கோவில்பட்டியிலுள்ள தனியார் தீப்பெட்டி தொழிற்சாலையில் பயங்கரமான தீ விபத்து ஏற்பட்டுள்ளது. கோவில்பட்டியிலுள்ள வள்ளுவர் நகர் பகுதியில் இயங்கி வந்த தனியார் தீப்பெட்டி தொழிற்சாலையில் இன்று மதியம் பயங்கரமான தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த தீ விபத்தில் அந்த தொழிற்சாலையில் பணியாற்றிய ஒருவர் காயமடைந்துள்ளதாகவும், அவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தீப்பெட்டி தயாரிக்க பயன்படும் இயந்திரங்கள் இந்த தீயில் எரிந்து நாசமாகியுள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த சம்பவம் தொடர்பாக தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து, அவ்விடத்திற்கு […]
பனிமயமாதா கோவில் திருவிழாவை முன்னிட்டு தூத்துக்குடியில் இன்று உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். தூத்துக்குடி பனிமய மாதா பேராலய திருவிழா ஆண்டுதோறும் ஜூலை 26-ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 5-ஆம் தேதி வரை நடைபெறுவது வழக்கம். இந்த விழாவில் வெளி மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து லட்சக்கணக்கான மக்கள் கலந்து கொள்வதுண்டு. இந்த நிலையில், கொரோனா பரவல் காரணமாக கடந்த ஆண்டு பக்தர்கள் இன்றி இந்த விழா நடைபெற்றது. அதே போல இந்த […]
பக்தர்கள் இன்றி நடைபெற்ற தூத்துக்குடி பனிமய மாதா ஆலய கொடியேற்றம். தூத்துக்குடி பனிமய மாதா பேராலய திருவிழா ஆண்டுதோறும் ஜூலை 26-ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 5-ஆம் தேதி வரை நடைபெறுவது வழக்கம். இந்த விழாவில் வெளி மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து லட்சக்கணக்கான மக்கள் கலந்து கொள்வதுண்டு. இந்த நிலையில், கொரோனா பரவல் காரணமாக கடந்த ஆண்டு பக்தர்கள் இன்றி இந்த விழா நடைபெற்றது. அதே போல இந்த ஆண்டும் அரசு அறிவித்துள்ள நெறிமுறைகளின்படி […]
தூத்துக்குடி பனிமயமாதா பேராலயத்தில் 438-ஆம் ஆண்டு திருவிழா வரும் 26-ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்க உள்ளது. தூத்துக்குடியில் பனிமயமாதா பேராலய திருவிழாவானது மிகவும் கோலாகலமாக கொண்டாடப்படுவதுண்டு. வெளி மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்தும் கூட இந்த விழாவில் கலந்து கொள்ள மக்கள் வருவதுண்டு. இந்நிலையில், கடந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக, இந்த திருவிழா பக்தர்கள் அனுமதியின்றி நடைபெற்றது. இந்நிலையில், தற்போது தொற்று பாதிப்பு குறைந்துள்ளதையடுத்து, தமிழகத்தில் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, தூத்துக்குடி பனிமயமாதா […]
தூத்துக்குடி உப்பாற்று ஓடையில் கொட்டப்பட்டுள்ள ஸ்டெர்லைட் ஆலை கழிவுகளை விற்க உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தடை விதித்துள்ளது. தூத்துக்குடி மாவட்டம் புதுக்கோட்டை பகுதியை சேர்ந்த காந்திமதிநாதன் என்பவர் கடந்த 2018 ஆம் ஆண்டு உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் பொதுநல மனுவினை தாக்கல் செய்திருந்தார்.அம்மனுவில்,”தூத்துக்குடி மாவட்டம் புதுக்கோட்டை தாலுகாவில் உப்பாற்று ஓடை உள்ளது.இந்த ஓடைக்கு அருகே ஸ்டெர்லைட் ஆலை கழிவுகள் மலைபோல் குவித்து வைக்கப்பட்டுள்ளது. இதனால் கடந்த 2016 அக்டோபர் மற்றும் 2015 நவம்பர் மாதங்களில் உப்பாற்று ஓடையில் வெள்ளப்பெருக்கு […]
தூத்துக்குடி மாவட்டத்தில் பராமரிப்பு பணிகளுக்காக நாளை பல இடங்களில் மின்தடை ஏற்படுகிறது. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள உயர் அழுத்த மின் பாதைகளில் பழுதுகள் சீரமைத்தல் மற்றும் சாய்ந்துள்ள நிலையில் மின் கம்பங்கள் சரி செய்தல்உள்ளிட்ட பணிகள்மேற்கொண்டு வருவதால் நாளை தூத்துக்குடியில் சில இடங்களில் மின்தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி நாளை காலை 9 மணி முதல் நண்பகல் 12 மணி வரை, முத்தையாபுரம், தோப்பு தெரு , கிழக்கு தெரு, வடக்கு தெரு, தெற்கு தெரு, […]
தூத்துக்குடி மாவட்டம் தாளமுத்து நகரிலுள்ள இலங்கை அகதிகள் முகாமில் திமுக எம்.பி கனிமொழி ஆய்வு மேற்கொண்டுள்ளார். தூத்துக்குடி மாவட்டம் தாளமுத்துநகரிலுள்ள இலங்கை அகதிகள் முகாமில் திமுக மகளிரணி செயலாளர் கனிமொழி எம்.பி நேரடியாக சென்று ஆய்வு மேற்கொண்டுள்ளார். இந்த ஆய்வின் பொழுது அவருடன் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில் ராஜ் மற்றும் திமுக நிர்வாகிகள் பலர் சென்றுள்ளனர். திமுக எம்.பி கனிமொழி தங்கள் முகாமிற்கு வருகை தருவதை கண்ட மக்கள் மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அனைவரிடமும் நலம் […]
தூத்துக்குடி மாவட்டத்தில் பணம் வைத்து சூதாடிக் கொண் 4 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று தென்பாகம் போலீஸ் சப்இன்ஸ்பெக்டர் சிவக்குமார் ரோந்து பணியில் ஈடுபட்டுக்கொட்டிருந்தார். அப்போது தூத்துக்குடி போல்டன்புரத்தை சேர்ந்த ஜேசுராஜ், திலீப்குமார், மாரிமுத்து செல்சினி காலனியை சேர்ந்த சந்தியாகு, ஆகியோர் பணம் வைத்து சூதாடிக் கொண்டிருந்தனர். அப்போது சப்இன்ஸ்பெக்டர் சிவக்குமார் அவர்கள் சூதாட்டம் விளையாடி வந்தது தெரிய வந்தது. உடனடியாக அவர்கள் 4 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து […]
கொரோனா வைரஸ் பாதித்ததால் உறவினர்கள் முன்வந்து உதவாத சூழ்நிலையில் திருநங்கை கலைக்குழுவை சேர்ந்த சமீரா எனும் திருநங்கை கர்ப்பிணிப் பெண்ணிற்கு உதவியுள்ளார்.அந்த பெண்ணிற்கு பெண் குழந்தையும் பிறந்துள்ளது. கொரோனா வைரஸின் தீவிரம் தற்போது மிக அதிகமாக பரவி வரும் நிலையில் உறவுகள் என்ற நிலையையும் கடந்து பலர் தங்களது சொந்தப் பிள்ளைகள் மற்றும் பெற்றோர்களுக்கு கூட உதவ தயக்கம் காட்டுகின்றனர். தங்களுக்கு கொரோனா தொற்று பரவி விடுமோ என்ற அச்சத்தில் கொரோனாவால் பாதித்தவர்கள் அருகில் செல்வதற்கு குடும்பத்தினரே […]
தூத்துக்குடியில் கரும்பூஞ்சை நோய்க்கு தொழிலாளி பலியாகவில்லை என்று மருத்துவக் கல்லூரி முதல்வர் விளக்கமளித்துள்ளார். தூத்துக்குடி,கோவில்பட்டியைச் சேர்ந்த வெல்டிங் தொழிலாளி சவுந்தர்ராஜன்(57) என்பவர் கொரோனா அறிகுறிகள் காரணமாக தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.அங்கு பரிசோதனை செய்ததில் அவருக்கு கொரோனா நெகடிவ் என வந்தது.இருப்பினும் உடல்நிலைமிகவும் மோசமாக இருந்ததன் காரணமாக சிகிச்சை பலனின்றி சவுந்தர்ராஜன் உயிரிழந்தார். இது குறித்து சவுந்தர்ராஜனின் மகன் விஜயராஜ் கூறுகையில்,”எனது தந்தைக்கு கண்களில் வீக்கம், தானாக நீர் வடிதல்,பார்வை குறைவு பிரச்னைகள் ஏற்பட்டது.உடனே சிடி […]
தூத்துக்குடியில் உள்ள வேதாந்தா ஸ்டெர்லைட் ஆலையில் உற்பத்தி செய்யப்பட்ட 6.34 டன் ஆக்சிஜன் தற்போது தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்தியா முழுவதிலும் கொரோனா வைரஸ் தாக்கம் மிக அதிகமாக பரவி வரும் நிலையில், இவற்றை கட்டுப்படுத்துவதற்காக மத்திய மாநில அரசுகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மக்கள் பல இடங்களில் ஆக்சிஜன் மற்றும் மருத்துவமனையின் அத்தியாவசிய வசதிகள், மருந்துகள் இல்லாமல் தவித்து வருகின்றனர். குறிப்பாக ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக பலர் […]
வேலைக்கு செல்லவில்லை எனும் காரணத்தால் தன் வீட்டில் தங்கியிருந்த 70 வயது தாயை தன் மனைவியுடன் சேர்ந்து கொல்ல முயன்ற நபரை எட்டயபுரம் போலீசார் கைது செய்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் அருகே உள்ள மெட்டில்பட்டி மேட்டு தெருவைச் சேர்ந்த கிருஷ்ணன் என்பவரின் மனைவிதான் மகாலட்சுமி. இவருக்கு தற்போது 70 வயது ஆகிறது. கடந்த இரு ஆண்டுகளுக்கு முன்பாகவே கிருஷ்ணன் உடல் நலக்குறைவால் உயிரிழந்தார். இதனை அடுத்து தனது மகன் முருகேசன் என்பவரின் வீட்டில் மகாலட்சுமி இருந்து […]
தூத்துக்குடி ஸ்டெர்லைட் துப்பாக்கி சூடு குறித்த தனது கருத்திற்கு எந்த ஆதாரமும் தன்னிடம் இல்லை என நடிகர் ரஜினிகாந்த் அவர்கள் தெரிவித்துள்ளார். ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி தூத்துக்குடியில் நடந்த போராட்டத்தின் போது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டு, 13 பேர் உயிரிழந்த சம்பவம் தூத்துக்குடியில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இது தொடர்பாக நீதி விசாரணை நடத்துவதற்காக ஓய்வு பெற்ற தமிழக அரசு நீதிபதி அருணா ஜெகதீசன் அவர்கள் தலைமையில் ஒரு நபர் விசாரணை கமிஷன் அமைத்து உத்தரவிடப்பட்டது. இந்த […]
தூத்துக்குடியில் பெருமாள் கோவிலுக்கு குடும்பத்துடன் சென்று இருந்த ஸ்டாலின் அவர்களின் மனைவியிடம் மூதாட்டி ஒருவர் உங்கள் வீட்டில் உள்ளவர்கள் கோவிலுக்கு செல்வார்களா என கேள்வி எழுப்பியதற்கு ஸ்டாலினுக்கு பெருமாள் மீது நம்பிக்கை உள்ளது எனவும் அவர் கோவிலுக்கு வருவார் எனவும் துர்கா ஸ்டாலின் பதிலளித்து சென்றுள்ளார். திமுக தலைவர் ஸ்டாலின் அவர்கள் நேற்று முன்தினம் தூத்துக்குடி மாவட்டத்தில் களக்காடு பகுதியில் பிரச்சாரம் செய்தார். பிரச்சாரம் முடிந்து அவரது மனைவி துர்கா ஸ்டாலின் மற்றும் உடன் சென்று இருந்தவர்களுடன் […]
தூத்துக்குடியில் கடந்த ஒரு வாரமாக பெய்த கனமழை காரணமாக பல்வேறு இடங்களில் குடியிருப்பு பகுதிகளுக்குள் வெள்ளம் சூழ்ந்துள்ளதால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர். தூத்துக்குடியில் கடந்த சில தினங்களாக விடாது கொட்டி தீர்த்த கனமழையால் பல இடங்களில் உள்ள மக்கள் வெள்ளத்தில் சிக்கியுள்ளனர். மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேற முடியாமல் அவதிப்படுவதுடன், பலரது குடியிருப்புகளுக்குள் வெள்ளம் சூழ்ந்துள்ளதால் மக்கள் உறங்குவதற்கு கூட இடமின்றி தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், முத்தம்மாள் காலணியிலுள்ள குடியிருப்புகளில் வசிக்கும் மக்கள் வெளியேறுவதற்கு படகுகளை […]
படிக்கும் அறையை படுக்கை அறையாக மாற்றிய சிறுமி அப்பாவாகிய 17 வயது சிறுவன் போக்ஸோ சட்டத்தில் கைது. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஸ்ரீவைகுண்டம் பகுதியை பூர்வீகமாகக் கொண்ட 17 வயதான சிறுவன் கோவையில் உள்ள கோணவாய்க்கால் பாளையம் பகுதியில் தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வந்துள்ளார். இந்த சிறுவனுக்கும் அதே பகுதியை சேர்ந்த பத்தாம் வகுப்பு மாணவி ஒருவருக்கும் பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் காதலாகி உள்ளது. சிறுவர்களாக இருந்தாலும் இருவரும் காதலித்து வந்துள்ளனர், மாணவியின் பெற்றோர் […]
தூத்துக்குடியில் 12 இடங்களில் தீங்கு விளைவிக்கும் உலோகம் உள்ளது இன்று தூத்துக்குடி வரும் முதல்வர் இது குறித்து ஆலோசிப்பாரா என கனிமொழி கேள்வி எழுப்பியுள்ளார். நேற்று கன்னியாகுமரியில் நடத்திய ஆய்வினை தொடர்ந்து இன்று தூத்துக்குடியில் கொரோனா தடுப்பு பணிகள் மற்றும் வளர்ச்சி பணிகள் குறித்து ஆய்வு செய்வதற்காக முதல்வர் இன்று தூத்துக்குடி வருகிறார். இந்நிலையில் முதல்வருக்கு திமுக மக்களவை எம்.பி கனிமொழி ட்விட்டரில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் தூத்துகுடியிலுள்ள 12 இடங்களில் மனிதன் மற்றும் விலங்குகளுக்கு […]
தூத்துக்குடியில் பாலத்தில் சென்று கொண்டிருந்த லாரி மருத்துவமனை வளாகத்தில் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தில் இருந்து காய்கறிகளை ஏற்றிக் கொண்டு தூத்துக்குடி காய்கறி மார்க்கெட்டிற்கு லாரி ஒன்று வந்துள்ளது . ராமமூர்த்தி என்பவருக்கு சொந்தமான லாரியை ரமேஷ் குமார் என்பவர் ஒட்டியுள்ளளார் . மேலும் லாரியின் கிளீனராக லட்சுமணன் என்பவரும் உடன் இருந்துள்ளார் . இந்த நிலையில் இன்று அதிகாலையளவில் லாரியானது தூத்துக்குடி காய்கறி மார்க்கெட்டிற்கு வர புதிய பேருந்து நிலையம் அருகிலுள்ள பாலத்தில் […]
தூத்துக்குடி ஸ்ரீவைகுண்டத்தில் உள்ள டீ கடையில் நின்றுகொண்டிருந்த பாஜக பிரமுகர் வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளார். தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஸ்ரீவைகுண்டத்தில் அமைப்பு சாரா பாஜக கட்சியின் செயலாளராக பதவியில் உள்ளவர் தான் ராமதாஸ். இவர் ஸ்ரீவைகுண்டம் தென்திருப்பேரையில் உள்ள டீ கடை ஒன்றில் நின்றுகொண்டிருந்த போது, அங்கு வந்த இசக்கி எனும் 21 வயதுடைய இளைஞர் அவரை வெட்டி கொலை செய்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக ஸ்ரீவைகுண்டம் டிஎஸ்பி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பிரதமர் மோடி மனதின் குரல் என்னும் 70வது மன் கி பாத் நிகழ்ச்சியில் நேற்று உரையாற்றினார். மன் கி பாத் நிகழ்ச்சியில் பண்டிகை காலம் மற்றும் உள்ளூர் உற்பத்தி பொருட்களை வாங்குவது, கொரோனாத் தொற்று போன்றவைகள் குறித்து பிரதமர் மோடி பேசினர். மேலும் மன் கி பாத் நிகழ்ச்சியில் தமிழகத்தின் தூத்துக்குடியில் சலூன் கடையில் நூலகம் நடத்தி வருகின்ற பொன் மாரியப்பனுடன் நேடியாக பிரதமர் மோடி உரையாடினார். அந்த உரையாடலில் வணக்கம் நல்லா இருக்கீங்களா? என பேசிய […]