்தக அணி செயலாளர் திருமணவேலு என்பவருக்கும் நிலம் தொடர்பாக பிரச்சினை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் இது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு அதிமுக மாவட்ட வர்த்தக அணி செயலாளர் திருமண வேலு அவர்களின் சகோதரர் கைது செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இருதரப்பினருக்கும் ஏற்பட்ட பிரச்சனையில் உருட்டுக்கட்டையால் தாக்கி பிரச்சினைகள் எழுந்துள்ளது. இதில் […]
முதன்முறையாக ஆதிச்சநல்லூர் அகழாய்வில் குழந்தையின் எலும்புக்கூடு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் தாமிரபரணி அருகேயுள்ள வரலாற்று சிறப்புமிக்க இடமாகிய ஆதிச்சநல்லூரில் கடந்த பல மாதங்களாக அகழாய்வு பணி நடைபெற்று வருகிறது. இதில், முன்னோர்கள் பயன்படுத்திய பொருள்கள், கட்டிடங்கள் அவர்களின் எலும்புக்கூடுகள் என பல தொல்லியல் பொருட்கள் கிடைத்துள்ளன. இந்நிலையில், முதன்முறையாக ஆதிச்சநல்லூர் அகழாய்வில் குழந்தையின் எலும்பு கூடு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. குழந்தையின் எலும்பு குறித்த ஆய்வுகள் நடைபெற்றுவருகிறது.
ரவுடியை பிடிக்கச் சென்ற போது வெடிகுண்டு வீசி கொல்லப்பட்ட தூத்துக்குடி போலீஸ் சுப்பிரமணியனின் குடும்பத்திற்கு தென்மண்டல காவல்துறையினர் சார்பில் 86 6.50 லட்சம் நிதி உதவி. தூத்துக்குடி மாவட்டம் வல்லநாடு அருகே உள்ள மணக்கரை மலையடிவாரத்தில் பதுங்கி இருந்த பிரபல ரவுடியான துரைமுத்து என்பவரை கடந்த 18ம் தேதி தனிப்படை போலீசார் பிடிக்க சென்றனர். அப்போது மறைத்து வைத்திருந்த நாட்டு வெடிகுண்டை போலீசார் மீது ரவுடி துரைமுத்து வீசினார். இந்த சம்பவத்தில் போலீசார் சுப்பிரமணியன் அவர்கள் உயிரிழந்துள்ளார், […]
தூத்துக்குடியில் உள்ள நீர்வரத்து ஓடையில் கிராம மக்களே நிதி திரட்டி தூர்வாரும் பணிகளை தொடங்கியுள்ளனர். தூத்துக்குடியில் கோவில்பட்டிக்கு அருகே உள்ள அய்யனேரி கிராமத்துக்கு உட்பட்ட செவல்குளம் கண்மாயில் சுமார் 30 ஆண்டுகளுக்கு மேலாக தண்ணீர் வராமல் உள்ளது.சுமார் 130 ஏக்கர் பரப்புடைய இந்த கண்மாய் ஓடை தூர் வாராமல் உள்ள காரணத்தால் நீர்வரத்து நின்றதாகவும், எனவே பெரிய ஓடைகளை தூர் வாரி , கரைகளை பலப்படுத்துமாறு மக்கள் கோரிக்கை விடுத்தனர். தற்போது தூத்துக்குடியில் அய்யனேரி, பிள்ளையார்நத்தம், வெங்கடாசலபுரம் […]
தூத்துக்குடியில் 14 கண்மாய்கள் 7 கோடியில் தூர் வாரி சீரமைப்பு பணிகளை துவக்கி வைத்தார் மாவட்ட ஆட்சியர். தூத்துக்குடி மாவட்டம் புதுக்கோட்டை அருகே உள்ள குலையன்கரிசல் பொட்டை குளத்தின் இந்திய ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் சமூகப் பொறுப்பு நிதியில் 20 லட்சம் செலவில் தூர் வாரி கரைகளை பலப்படுத்த கூடிய பணிகளை தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி அவர்கள் தொடங்கி வைத்துள்ளார். அதன் பின்பு செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய அவர் தூத்துக்குடியில் தென்மேற்கு பருவமழை காலத்தில் […]
தூத்துக்குடி மாவட்டத்தில் தனியார் தொழிற்சாலைக்காக எரிவாயு பதிக்கும் பணிகளில் ஈடுபட்ட அதிகாரிகளை தடுத்து நிறுத்தி விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். நாகப்பட்டினத்திலிருந்து கடலோர மாவட்டங்கள் வழியாக தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள தனியார் தொழிற்சாலைக்கு ஐசிஓஎல் எனும் நிறுவனம் சார்பில் எரிவாயு குழாய் பதிக்கும் பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது. இதன் இறுதிகட்ட பணிகள் தூத்துக்குடி மாவட்டத்தின் குலையன்கரிசல், பொட்டல்காடு உள்ளிட்ட சுற்று வட்டார கிராம பகுதிகளில் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் விவசாய நிலங்கள் வழியாக குழாய் பதித்ததற்கு முதலில் பேசியபடி விவசாயிகளுக்கு […]
ஸ்டெர்லைட் வழக்கில் உயர்நீதிமன்ற தீர்ப்பு அதிர்ச்சியளிக்கிறது என்று ஸ்டெர்லைட் ஆலை சிஇஓ பங்கஜ்குமார் தெரிவித்துள்ளார். வேதாந்த நிறுவனம் ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது, ஆலையை திறக்க அனுமதியில்லை என்றும் வேதாந்தா நிறுவனத்தின் கோரிக்கையை நிராகரித்து மனுவை தள்ளுபடி செய்தது சென்னை உயர்நீதிமன்றம். இந்நிலையில் ஸ்டெர்லைட் ஆலை சிஇஓ பங்கஜ்குமார் தூத்துக்குடியில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.அப்பொழுது அவர் பேசுகையில், ஸ்டெர்லைட் வழக்கில் உயர்நீதிமன்ற தீர்ப்பு அதிர்ச்சியளிக்கிறது. உறுதுணையாக […]
துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர்களின் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி. தூத்துக்குடியில் வேதாந்த நிறுவனத்துக்கு சொந்தமான ஸ்டெர்லைட் ஆலையால் ஏற்படும் பாதிப்பால், தூத்துக்குடி மக்கள் இந்த ஆலையை நிரந்தரமாக மூடக் கோரி போராட்டம் நடத்தினர். கடந்த 2018 ஆம் ஆண்டு மே 22-ஆம் தேதி நடந்த போராட்டத்தில் காவல்துறை நடத்திய தூப்பாக்கி சூட்டில், 13 பேர் உயிரிழந்தனர். இந்நிலையில், வேதாந்த நிறுவனம் ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கின் விசாரணை இன்று நடைபெற்றது. […]
ஸ்டெர்லைட் ஆலை வழக்கில் இன்று தீர்ப்பு. கடந்த 2018-ம் ஆண்டு தூத்துக்குடியில் உள்ள நச்சு ஆலையான ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தில், 13 அப்பாவி மக்கள் சுட்டு கொல்லப்பட்டனர். இந்நிலையில், சென்னை உயர்நீதிமன்றத்தில், தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதிக்க கோரிய வழக்கில், 39 நாட்கள் வழக்கு விசாரிக்கப்பட்டு வாதங்கள் உடைந்த நிலையில், டி.எஸ்.சிவஞானம், வி.பவானி சுப்பராயன் அமர்வு இன்று தீர்பளிக்கிறது. இந்நிலையில், அசம்பாவிதங்களை தவிர்க்க தூத்துக்குடி முழுவதும் 1,000-க்கும் மேற்பட்ட […]
என்னை திமுகவிலிருந்து எவராலும் பிரிக்க முடியாது என்று சட்டமன்றஉறுப்பினர் அனிதா ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக திருச்செந்தூர் சட்டமன்ற உறுப்பினறும், தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளருமான அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த சில நாட்களாக சில சமூக விரோதிகள் எனது நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் சமூக வலைதளங்களில் என்னை பற்றி அவதூறு செய்திகளை பரப்பி வருகின்றனர். அந்த அற்பர்களுக்கு எனது கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன். நான் திராவிட முன்னேற்றக் கழகத்தின் […]
தூத்துக்குடி முதல் பெங்களூரு இடையேயான விமான சேவை நாளை மறுநாள் முதல் மீண்டும் துவங்கப்படுகிறது. கொரானா வைரஸ் தாக்கத்தால் உலகம் முழுவதுமே உருக்குலைந்த நிலையில் காணப்படுகிறது. இதனால் இந்தியாவில் கடந்த நான்கு மாதங்களாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட நிலையில் உள்ளது. தன்னால் விமான சேவைகள், பேருந்துகள், பள்ளி கல்லூரிகள் அனைத்துமே செயல்படாமல் உள்ளது. தற்பொழுது தான் அரசு சில தளர்வுகளை கொடுத்து வருகிறது. விமான சேவைகள் அருகில் உள்ள இடங்களுக்கு மட்டுமே அனுமதி கொடுக்கப்பட்டு கொண்டு இருந்தது நிலையில், […]
தூத்துக்குடி வ.உ.சி கல்லூரி குறித்து அவதூறான ஆடியோ வெளியிட்டவர் கைது. தூத்துக்குடி வ.உ.சி கல்லூரி குறித்து, முடிவைத்தானேந்தல் கிராமத்தை சேர்ந்த, கல்முருகன் என்ற வேல்முருகன் அவதூறான ஆடியோ ஒன்றை இணையத்தில் வெளியிட்டுள்ளார். அந்த ஆடியோவில் கல்முருகன், வ.உ.சி கல்லூரி நிர்வாகத்தை கண்டித்து பேசியுள்ளார். மேலும், அந்த ஆடியோவில், இந்த கல்லூரியில் தங்கள் சாதி மாணவர்கள் மட்டுமே படிக்க வேண்டும் என்றும், மற்ற சாதி மாணவர்கள் எல்லாம் ஏன் வருகிறீர்கள் என்றும் இழிவுபடுத்தும் விதத்தில் பேசியுள்ளார். இவர் பேசிய […]
ஜெயராஜ்-பென்னிக்ஸ் குடும்பத்திற்கு சென்னை தலைமை செயலகத்தில் அரசு பணிநியமன ஆணை வழங்கினார் தமிழக முதல்வர். சாத்தான்குளம் பகுதியில் வசித்து வந்த தந்தை ஜெய்ராஜ், மகன் பென்னிக்ஸ் இருவரும் காவல்துறையினரால் தாக்கப்பட்டு உயிரிழந்தனர். இவர்களது மரணம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இவர்களது மரணத்திற்கு காரணமான காவல்துறையினர் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில், இவர்களது குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும் என தமிழக முதல்வர் அறிவித்திருந்த நிலையில், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, ஜெயராஜ்-பென்னிக்ஸ் குடும்பத்திற்கு […]
பென்னிக்ஸ்-ஜெயராஜ் இல்லத்தில் இரண்டு மணி நேரம் விசாரணை. சாத்தான்குளத்தில், தந்தை ஜெயராஜ் மற்றும் மகன் பென்னிக்ஸ் இருவரும் காவலர்களால் சிறையில் அடித்து கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இந்த சம்பவம் தொடர்பான போலீசாரும் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக, சாமதுரை, செல்லத்துரை, வெயிலுமுத்து ஆகிய மூன்று பேரை காவலில் எடுத்துள்ள சிபிஐ அதிகாரிகள் அவர்களை சாத்தான்குளம் காவல் நிலையத்திற்கு கொண்டு வந்து 4 மணி நேரத்திற்கு மேலாக விசாரணை மேற்கொண்டனர். இதனை தொடர்ந்து […]