தமிழக அரசு தொடர்ந்து தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் மக்களை ஏமாற்றி வருவதாக கூறி, அதனை கண்டித்து, தூத்துக்குடி கலெக்டர் அலுவலகம் முன், பொது மக்களுக்கு அல்வா கொடுக்கும் நூதன போராட்டத்தில் இந்து தேசிய கட்சியினர் ஈடுபட்டனர். தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் முன்பு, தமிழக அரசு தொடர்ந்து தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் மக்களை ஏமாற்றி வருவதாக கூறி, அதனை கண்டித்து, பொது மக்களுக்கு அல்வா கொடுக்கும் நூதன போராட்டத்தில் இந்து தேசிய கட்சியினர் ஈடுபட்டனர். தமிழகத்தை ஆளுகின்ற […]
தாளமுத்து நகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இரு சக்கர வாகனத்தை எரித்து சேதப்படுத்திய 2 பேர் கைது. தூத்துக்குடி மாவட்டம், முதுகிருஷ்ணாபுரத்தை சேர்ந்த சரவணன் (44), த/பெ. என்பவர் தாளமுத்துநகரில் உள்ள தனது நண்பர் மாரியப்பன் என்பவரின் பாட்டி இறந்ததற்கு துக்கம் விசாரிக்க நேற்று (23.01.2022) சென்றுள்ளார். அப்போது மாரிமுத்து (32) என்பவர் குடிபோதையில் சரவணனிடம் தகராறு செய்துள்ளார். அப்போது மாரிமுத்துக்கு ஆதரவாக அவரது நண்பரான தங்கராஜ் (29), என்பவரும் சரவணனுடன் தகராறு செய்து, தாளமுத்து […]
தூத்துக்குடி ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பான 35ஆம் கட்ட விசாரணை இன்று தொடங்கியது. தூத்துக்குடியில் கடந்த 2018-ம் ஆண்டு மே மாதம் 22-ம் தேதி நடைபெற்ற துப்பாக்கி சூடு சம்பவங்களில் 13 பேர் உயிரிழந்தனர். இது தொடர்பாக உயர்நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான ஒருநபர் விசாரணை ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது. ஆணையத்தின் 34-வது கட்ட விசாரணை கடந்த ஆண்டு தொடங்கியது. இதில் ஆஜராகி சாட்சியம் அளிக்க 9 பேருக்கு சம்மன்அனுப்பப்பட்டிருந்தது. […]
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் தரிசனம் செய்ய நாளை முதல் நேரக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது என கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது. கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் நாளை முதல் காலை 5 மணியில் இருந்து இரவு 7 மணி வரை மட்டுமே பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதி வழங்கப்டுகிறது. தங்கத்தேர் வலம் நிகழ்ச்சியும் ரத்து செய்யப்பட்டுள்ளது. திருச்செந்தூர்கோயிலில் பக்தர்கள் தரிசனம் செய்யும் நேரம் 3 மணி நேரம் குறைக்கப்பட்டுள்ளது. மார்கழி மாதம் என்பதால் […]
தூத்துக்குடி:திருச்செந்தூர் முருகன் கோயில் கடற்கரையில் இன்றும், நாளையும் பக்தர்கள் புனித நீராட தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் ஒமைக்ரான் வைரஸ் நாளுக்கு நாள் அதிகமாக பரவி வரும் நிலையில் பல மாநிலங்களில் இரவு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு வருகிறது. அதே நேரத்தில்,புத்தாண்டு தினக் கொண்டாட்டத்தில் மக்கள் கூட்டம் அதிகரித்து கொரோனா பரவல் சற்று அதிகரிக்க வாய்ப்புள்ளது என்பதன் காரணமாக கூடுதல் கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில்,தமிழகத்தில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில்,கடற்கரைகளில் இன்று இரவு பொதுமக்கள் […]
ஸ்டெர்லைட் ஆலை ஊழியர்கள் மீது பதியப்பட்ட வழக்கு ரத்து செய்யப்படுவதாக உயர்நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவு. தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை ஊழியர்கள் மீதான வழக்குகளை ரத்து செய்து உயர்நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவிட்டது. ஆலையில் தொடர்ந்து ஆக்சிஜன் தயாரிக்க அனுமதி கோரி போராட்டத்தில் ஈடுபட்ட ஊழியர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்ட நிலையில், ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்படக்கூடாது என்ற நோக்கத்தில் போராட்டம் நடைபெற்றதாக ஸ்டெர்லைட் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், ஸ்டெர்லைட் ஆலை […]
தூத்துக்குடி:கனமழை காரணமாக தூத்துக்குடி மாவட்டத்திலும் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில்,தமிழகத்தில் இன்று ஒரு சில மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.இதனால்,பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில்,கனமழை காரணமாக தூத்துக்குடி மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் உத்தரவிட்டுள்ளார். தமிழகத்தில் தற்போது வரை 4 மாவட்டங்களில் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.அதன்படி, பள்ளி,கல்லூரிகளுக்கு விடுமுறை: விருதுநகர், மதுரை. பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை: அதைப்போல,கனமழை காரணமாக நாமக்கல்,தூத்துக்குடி மாவட்டத்தில் […]
தூத்துக்குடி பிரையண்ட் நகர் பகுதியில் மழை வெள்ள பாதிப்புகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு செய்தார். வடகிழக்கு பருவமழை காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் பரவலாக கனமழை பெய்து வருகிறது. தூத்துக்குடி மாவட்டத்திலும் கடந்த சில தினங்களாக முன் பெய்த கனமழையால் பல்வேறு பகுதிகளில் வெள்ள நீர் தேங்கி மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக தூத்துக்குடி மாநகராட்சி, திருச்செந்தூர், காயல்பட்டினம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள குடியிருப்பு பகுதிகளில் வெள்ளநீர் சூழ்ந்து காணப்படுகிறது. மழை மற்றும் வெள்ளத்தால் […]
தூத்துக்குடி:கனமழை காரணமாக தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள வட்டம் (தாலுகா) மற்றும் மாநகராட்சிக்கு உட்பட்ட பள்ளிகளுக்கு மட்டும் இன்று (02.12.2021) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. வடகிழக்கு பருவமழை மற்றும் அந்தமானில் நிலவும் காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழ்நாடு முழுவதும் கடந்த சில நாட்களில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்தது. குறிப்பாக,தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த மாதம் 25-ஆம் தேதி பெய்த கனமழையில் பல பகுதிகளில் பாதிப்பு ஏற்பட்டது.அந்த வகையில், தூத்துக்குடி மாநகராட்சி, திருச்செந்தூர், காயல்பட்டிணம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள குடியிருப்பு […]
தூத்துக்குடியில் மழை, வெள்ளம் பாதித்த பகுதிகளில் இன்று முதல்வர் ஆய்வு மேற்கொள்ளவுள்ளார். வடகிழக்கு பருவமழை காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் பரவலாக கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் மழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை முதல்வர் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டு, அப்பகுதியில் உள்ள மக்களுக்கு நிவாரணம் வழங்கி வருகிறார். அந்த வகையில் தூத்துக்குடி மாவட்டத்திலும் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருவதால், பல்வேறு பகுதிகளிலும் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக தூத்துக்குடி மாநகராட்சி, […]
நாளை தூத்துக்குடி மாவட்ட மழை, வெள்ள சேதங்களை பார்வையிடுவதற்காக முதலமைச்சர் தூத்துக்குடிக்கு வருகிறார். வடகிழக்கு பருவமழையையொட்டி தமிழ்நாடு முழுவதும் கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளை முதலமைச்சர் நேரில் சென்று சீரமைப்புப் பணிகளைப் பார்வையிட்டு, பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கி வருகிறார். இதற்கிடையில், தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த மாதம் 25-ஆம் தேதி பெய்த கனமழையில் பல பகுதிகளில் பாதிப்பு ஏற்பட்டது. குறிப்பாக தூத்துக்குடி மாநகராட்சி, திருச்செந்தூர், காயல்பட்டிணம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள குடியிருப்பு பகுதிகளில் வெள்ள நீர் சூழ்ந்து […]
தூத்துக்குடி வட்டம் (தாலுகா) மற்றும் மாநகராட்சிக்கு உட்பட்ட பள்ளிகளுக்கு விடுமுறை கனமழை காரணமாக தூத்துக்குடி வட்டம் (தாலுகா) மற்றும் மாநகராட்சிக்கு உட்பட்ட பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது என தூத்துக்குடி மாவட்ட ஆட்சித்தலைவர் செந்தில்ராஜ் அறிவித்துள்ளார்.
சுங்கச்சாவடியில் 50% கட்டணம் வசூலிக்க உத்தரவிட நேரிடும் என உயர்நீதிமன்ற மதுரை கிளை தெரிவித்தது. தூத்துக்குடி – நெல்லை சாலையில் வல்லநாடு பாலம் கட்டியதில் முறைகேடு நடந்ததாகவும் அது குறித்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட கோரிய வழக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் பணிகள் எவ்வாறு நடைபெற உள்ளது என்பதை விட, பணிகள் முடிந்து மக்கள் பயன்பாட்டிற்கு வருவது தான் முக்கியம். 90 நாட்களில் பணிகள் முடிக்கப்படவில்லை எனில் சுங்கச்சாவடியில் […]
தூத்துக்குடியில் நாளை பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. வடகிழக்கு பருவமழை காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் தொடர் கனமழை பெய்து வருகிறது. மேலும், அடுத்த சில தினங்களுக்கு தமிழகத்தின் கடலோர மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தூத்துக்குடி மாவட்டத்தில் கன மழை நீடிப்பதால் நாளை பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார். முன்னதாக திருவாரூர் மாவட்டத்திலுள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி விமான நிலையத்தில் தனியார் விமானம் ஓன்று தரை இறங்க முடியாததால் விமானம் திருச்சிக்கு திருப்பி விடப்பட்டது. கனமழை காரணமாக தூத்துக்குடி விமான நிலையத்தில் தனியார் விமானம் ஓன்று தரை இறங்க முடியாததால் விமானம் திருச்சிக்கு திருப்பி விடப்பட்டது. திருப்பித் திருப்பி விடப்பட்ட தனியார் விமானம் பத்திரமாக திருச்சியில் தரையிறங்கியது. திருச்சிக்கு திருப்பி விடப்பட்ட விமானத்தில் சபாநாயகர் அப்பாவு பயணம் மேற்கொண்டார்.
நாளை தாமிரபரணி ஆற்றங்கரை பகுதியில் தூத்துக்குடி மக்கள் யாரும் செல்லக்கூடாது என தடை விதித்து தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் / கண்காணிப்பாளர் உத்தரவிட்டுள்ளனர். தாமிரபரணி ஆற்று பகுதிகளில் கனமழை பெய்து வருவதையடுத்து சேர்வலாறு – பாபநாசம் தாமிரபரணி ஆற்றில் நீர்ப்பெருக்கு அதிகமாகி உள்ளது. ஆதலால் சேர்வலாறு – பாபநாசம் பகுதியில் நீர் திறப்பது 15 ஆயிரம் கனஅடியாக உயர்ந்துள்ளது. இதன் காரணமாக தாமிரபரணி ஆற்றில் தற்போது வரும் 2500 கனஅடி நீரானது நாளை 15 ஆயிரம் கனஅடி […]
சூரசம்ஹாரம் விழாவையொட்டி மாவட்ட ஆட்சியர் செந்திலராஜ் தூத்துக்குடிக்கு 9 – ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவித்துள்ளார். கந்தசஸ்டியையொட்டி வருகின்ற 9 ஆம் தேதி சூரசம்ஹார விழா நடைபெற உள்ளது. இந்த விழாவிற்காக வருகின்ற 9 ஆம் தேதியை உள்ளூர் விடுமுறையாக தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில் ராஜ் அறிவித்துள்ளார். மேலும், 27 ஆம் தேதியை பணி நாளாகவும் அறிவித்துள்ளார்.
தொடர் மழை காரணமாக தமிழகத்தில் 9 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த 26 ஆம் தேதி முதல் தொடங்கியுள்ள வடகிழக்கு பருவமழை காரணமாக பல்வேறு பகுதிகளிலும் பரவலாக தொடர் மழை பெய்து வருகிறது. மேலும், தென் மேற்கு வங்கக் கடலின் மத்திய பகுதியில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி தீவிரமடைந்து வருவதால் தமிழகத்திற்கு ஆரஞ்சு அலர்டும் கொடுக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக கடலோர பகுதியை ஒட்டியுள்ள மாவட்டங்களில் தொடர்ச்சியாக மழை பெய்து வருகிறது. எனவே, […]
கந்து வட்டி வசூலிப்போர் மீது குண்டர் சட்டம் பாயும் என தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி ஜெயக்குமார் எச்சரித்தார். தூத்துக்குடி மாவட்டம் சிவஞானபுரம் வலைகுளம் கண்மாயில் 15,000 பனைவிதைகள் நடும் விழாவில் மாவட்ட எஸ்.பி ஜெயக்குமார் தொடங்கி வைத்தார். பின்னர் பேசிய மாவட்ட எஸ்.பி ஜெயக்குமார், பொதுமக்கள் அதிக அளவில் பனைமரங்கள் நடவேண்டும். மேலும், கந்துவட்டி பிரச்சினை தொடர்பாக நடவடிக்கை எடுக்க தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. கந்து வட்டி வசூலிப்போர் மீது குண்டர் சட்டம் பாயும் என எச்சரித்தார்.
வ.உ.சியின் 150 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு, தூத்துக்குடியில் உள்ள பெரிய காட்டன் சாலைக்கு வ.உ.சி சாலை என பெயர் மாற்றம் செய்யப்படவுள்ளது. கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரம் பிள்ளை அவர்களின் 150-ஆவது பிறந்தநாள் விழா செப்டம்பர் 5 ஆம் தேதி கொண்டாடப்படவுள்ளது. இதனை முன்னிட்டு தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அவர்கள் பேரவையில் புதிய அறிவிப்புகளை வெளியிட்டு உள்ளார். அதன்படி தூத்துக்குடியில் உள்ள பெரிய காட்டன் சாலைக்கு வ.உ.சி சாலை என பெயர் மாற்றம் செய்யப்படவுள்ளது. மேலும், […]