தூத்துக்குடி மாவட்டம் கோவளத்தில் ஏராளமான மீன்கள் செத்து கரையொதுங்கின. பவளப்பாறைகளுக்கு இடையே குஞ்சு பொறிக்கும் மூஞ்சான், ஊளி, ஓரா வகை மீன்கள் கடற்கரையில் சுமார் ஒன்றரை கிலோ மீட்டர் தூரத்திற்கு இறந்து கிடந்தன. கடற்கரையை ஒட்டியுள்ள ஸ்பிக் உரத் தொழிற்சாலையின் கழிவு நீரே மீன்கள் இறப்புக்கு காரணம் என்று மீனவர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 2 டன்னுக்கும் அதிக மீன்கள் இறந்து கரை ஒதுங்கியுள்ளதாக தெரிவிக்கும் மீனவர்கள், மீன்வளத்துறை அதிகாரிகள் இறந்த மீன்களையும், கடல்நீரையும் ஆய்வுக்காக […]
ஸ்டெர்லைட் ஆலையை தொடர்ந்து இயக்குவதற்கான அனுமதி கோரிய விண்ணப்பம் மும்பை பங்கு சந்தை நிராகரிப்பு. ஸ்டெர்லைட் ஆலையை தொடர்ந்து இயக்குவதற்கான அனுமதி கோரிய விண்ணப்பம் நிராகரிக்கபட்டது.விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டதால் பராமரிப்பு பணிகளை மேலும் நீட்டித்தது ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம். பராமரிப்பு பணிக்காக ஆலை மூடப்பட்டுள்ள நிலையில், திறக்கப்படுவது மேலும் தாமதம் ஆகலாம். இந்நிலையில் மும்பை பங்கு சந்தையில் வேதாந்தா நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது.மேலும் சில தகவல்கள் கேட்டு மனு நிராகரிப்பு, அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து ஆலோசனை . மேலும் […]
தமிழகத்தில் தூத்துக்குடி மற்றும் ராமநாதபுரம் பகுதிகளில் மழை பெய்து வருகிறது. ராமநாதபுரம் அரண்மனை, கேணிக்கரை, மாவட்ட ஆட்சியர் அலுவலகம், பேராவூர், காட்டூரணி, பட்டினம்காத்தான், உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நல்ல மழை பெய்து வருகிறது. அதேபோன்று தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று பரவலான மழை பெய்த நிலையில் இன்று மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த இடங்களில் தொடர்ந்து கோடைவெயில் தகித்து வந்த நிலையில் நீண்ட நாட்களுக்குப் பிறகு பெய்த மழையால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். மேலும் […]
செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ,ஸ்டெர்லைட் ஆலை தொடர்பான மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் அறிக்கையை தற்போது வெளியிடுவது உகந்ததாக இருக்காது என தெரிவித்துள்ளார். தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி நேஷனல் பொறியியல் கல்லூரியில், நீட் நுழைவுத் தேர்வுக்கான உண்டு, உறைவிட பயிற்சி முகாமை அமைச்சர் தொடங்கி வைத்தார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த அவர், ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராட்டம் நடத்தி வரும் மக்களுக்கு தகுந்த பாதுகாப்பு செய்து கொடுத்துள்ளதாக கூறினார். மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
ஜெர்மனியின் மூனிச் நகரில் வாழும் தமிழர்கள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரியும், ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தியும், போராட்டத்தில் ஈடுபட்டனர். மூனிச் நகரில் ஒலிம்பிக் விளையாட்டு அரங்கம் அருகே ஒன்றுகூடிய தமிழர்கள், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கவும், நியுட்ரினோ திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஸ்டெர்லைட் ஆலையை மூடவும், ஆறுகளை இணைக்க வேண்டும் என்றும் பதாகைகளை ஏந்தி முழக்கமிட்ட அவர்கள், தமிழகத்தையும், விவசாயத்தை காக்க வேண்டும் என, மத்திய, மாநில அரசுகளுக்கு கோரிக்கை விடுத்தனர். மேலும் […]
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தித் முற்றுகையிடப்பட்டது. ஸ்டெர்லைட் தாமிர ஆலையை மூட வலியுறுத்தித் தூத்துக்குடியில் பல்வேறு போராட்டங்களில் பொதுமக்கள் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் இன்று தூத்துக்குடி குமரரேட்டியாபுரம்,சில்வர்புரம்,மடத்தூர், முருகேசன் நகர்,பாலையாபுரம்,சுப்ரமணியாபுரம்,தெற்கு வீரபாண்டியாபுரம், உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த ஆயிரத்துக்கு மேற்பட்டோர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தினர். அப்போது ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதற்கு மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரி அவர்கள் முழக்கமிட்டனர்.இந்நிலையில் அவர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு உள்ளே […]
தூத்துக்குடி மாவட்டம் குமரெட்டியாபுரத்தில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தின்போது செய்தி சேகரிக்கச் சென்ற செய்தியாளர்களை தேமுதிகவினர் தாக்கியதால் அங்கு பரபரப்பு நிலவியது. ஸ்டெர்லைட் தாமிர ஆலைக்கு எதிராக குமரெட்டியாபுரத்தில் 56 வது நாளாக மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த போராட்டத்தில் கலந்து கொள்வதற்காகச் தேமுதிக தலைவர் விஜயகாந்தின் மனைவி பிரேமலதா மற்றும் பிரேமலதாவின் சகோதரர் சுதீஷ் அங்கு சென்றனர். போராட்டத்தின் போது பேசிய பிரேமலதா, குமரெட்டியாபுரம் போராட்டத்தை தங்களது தொலைக்காட்சி மட்டுமே தொடர்ந்து ஒளிபரப்பி வருவதாகக் […]
அமைச்சர் கடம்பூர் ராஜூ சிறந்த கல்வியாளர்களை வேறு மாநிலங்களில் துணை வேந்தர்களாக நியமிப்பது சகஜம்தான் என தெரிவித்துள்ளார். அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தராக கர்நாடகாவைச் சேர்ந்த சூரப்பாவை தமிழக ஆளுநர் நியமித்தது, தமிழகத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து, தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் கடம்பூர் ராஜூ, இந்தியாவில் சிறந்து விளங்கும் கல்வியாளர்கள் பல்வேறு மாநிலங்களில் நியமிக்கப்படுவது வழக்கம் என்றும் அது போல் தான் அண்ணா பல்கலைக்கழகத்திலும் ஆளுநர் துணை வேந்தரை நியமனம் செய்துள்ளதாகவும் தெரிவித்தார். மேலும், […]
பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அண்ணா பல்கலைக்கழகத் துணைவேந்தராகக் கர்நாடகத்தைச் சேர்ந்தவர் நியமிக்கப்பட்டது குறித்த எதிர்க்கட்சியினரின் குற்றச்சாட்டுக்குப் பதில் அளிக்க மறுத்துவிட்டார். தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் நேசனல் பொறியியல் கல்லூரியில் நீட் தேர்வுக்கான பயிற்சி மையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்தப் பயிற்சி மையத்தைத் தமிழகப் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், செய்தி விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு ஆகியோர் பார்வையிட்டனர். இதையடுத்து அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அண்ணா பல்கலைக்கழகத் துணைவேந்தர் நியமனம் தொடர்பான எதிர்க்கட்சியினரின் குற்றச்சாட்டுகள் பற்றிச் செய்தியாளர்கள் கேட்டதற்கு […]
ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி தூத்துக்குடியில் பேரணி நடத்தியவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. திருச்செந்தூரில், ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டக் குழுவினர், கடந்த செவ்வாய்க்கிழமை பேரணி நடத்தினர். உரிய அனுமதி பெறாமல் பேரணி நடத்தியதாக திருச்செந்தூர் கிராம நிர்வாக அலுவலர் கார்த்திகேயன் அளித்த புகாரின் அடிப்படையில், 120 பேர் மீது திருச்செந்தூர் தாலுக்கா போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
ஸ்டெர்லைட் ஆலை சார்பில் தூத்துக்குடி பகுதிகளில் செய்யப்பட்ட சமூகப் பணிகளுக்காக வைக்கப்பட்டுள்ள போர்டுகளில் வழக்கறிஞர்கள் தார் பூசி மறைத்தனர். தூத்துக்குடியில் இயங்கி வரும் ‘வேதாந்தா’ நிறுவனத்தின் அங்கமான ஸ்டெர்லைட் ஆலையின் 25 ஆண்டு ஒப்பந்தம், அடுத்த ஆண்டு முடிவடைகிறது.ஆலையின் அடுத்த விரிவாக்கத்திற்காக, அந்நிறுவனம் விரிவாக்கப் பணியினை தொடங்கி உள்ளது. ஆலையிலிருந்து வெளியாகும் நச்சுப் புகையால், சுற்றுச்சூழல் பாதிப்பும், சுற்றியுள்ள கிராம மக்களுக்கு, மூச்சுத்திணறல் முதல் புற்று நோய் வரை பல நோய்கள் வருவதாகவும் கூறி, ஸ்டெர்லைட் விரிவாக்கத்திற்கு […]
தூத்துக்குடியில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து திமுக மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ரயில்மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இன்று தமிழகம் முழுவதும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி முழு அடைப்பு நடைபெறுகிறது. இதனால் தமிழகம் ஸ்தம்பித்துள்ளது. காவிரி உரிமைகளைப் பெறுவதில் அரசியல் ஒரு தடையாக இருக்கக் கூடாது என்று கூறி ஸ்டாலின் அழைப்பை ஏற்று திமுக மற்றும் அதன் தோழமைக் கட்சிகள் நடத்தும் முழு அடைப்புக்கு பாமக, கொமதேக, லதிமுக, […]
ஏப்ரல் 4-ம் தேதி தூத்துக்குடி சிதம்பர நகர் பேருந்து நிறுத்தம் அருகே ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக திமுக சார்பில், ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. காவல் துறை இதற்கு அனுமதி மறுத்துவிட்டது. ஆர்ப்பாட்டத்துக்கு அனுமதி அளிக்க உத்தரவிடக்கோரி, தூத்துக்குடி எம்எல்ஏ பெ.கீதா ஜீவன், உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் நேற்று காலை அவசர மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், திமுகவின் போராட்டத்துக்கு அனுமதி அளிக்க காவல் துறைக்கு உத்தரவிட்டது. இதையடுத்து மாலை […]
ஸ்டெர்லைட் முற்றுகை 1000 பேர் கைது.வேதாந்தாவை கைது செய்ய கே.பாலகிருஷ்ணன் வலியுறுத்தல். தூத்துக்குடி ஏப்ரல்-4 ஸ்டெர்லைட் ஆலையின் நிறுவனர் வேதாந்தாவை கைது செய்ய வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வலியுறுத்தினார். தூத்துக்குடி நகரின் மாபெரும் துயரமாக மாறிவரும் ஸ்டெர்லைட் ஆலையை உடனடியாக மூட வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆலையை முற்றுகையிடும் போராட்டம் புதனன்று நடைபெற்றது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன்,மத்தியக் குழு உறுப்பினர் உ.வாசுகிஆகியோர் தலைமையில் நடைபெற்ற […]
ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிர்ப்பு தெரிவித்து சிபிஎம் கட்சி மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்டோர் ஸ்டெர்லைட் ஆலையை முற்றுகையிடும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதில் இந்திய மாணவர் சங்கம் ,இந்திய வாலிபர் சங்கம் , மாதர் சங்கம் என பல்வேறு அமைப்பினை சார்ந்தவர்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி இந்திய மாணவர் சங்கம் தலைமையில் ஏ.பீ.சி.மகாலட்சுமி மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் போராட்டம் நடைபெற்றுவருகிறது. தூத்துக்குடியில் இயங்கி வரும் ‘வேதாந்தா’ நிறுவனத்தின் அங்கமான ஸ்டெர்லைட் ஆலையின் 25 ஆண்டு ஒப்பந்தம், அடுத்த ஆண்டு முடிவடைகிறது.ஆலையின் அடுத்த விரிவாக்கத்திற்காக, அந்நிறுவனம் விரிவாக்கப் பணியினை தொடங்கி உள்ளது. ஆலையிலிருந்து வெளியாகும் நச்சுப் புகையால், சுற்றுச்சூழல் பாதிப்பும், சுற்றியுள்ள கிராம மக்களுக்கு, மூச்சுத்திணறல் முதல் புற்று நோய் வரை பல நோய்கள் வருவதாகவும் கூறி, […]
சிகிச்சை பலனின்றி கோவில்பட்டி அருகே தீப்பெட்டி தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கிய சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தான். தூத்துக்குடி மாவட்டம் கடலையூர் சாலையை சேர்ந்தவர் லாரன்ஸ் ராஜதுரை. ஆவல்நத்தம் பகுதியில் இவருக்கு சொந்தமான தீப்பெட்டி ஆலை உள்ளது. ஆலையின் முன்பகுதியில் தீப்பெட்டி கழிவுகள் கொட்டப்பட்டுள்ளது. அந்த கழிவுகளில் திடீரென தீப்பற்றியுள்ளது. அதன் அருகே அதே ஊரைச் சேர்ந்த சிறுவன் பத்ரகாளி முத்து விளைக்கொண்டிருந்தான். அப்போது எதிர்பாராத விதமாக சிறுவனின் மீது தீ பற்றியுள்ளது. அப்போது அருகில் இருந்தவர்கள் சிறுவனை […]
ஸ்டெர்லைட் ஆலை இயங்க உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு நகலை தாக்கல் செய்யவேண்டும் என தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. ஸ்டெர்லைட் விவரம்: தூத்துக்குடியில் இயங்கி வரும் ‘வேதாந்தா’ நிறுவனத்தின் அங்கமான ஸ்டெர்லைட் ஆலையின் 25 ஆண்டு ஒப்பந்தம், அடுத்த ஆண்டு முடிவடைகிறது.ஆலையின் அடுத்த விரிவாக்கத்திற்காக, அந்நிறுவனம் விரிவாக்கப் பணியினை தொடங்கி உள்ளது. ஆலையிலிருந்து வெளியாகும் நச்சுப் புகையால், சுற்றுச்சூழல் பாதிப்பும், சுற்றியுள்ள கிராம மக்களுக்கு, மூச்சுத்திணறல் முதல் புற்று நோய் வரை பல நோய்கள் […]
ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தும், ஆலையை மூடக்கோரியும் 51 ஆம் நாளாக குமரெட்டியாபுரம் மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர் . தூத்துக்குடியில் இயங்கி வரும் ‘வேதாந்தா’ நிறுவனத்தின் அங்கமான ஸ்டெர்லைட் ஆலையின் 25 ஆண்டு ஒப்பந்தம், அடுத்த ஆண்டு முடிவடைகிறது.ஆலையின் அடுத்த விரிவாக்கத்திற்காக, அந்நிறுவனம் விரிவாக்கப் பணியினை தொடங்கி உள்ளது. ஆலையிலிருந்து வெளியாகும் நச்சுப் புகையால், சுற்றுச்சூழல் பாதிப்பும், சுற்றியுள்ள கிராம மக்களுக்கு, மூச்சுத்திணறல் முதல் புற்று நோய் வரை பல நோய்கள் வருவதாகவும் கூறி, […]