தூத்துக்குடி ஜார்ஜ்ரோட்டில் அமைந்துள்ள புல்லுத்தோட்டம் பகுதியில் மழை பெய்து முடிந்து நான்கு நாட்கள் ஆகியும் மக்கள் வசிக்கும் பகுதியில் தேங்கி இருக்கும் மழை நீரை அகற்றுவதற்கு மாநகராட்சி நிர்வாகம் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் நோய் பரவும் அபாயம் கருதி உடனடியாக மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமாறு அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
கோவில்பட்டி அருகேயுள்ள அய்யனேரி கிராமத்தில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தின் மூலமாக அய்யனேரி, கொம்பங்குளம், பழைய அப்பனேரி,புதுஅப்பனேரி மற்றும் சித்தரம்பட்டி கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் உளுந்து, பாசி,கம்பு, மக்கச்சோளம் உள்ளிட்ட பயிர்களுக்கு 2016-17ம் ஆண்டுக்கான பயிர்காப்பீடு செலுத்தி இருந்தனர். இந்நிலையில் அய்யனேரியை தவிர மற்ற கிராமங்களுக்கு பயிர்காப்பீட்டு தொகை வழங்கப்பட்டு வருவதால், விவசாயிகளிடையே தவறான தகவல்கள் தெரிவிக்கப்படுவது மட்டுமின்றி, குழப்பம் நிலவி வருவதால் விடுபட்ட அய்யனேரி கிராமத்தை சேர்ந்த விவசாயிகளுக்கு உடனடியாக பயிர்காப்பீட்டு தொகையினை […]
கோவில்பட்டி அருகேயுள்ள கடம்பூர் பேரூராட்சி பகுதியில் சட்டமன்ற உறுப்பினர் நிதியின் கீழ சுமார் 35லட்ச ரூபாய் மதிப்பிட்டில் குடிநீர் குழாய்கள் அமைக்கும் பணியினை தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர்.செ.ராஜீ தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் முன்னாள் மத்திய அமைச்சர் கடம்பூர்.ஜனார்த்தனன், நாகராஜா, முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் பாலமுருகன், அதிமுக நகர பொருளாளார் வாசமுத்து, ராமசந்திரன், வண்டானம் கருப்பசாமி, செல்லையா, ராமமூர்த்தி உள்பட பலர் கலந்து கொண்டனர்.இதனை தொடர்ந்து அமைச்சர் செ.ராஜீ செய்தியாளர்களிடம் பேசுகையில் மறைந்த […]
10ம் வகுப்பு பொதுத் தேர்வினை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்த தூத்துக்குடி மாவட்ட ஆட்சித்தலைவர் – தூத்துக்குடி மாவட்டத்தில் 95 மையங்களில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு இன்று (16.3.2018) முதல் (20.4.2018) வரை நடைபெறுகிறது. திருச்சிலுவை பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற 10ம் வகுப்பு பொதுத்தேர்வினை மாவட்ட ஆட்சித்தலைவர் என்.வெங்கடேஷ் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:- தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று நடைபெறுகிற 10ம்வகுப்பு பொதுத்தேர்வில் 296 பள்ளிகளில் […]
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனல் மின் நிலையத்தில் பாய்லர் பழுது காரணமாக 5வது யூனிட் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனால் சுமார் 210 மெகா வாட் மின் உற்பத்தி பாதிப்படைந்துள்ளது. உடனடியாக இந்த பாய்லர் சரி செய்யும் முயற்சியில் ஈடுப்பட்டுள்ளது அனல் மின் நிலைய நிர்வாகமும்,அதன் ஊழியர்களும்,சரி செய்யப்படும் கால அளவு குறித்து இன்னும் தெரிவிக்கப்படவில்லை.
இன்று (15.3.18) காலை கோவில்பட்டி வாட்டாச்சியர் அலுவலகத்தில் காட்டு நாயக்கன் சமுகத்திற்க்கு பழங்குடியின சான்றிதழ் வழங்க கோரி காத்திருப்பு போராட்டம் நடைபெற்று வருகின்றது.இந்த போராட்டத்தில் மலைவாழ் மக்கள் நல சங்கத்தின் மாநில தலைவர் பி.டெல்லிபாபு ex.MLA, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் கே.எஸ்.அர்ஜுனன் மற்றும் மாவட்ட செயற்குழு உறுப்பினர் கே.பி பெருமாள்,மாநிலக்குழு உறுப்பினர் மல்லிகா, நகர செயலாளர் முருகன்,ஒன்றியச்செயலாளர் ஜோதிபாசு,மலைவாழ் மக்கள் நல சங்கத்தின் செயலாளர் சக்திவேல் முருகன், சிஐடியு மாவட்டகுழு உறுப்பினர் தெய்வேந்திரன் உட்பட சுமார் […]
தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூரில் ஷியான் ஹோண்டா ஷோரூம் பின்னால் ரெயில்வே ஸ்டேஷன் அருகில் 2 வயது மதிக்கதக்க சிறுவனின் நாய் கடித்த நிலையில் பிணம் காணப்பட்டது. இது சம்பந்தமாக காவல்துறையினருக்கு தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது என அப்பகுதி பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்..
ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான மக்கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் கிருஷ்ணமூர்த்தி அவர்கள் தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலை தீங்கு தொடர்பான விழிப்புணர்வு பொதுக்கூட்டத்திற்கு அனுமதி கோரி தொடர்ந்த வழக்கில் தூத்துக்குடி எஸ்.பி.யிடம் விளக்கம் கேட்டு தெரிவிக்க அரசு சம்மந்தப்பட்ட வழக்கறிஞருக்கு மதுரை உயர்நீதிமன்றகிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. ஏற்கனவே கடந்த ஜனவரி மாதம் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான மக்கள் இயக்கம் சார்பில் பள்ளி மாணவர்கள்,பெண்கள்,அ.குமாரரெட்டியார் புறம் கிராம பொதுமக்கள் இரு நாட்கள் தூத்துக்குடியில் போராட்டம் நடத்தி ,பின்னர் கைது செய்யப்பட்டனர் […]
தூத்துக்குடியிலிருந்து திருச்செந்தூர் செல்லும் சாலையில் லெவஞ்சிரம் அருகில் சோலத்தட்டை ஏற்றி வந்த மினி லாரி மின் வயரில் உரசி தீ பிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து தீயை அணைத்தனர்.உடன் பொதுமக்களும் பலர் உதவினர்.
சரக்கு லாரியில் தூத்துக்குடி அருகே தீப்பிடித்ததில் 40 டன் கோதுமை மூட்டைகளுடன், லாரி எரிந்து சேதமடைந்தது. தூத்துக்குடியில் இருந்து 40 டன் கோதுமை மூட்டைகளை ஏற்றி வந்த லாரி அருப்புக்கோட்டைக்கு புறப்பட்டது. அப்போது மதுரை தேசிய நெடுஞ்சாலையில் திடீரென லாரியின் முன்பக்க சக்கரம் வெடித்ததால் தீப்பிடித்தது. லாரியில் தீ பரவத் தொடங்கியதும், ஓட்டுநர் சாலையோரம் நிறுத்தி வைத்து அங்கிருந்து தப்பியோடி விட்டார். இதையடுத்து தூத்துக்குடியில் இருந்து வந்த தீயணைப்பு வீரர்கள் ஒரு மணி நேரம் போராடி தீயை […]
அகில இந்திய சிலம்பம் சம்மேளனம், உலக சிலம்பம் பெடரேசன் ஆகிய அமைப்புகள் இணைந்து 14வது தேசிய அளவிலான சிலம்பப் போட்டிகள் நடத்தியது. இந்தியா முழுவதிலும் இருந்து 400க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்ட இப்போட்டியில் மினி சப் ஜூனியர், ஜூனியர்,சூப்பர் சீனியர் ஆகிய பிரிவுகளில் போட்டிகள் சென்னை, மாம்பலம் அருகே உள்ள தனலெட்சுமி பொறியியல் கல்லூரியில் நடைபெற்றது. கடந்த 24ம் தேதி முதல் 26ம் தேதி வரை 3 நாட்கள் நடைபெற்ற இப்போட்டியில், தமிழகம் சார்பில் பல்வேறு […]
மார்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தூத்துக்குடி ஒன்றியச் செயலாளர் சங்கரன் அவர்களை தகாத வார்த்தைகளால் திட்டிய காவல் உதவி ஆய்வாளர் சந்திர முர்த்தியை இடை நீக்கம் செய்யக் கோரி தாளமுத்துநகர் காவல் நிலையம் இன்று நள்ளிரவு 9.30 மணிக்கு முற்றுகை நடைபெற்றது. உடனே காவல் உதவி ஆய்வாளர் சந்திர முர்த்தியை ஆயுத படைக்கு மாற்ற செய்ய போராட்டம் நள்ளிரவு நடைபெற்றது. அதன் பின்னர் எஸ்.பி மகேந்திரன் காவல் உதவி ஆய்வாளர் சந்திர முர்த்தியை ஆயுத படைக்கு மாற்றம் செய்து உத்தரவு […]
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை எதிர்த்து உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்பட்டது. தூத்துக்குடியில் செயல்பட்டு வரும் ஸ்டெர்லைட் தாமிர உற்பத்தி ஆலையினால் நிலத்தடி நீர் பாதிப்பு மக்களுக்கு கேன்சர் நோய் தாக்குவது போன்ற பல்வேறு பிரச்சனைகள் ஏற்பட்டு வருகின்றன. இந்த நிலையில் ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கம் செய்யும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தூத்துக்குடியில் நடந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் விவசாயிகள், பள்ளி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். மேலும், மக்களின் சுகாதார நலனுக்கு எதிரான ஸ்டெர்லைட் ஆலையை உடனடியாக மூட […]
தூத்துக்குடியில் 6 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கி செய்து செய்து, உடலை மண்ணெண்ணெய் ஊற்றி எரித்து சிறுவன் கொடூர செயல். தூத்துக்குடி மாவட்டம் கீழத்தட்டாப்பாறை கிராமத்தை சேர்ந்த 6 வயது சிறுமி, அப்பகுதியில் உள்ள அங்கன்வாடியில் படித்து வந்தார். நேற்று இரவு சிறுமியின் பெற்றோர் வெளியே சென்றுவிட்ட நிலையில், சிறுமி மட்டும் வீட்டில் தனியாக இருப்பதையறிந்த அதே பகுதியைச் சேர்ந்த 14 வயது சிறுவன் ஒருவன் பாலியல் வன்கொடுமை செய்துள்ளான். இதனால் அலறிய சிறுமியின் கழுத்தை துண்டால் […]
பேருந்து கட்டண உயர்வை ரத்து செய்ய வலியுறுத்தி தமிழகம் முழுவதும் போராட்டம் நடந்து வரும் வேளையில் மூன்றாவது முறையாக தூத்துக்குடி மாவட்டம் கீழ ஈரால் பகுதியில் உள்ள தொண்போஸ்கோ கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர்கள் இந்திய மாணவர் சங்க கோவில்பட்டி ஒருங்கிணைப்பாளர் சங்கரலிங்கம் மற்றும் விளாத்திகுளம் ஒருங்கிணைப்பாளர் சத்தியநாதன் தலைமையில் வகுப்பு புறக்கணிப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது.
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஜிஜி காலனி பகுதியில் உள்ள அளத்து பெரியநாயகி அம்மன் கோயில் உள்ளது. நேற்று இக்கோவிலின் கும்பாபிசேகமானது நடைபெற்றது. அப்போது கோவில் கருவறையில் உள்ள அம்மன் சிலைகளை நகட்டும் போது 1835ஆம் ஆண்டு புழக்கத்தில் இருந்த ஆங்கில அரசாங்கத்தின் பழைமையான நாணயங்கள் கண்டெடுக்கப்பட்டன.
நடிகர் ரஜினிகாந்த் நேற்று தூத்துக்குடி ரசிகர்கள் நடத்திய கூட்டத்தில் வீடியோவில் பேசினார். அதில், தமிழகத்தில் மிகப்பெரிய அரசியல் மாற்றத்தை ஏற்படுத்துவது தன் நோக்கம் என அவர் கூறியுள்ளார். மேலும், “அரசியல் என்பது சுயநலமல்ல பொதுநலம். மக்களுக்கு நல்லது செய்வது மட்டுமே நமது நோக்கம். ஆண்டவன் அளித்துள்ள வாய்ப்பை நாம் சரியாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும். நாம் அனைவரும் ஒற்றுமையாக, ஒழுக்கமாக இருக்க வேண்டும். நாம் ஒற்றுமையாக இருந்தால் எதையும் சாதிக்கலாம். தமிழகத்தில் பெரிய மாற்றத்தை கொண்டுவருவோம். குடும்பத்தை விட்டுவிட்டு […]
பாராளுமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியை செலவழித்து பல்வேறு வசதிகளை செய்ய தத்து எடுத்த கிராமத்தில் பல வசதிகளை ஏற்படுத்துவது வழக்கம்.இந்நிலையில் திமுகவின் பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி எம்.பி. தான் தத்தெடுத்துள்ள பள்ளிக்கூடத்துக்கு தன்னிடம் உள்ள 500 புத்தகங்களை நன்கொடையாக வழங்கினார். தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் தாலுகாவில் உள்ள ஸ்ரீவெங்கடேஷ்வரபுரம் என்ற கிராமத்தை திமுகவின் கனிமொழி எம்.பி. தத்தெடுத்திருந்தார்.அந்த கிராமத்துக்கும், அங்குள்ள மக்களுக்கும் தேவையான பல அடிப்படை வசதிகளை செய்தார். சில மாதங்களுக்கு முன்பு 68 ஏக்கர் நிலப்பரப்பில் உள்ள […]
தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டத்தில் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி வழங்கக்கோரி உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டது. தூத்துக்குடியில் ஜல்லிக்கட்டு நடந்ததில்லை எனக் கூறி மாவட்ட ஆட்சியர் அனுமதி வழங்கவில்லை என அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. நீதிபதி பாரதிதாசன் முன்பு நடந்த இந்த வழக்கின் விசாரணையின்போது ஆஜரான அரசுத்தரப்பு வழக்கறிஞர், தமிழகத்தில் சில இடங்களில் முறையான அனுமதியின்றி ஜல்லிக்கட்டு நடத்தப்படுவதாக தெரிவித்தார். இதனைக் கேட்ட நீதிபதி, முறையான அனுமதியின்றி ஜல்லிக்கட்டு நடத்துவோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கலாம் என […]
தூத்துக்குடி மாநகரில் உள்ள அந்தோணியார்புரம் பகுதியை சார்ந்த 100க்கும் மேற்ப்பட்ட பெண்கள், குடிநீர் வழங்க கோரி காலிப் பானைகளுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு மனு அளித்துள்ளனர். பின்னர் அவர்கள் மாவட்ட ஆட்சித்தலைவரை சந்தித்து முறையிட்டனர்.உடனடியாக குடிநீர் வழங்கிட நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார்.