தூத்துக்குடி மாவட்டம் எப்போதும்வென்றானில் கடந்த சில வருடங்களாக இயங்கி வருகின்ற IBPL என்ற தனியார் நிறுவனமானது சரியான பாதுகாப்பில்லாத இயந்திரங்களையும், கட்டுமான அமைப்பையும் கொண்டு இயங்கி வருகின்றது.இந்நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த வே.சுடலைபாண்டி என்ற 25 வயது MBA பட்டதாரி இளைஞர் ஒருவர் இரவு வேலை பார்த்துக் கொண்டிருக்கும் போது ஏற்பட்ட விபத்து காரணமாக பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.இது போல் பல விபத்துக்கள் ஏற்பட்ட பின்னரும் இந்நிறுவனத்தின் அலட்சியப்போக்கினால் ஒரு உயிரிழப்பு நேர்ந்து விட்டது.தனியார் முதலாளிகளிடம் லஞ்சம் பெற்று தின்று […]
காயல்பட்டினத்தில் வீசிய புயல் காற்றினால் அரசு மருத்துவமனையில் பல வருடங்களாக இருந்த ஆலமரம் வேரோடு சாய்ந்தது. தூத்துக்குடியில் தொடர்ந்து பெய்து வரும் மழைக்கு பாளை ரோட்டில் உள்ள வேம்படி இசக்கியம்மன் கோவில் முன்பு உள்ள 60 ஆண்டு கால அரச மரம் இன்று அதிகாலை 5மணியளவில் வேரோடு சாய்ந்தது. அவசர உதவிக்காக: தூத்துக்குடி மாவட்ட அவசர கால செயலாக்க மையம் 24 மணி நேரம் செயல்படும். கட்டணமில்லா தொலைபேசி எண் 1077 மற்றும் 0461-2340101 என்ற எண்ணிலும் […]
துாத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகேயுள்ள திருப்புளியங்குடியை சேர்ந்த தங்கராஜ் பிரேமா தம்பதியினரின் மூன்றாவது மகள் அஜிதாபானு (19). இவர் வாகைக்குளம் ஹோலிகிராஸ் கல்லுாரியில் இசிஇ முதலாம் ஆண்டு படித்து வந்தார். இந்நிலையில் கடந்த வியாழன்று அஜீதாவுக்கு கடுமையான காய்ச்சல் ஏற்பட்டதாம். இதனால் ஊசி போட்டு விட்டு கல்லுாரிக்கு சென்றுள்ளார். மறுநாள் வெள்ளியன்று அஜீதா படிக்கும் கல்லுாரியிலிருந்து அவரது வீட்டிற்கு போன் செய்து உங்கள் மகளுக்கு காய்ச்சலால் அவதிப்படுகிறார். எனவே உடனே வந்து கூட்டி செல்லுங்கள் என கூறியுள்ளனர். […]
தென் தமிழகத்தில் கனமழை பெய்து வருகிறது இதனிடையில் தூத்துக்குடியில் கடந்த இரு நாட்களாக விடாமால் கனமழை பெய்துவருகிறது நேற்று இரவு பெய்த மாலை காற்றின் காரணமாக தூத்துக்குடியின் முக்கிய சாலைகளில் மரங்கள் சாய்ந்து விழுந்தன சத்யாநகர் பகுதியில் வீடுகளில் விழுந்த மரங்களை தீயனைப்பு துறையினர் அகற்றிவருகின்றனர் . தூத்துக்குடியில் இரவு முழுவதும் பெய்த கனமழை காரணமாக இன்று தூத்துக்குடி மாவட்ட பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை மாவட்ட ஆட்சியர் வெங்கடேஷ் அறிவித்துள்ளார் தூத்துக்குடி பற்றிய செய்துகளுக்கு தினச்சுவடு உடன் இனைதிருங்கள் […]
சாத்தான்குளம் அருகே பேக்கரி கடை உரிமையாளரை தாக்கிய பழைய இரும்பு வியாபாரி கைது செய்யப்பட்டார். துாத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே பொத்தன்காலன்விளையில் திருக்கல்யாண மாதா தேவாலயம் உள்ளது. இங்கு நாகர்கோவில் மற்றும் கேரளா பகுதிகளை சேர்ந்தவர்கள் அதிக அளவில் வந்துசெல்வர். மேலசாத்தான்குளத்தை சேர்ந்த கிறிஸ்டோபர் மகன் ஆண்டன்பி ரகாஷ்ராஜ்(36). இவர் சென்னையில் பழைய இரும்பு பொருள் வாங்கும் கடை நடத்தி வருகிறார். இந்நிலையில் நேற்றுமுன்தினம் ஆண்டன்பிரகாஷ் குடும்பத்துடன் பொத்தகாலன்விளை ஆலயத்திற்கு வந்தார். பின்னர் அருகில் உள்ள பேக்கரி […]
தூத்துக்குடி மாவட்டத்தின் பெரிய சாபக்கேடான சாகுபுரம் DCW ஆலையின் பின்புறம் உள்ள புன்னக்காயல் கடல் பகுதியில் தான் அந்த ஆலையின் கழிவுகள் கலக்கப்படுகின்றது. குறிப்பாக நேற்று தூத்துக்குடி மாவட்டத்தில் நல்ல மழை பொழிந்தது.இதனால் DCW ஆலையில் இருந்து வழக்கத்தை விட அதிக அளவு கழிவுகள் கடலில் கலக்கப்பட்டதாக அங்குள்ள மக்கள் கூறுகின்றனர்.DCW ஆலை கழிவுகளுக்கும்,இன்று புன்னக்காயல் கடல் பகுதியில் டால்பின்கள் இறந்ததற்கும் ஆலையின் கழிவுகள் தான் காரணம் என்று கூறப்படுகிறது.
வாலிநோக்கம் அரசு உப்பு நிறுவனத்தில் லாபம் குவிக்கும் ரிபைனரி பிரிவை தனியாருக்கு தாரை வார்க்கும் நிர்வாக முடிவை எதிர்த்து நேற்று ஆலை முன்பு உப்பள தொழிலாளர் சங்கம் (CITU) சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அரசு உப்பு நிறுவனத்தின் 5500 ஏக்கர் உப்பளங்களையும், தமிழக உப்பு சந்தையையும் கார்பரேட் டாடாவுக்கு தாரை வார்க்கும் திட்டமிட்ட சதியை முறியடிக்க வேண்டும் என்று ஆர்பாட்டம் (CITU) நடத்தினர்.
இந்தியாவின் முதல் திருநங்கை மருத்துவராக போகும் முதல் திருநங்கை தூத்துக்குடியை சேர்ந்த தாரிகா பானு. இவர் சென்னை அம்பத்தூர் காமராஜர் அரசினர் மகளிர் மேல்நிலை பள்ளியில் படித்தவர். தமிழ்நாட்டில் மூன்றாம் பாலினத்தவர் என்று பதிவு செய்து பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வு எழுதியது முதலில் இவர்தான். பள்ளிப்படிப்பை தொடர்ந்து இவர் மருத்துவ கல்லூரியில் சேர அனுமதி மறுக்கப்பட்டது. இதனை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதில் இடஒதுக்கீடு அடிப்படையில் மருத்துவ கல்லூரியில் இடம் வேண்டும் என கோரப்பட்டது. […]
தூத்துக்குடி மாவட்டம் கருங்குளம் ஒன்றியம் செய்துங்கநல்லூர் அருகே உள்ள விட்டிலாபுரத்தில் நெடுஞ்சாலை துறைக்கு சொந்தமான விட்டிலாபுரம் மணக்கரை சாலை உள்ளது. இந்த சாலை 3 கிலோ மீட்டர் தொலைவு கொண்டது. இந்த சாலை வழியாக முத்தாலங்குறிச்சி, இந்திரா நகர், ஆழிகுடி,பொந்தன்பொழி உள்பட பல கிராமங்களுக்கு போக்குவரத்து வசதி உள்ளது. முத்தாலங்குறிச்சியில் உள்ள சுமார் 5 செங்கல்தொழில்சாலைக்கு இந்த வழியாகத்தான் தினமும் 100க்கு மேற்பட்ட லாரிகள் சென்று வருகிறது. தினமும் டவுன் பஸ் 16 சுற்றுகளும், சுமார் 20 […]
தென் தமிழகத்தில் பிரசித்தி பெற்ற முருகன் ஆலையங்களுள் ஒன்றுதான் திருச்செந்தூர் முருகன் கோவிலாகும்.ஆனால் திருச்செந்தூர் முருகன் கோவிலில் காதுகுத்துவதற்கு ரூ.50 கட்டணம் என்று போர்டு வைத்துவிட்டு ரூ.70 கட்டணம் வசூலிக்கும் அக்கிரமம் இது பற்றி கேள்வி கேட்டால் 50ரூபாய்க்கு மட்டும் பில் தருகிறார் மீதி 20ரூபாய்க்கு தேவையில்லாத புத்தகங்களை கையில் திணிக்கும் அலுவலர் இந்த நிலையை நிர்வாகம் மாற்ற வேண்டும் என கோவிலுக்கு வரும் பக்தர்கள் முருகனிடமும் மற்றும் கோவில் நிர்வாகத்தையும் முறையிட்டு செல்கின்றனர்.
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஓட்டப்பிடாரம் ஓன்றியத்தில் ஊராட்சி செயலர்களுக்கு இளநிலை உதவியாளர் நிலை ஊதியம் கருவூலம் மூலம் வழங்கிட வலியுறுத்தி ஊரக வளர்ச்சி துறை அனைத்து சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் உள்ளிருப்பு வேலைநிறுத்தம் நடைபெற்றது.
சீனாவை பின்னுக்கு தள்ளிவிட்டு இந்தியா முந்தி செல்லஉள்ளது. உலகிலேயே சல்பர்-டை-ஆக்சைடு வாயுவை அதிகமாக வெளியிடும் நாடுகளில் இந்தியா முதலிடம் பிடிக்க போவதாக சமீபத்திய ஆய்வு தெரிவித்துள்ளது. அமெரிக்காவின் மேரிலேண்ட் பல்கலைகழகம் நடத்திய ஆய்வில் இந்த செய்தி வெளியிடப்பட்டுள்ளது. மேலும் 2007 முதல் இந்தியாவில் சல்பர்-டை-ஆக்சைடு உமிழ்வு அதிகரித்துள்ளது தெரியவந்துள்ளது. இந்தியாவில் 2012-இலிருந்து சல்பர்-டை-ஆக்சைடு உமிழ்வு அதிகரித்துள்ளது. உமிழ்வை கட்டுபடுத்த இந்தியா இதுவரை எந்தவித முயற்சியும் எடுக்கவில்லை. ஆனால் சீனா இதுவரை 75 சதவீதம்வரை சல்பர்-டை-ஆக்சைடு உமிழ்வை குறைத்துள்ளது. […]
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் வைப்பாற்றில் உள்ளுர் கட்டுமான பணிகளுக்கு மாட்டு வண்டியில் மணல் அள்ள அனுமதி கோரி வைப்பாற்றில் கட்டுமான சங்க மாவட்ட செயலாளர் மாரியப்பன் மார்க்சிஸ்ட் கட்சி விளாத்திகுளம் ஒன்றிய செயலாளர் பா.புவிராஜ் தலைமையில் காத்திருக்கும் போராட்டம் நடத்திய மாட்டு வண்டி தொழிலாளர்கள் . இப்போராட்டம் நடத்தும் தொழிலாளிகளோடு காத்திருக்கும் மார்க்சிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் அர்சுனன், மாநிலகுழு உறுப்பினர் R. மல்லிகா, சிஐடியு தலைவர்கள் ரசல், பொன்ராஜ், சக்கரவர்த்தி, முருகன் ஞானதுரை, தேவேந்திரன் உள்ளிட்டோர் […]
நாசரேத் அருகே மூக்குப்பீறி தூய மாற்கு மேல்நிலைப்பள்ளியில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது. இதில் பள்ளி தாளாளர் செல்வின் தலைமை வகித்தார். நாசரேத் இன்ஸ்பெக்டர் ரேனியஸ் ஜேசுபாதம், பயிற்சி எஸ்ஐ ரகுபதி பாலாஜி ஆகியோர் பேசினர். மேலும் பாதுகாப்பு பயணத்திற்கான உறுதிமொழி படிவத்தை பெற்றோர் மற்றும் சகோதரரிடம் கையொப்பம் வாங்கிவருமாறு அறிவுறுத்தினர். விழா முடிந்ததும் தலைமை ஆசிரியர் ஜான் செல்வராஜ் நன்றி கூறினார்.
தூத்துக்குடி மீன்வளகல்லூரி வளாகத்தில் மாணவர் சங்கம் சார்பில் ஆண்கள் தினம் கொண்டாடபடுகிறது.இதில் மாணவர் பால் நத்தானியேல் வரவேற்று பேசினார். ஆண்கள் தினம் கொண்டாடுவதின் முக்கியத்துவத்தை மாணவர் குருபிரசன்னா விளக்கி பேசினார். மாணவர் சங்க துணைத்தலைவர் ஆதித்தன் பேசினார். கல்லூரி முதல்வர் சுகுமார் தலைமை வகித்தார். இதையொட்டி, ‘இன்றைய சூழ்நிலையில் ஆண்களின் நிலை ஆளுமையா? அடிமையா?’ என்ற தலைப்பில் நடந்த சிறப்பு பட்டிமன்றம் நடைபெற்றது. இதில் பேராசிரியர் நீதிச்செல்வன் நடுவராகச் செயல்பட்டார். இதில் 2ம் ஆண்டு மாணவர் கணேஷ்குமார், முதலாம் […]
இந்திய உழவர் உழைப்பாளர் கட்சி தமிழ் விவசாயிகள் சங்க ஆலோசனைக் கூட்டம் கோவில்பட்டி பிரதான சாலையில் உள்ள தனியார் விடுதியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு சங்கத்தின் மாநிலத் தலைவர் ஓ.ஏ. நாராயணசாமி தலைமை வகித்துப் பேசினார். மாநில அமைப்பாளர் காளிராஜ், அவைத் தலைவர் வெங்கடசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில், மாவட்டச் செயலர் துரை, மாநிலத் துணைத் தலைவர் நம்பிராஜன், மாவட்டத் துணைத் தலைவர் சாமியா, மகளிரணியைச் சேர்ந்த பாப்பா மற்றும் சங்க உறுப்பினர்கள் வெள்ளத்துரை, மாரியப்பன் […]
நேற்று நள்ளிரவில் மறைந்த முன்னால் முதல்வர் ஜெயலலிதா இருந்த போயஸ் கார்டன் வீட்டில் சோதனை நடைபெற்றது, அதில் சில லேப்டப்கள், பென்டிரைவ்கள், ஜெயலலிதாவிற்கு வந்த பல கடிதங்களை பறிமுதல் செய்துள்ளதாக T.T.V.தினகரன் அவர்கள் தூத்துக்குடியில் பேட்டியில் குறிப்பிட்டார். அவர் மேலும் கூறியதாவது, இந்நிலையில் இது குறித்து T.T.V.தினகரன் தூத்துக்குடியில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், ‘மறைந்த முதல்வர் ஜெயலலிதா அவர்களின் ரூமிற்கு சோதனையிட வேண்டுமென கூறினார், நான் வாரன்ட் இருக்கிறதா என கேட்டேன், அவர்கள் இல்லை என கூறியதால் […]
தூத்துக்குடியில் voc மார்க்கெட் பிரதான சாலையில் உள்ள வீட்டிற்கு தேவையான பல பொருள்கள் விற்கும் தனியார் கடையான “ராணி ஸ்டோர்-சூப்பர் மார்க்கெட்யின்” முன்பு கேட்டு போன பொருள்களை ஒன்றுக்கு மற்றொன்று இலவசம் என கூறி அக்கடையின் ஊழியர்களை வைத்து விற்பனை செய்துள்ளது…. இதனை பற்றிய விவரம் அறியாத பொதுமக்களும் ,வாடிக்கையாளரும் அப்பொருள்களை வாங்கிக்கொண்டுதான் சென்றிருக்கின்றனர்.இந்நிலையில் இதனை கண்டறிந்த சில பொதுமக்கள் அந்த கடையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்… பின்னரே அதிகாரிகள் வந்துள்ளனர்.அந்த கடைக்கு நோட்டீஸ் அனுப்ப ஆணை […]
Thoothukudi News: மழைகாலம் தொடங்கியுள்ள நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தூத்துக்குடி மாவட்டத்தில் 24 மணி நேரமும் செயல்படும் அவசர கால மையம் ஒன்றை Thoothukudi மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தொடங்கப்பட்டுள்ளது.பொது மக்கள் மழை தொடர்பான புகார்களுக்கு 1077 என்ற எண்ணிற்கு தொடர்புகொள்ளலாம் என்றும் கூறப்படுள்ளது .மேலும் வாட்ஸ் அப் மூலம் தகவலை […]