ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தி மதிமுக பொதுச்செயலர் வைகோ எட்டயபுரத்தில் பிரசாரம் செய்தார். எட்டயபுரம், புதூர், நாகலாபுரம், விளாத்திகுளம், சூரன்குடி, வைப்பார், குளத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் வைகோ பிரசாரம் மேற்கொண்டார். எட்டயபுரத்தில் அவர் பேசியதாவது: ஸ்டெர்லைட் ஆலைக்கு அனுமதி கொடுத்து, கொண்டுவந்தது ஜெயலலிதா தலைமையிலான அதிமுக அரசு தான். தற்போது ஆலை விரிவாக்கத்துக்கு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் அனுமதி கொடுக்கவில்லை என தமிழக அரசு கூறுவது ஓர் ஏமாற்று வேலை. தமிழக அரசு மோடி சொல்வதை கேட்டு […]
பயிர் காப்பீட்டுக்கான இழப்பீடு தொகை சரிசெய்து இழப்பீட்டு தொகையை உடனடியாக வழங்க கோரி ரெகுராமபுரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தை வெளவால்தொத்தி கிராம விவசாயிகள் முற்றுகையிட்டனர். புதூர் ஊராட்சி ஒன்றியத்தில் ரெகுராமபுரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தின் கட்டுப்பாட்டின் கீழ் செங்கோட்டை, ரெகுராமபுரம், வெளவால்தொத்தி, புதுப்பட்டி ஆகிய கிராமங்கள் உள்ளன. இக்கிராம விவசாயிகள் மக்காச்சோளம் உள்ளிட்ட பயிர்களுக்கு பயிர் காப்பீடு செய்திருந்தனர். போதிய மழை இல்லாததால் விளைச்சல் இன்றி நஷ்டம் ஏற்பட்ட நிலையில் பயிர்காப்பீடு […]
மதிமுக பொதுச் செயலாளர் வைகோ ,எந்த அடக்குமுறை வந்தாலும் அதனை எதிர்கொண்டு ஸ்டெர்லைட் ஆலையை மூடாமல் விடமாட்டேன் என கூறினார். தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக வாகனப் பயணம் மேற்கொண்ட வைகோ செய்தியாளர்களைச் சந்தித்தார். வரும் 28ஆம் தேதி தூத்துக்குடியில் நடக்கும் போராட்டத்தில் பல்லாயிரக்கணக்கான மக்கள் பங்கேற்க வேண்டும் என அப்போது அவர் அழைப்பு விடுத்தார். மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
போராட்டத்தில் ஈடுபட்ட இந்திய மாணவர் சங்கத்தினர் மீது பொய் வழக்கை பதிவு செய்து கைது செய்யும் தூத்துக்குடி சிப்காட் காவல்துறை ஆய்வாளர் ஹரிஹரன். தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது.குறிப்பாக கடந்த 13 ஆம் தேதி இந்திய மாணவர் சங்கம் சார்பில் கல்லுரி மாணவர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.இப்போராட்டத்தில் 500க்கும் மேற்பட்ட கல்லுரி மாணவர்கள் பங்கேற்றனர்.இப்போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களை படிக்கும் மாணவர்கள் என்று பார்க்காமல் 6-பிரிவுகளில் 16-மாணவர்கள் […]
ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டத்தில் தூத்துக்குடியில் திருமணம் முடிந்த கையோடு மணமக்கள் மணக்கோலத்துடன் குதித்தனர். அவர்களை பொதுமக்கள் உற்சாகத்துடன் வரவேற்றனர். மாசு கட்டுப்பாட்டு வாரியம் அனுமதி மறுத்த நிலையில் ஸ்டெர்லைட் ஆலையை முழுவதுமாக மூட வேண்டும் என்று போராட்டம் மாதக்கணக்கில் நடந்து வருகிறது. தூத்துக்குடி முழுவதும் பொதுமக்கள் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதே போல் தூத்துக்குடியில் உள்ள பனிமயமாதா ஆலயத்தில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக, இரண்டாவது நாளாக போராட்டம் நடைப்பெற்று வருகிறது. ஆலய […]
ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தி ஸ்டெர்லைட் நுழைவு வாயில் முன்பு போராட்டத்தில் ஈடுபட்ட 300 பேர் கைது செய்யப்பட்டனர். தூத்துக்குடியில் இயங்கி வரும் ‘வேதாந்தா’ நிறுவனத்தின் அங்கமான ஸ்டெர்லைட் ஆலையின் 25 ஆண்டு ஒப்பந்தம், அடுத்த ஆண்டு முடிவடைகிறது.ஆலையின் அடுத்த விரிவாக்கத்திற்காக, அந்நிறுவனம் விரிவாக்கப் பணியினை தொடங்கி உள்ளது. ஆலையிலிருந்து வெளியாகும் நச்சுப் புகையால், சுற்றுச்சூழல் பாதிப்பும், சுற்றியுள்ள கிராம மக்களுக்கு, மூச்சுத்திணறல் முதல் புற்று நோய் வரை பல நோய்கள் வருவதாகவும் கூறி, ஸ்டெர்லைட் […]
மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், ஸ்டெர்லைட் ஆலை தொடங்கப்படும் போதே அதற்கு எதிராக தாம் உண்ணாவிரதம் இருந்ததாகவும், அப்போது யாரும் ஆதரிக்கவில்லை என்றும் தெரிவித்துள்ளார். ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம் தம்மிடம் அப்போது பேரம் பேசியதாகவும் தூத்துக்குடியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறினார். மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
தூத்துக்குடி மாவட்டம் பிரைன்ட் நகர் 7வது தெருவில் உள்ள சுந்தரவல்லி திருமண மண்டபத்தில் வைத்து சோமு செம்பு அறக்கட்டளை மற்றும் கோவில்பட்டி ஆர்த்தி மருத்துவமனை இணைந்து நடத்தும் இலவச மருத்துவ முகம் நடைபெற்றது. இம்முகாமிற்கு DYFI இரத்ததான கழகத்தின் தலைவர் கே.ஆறுமுகம் தலைமையில் நடைபெற்றது.இதற்கு சோமுவின் தந்தை சுப்பிரமணியன் மற்றும் செம்புவின் தாயார் ராஜாத்தி முன்னிலை வகித்தனர் . இதில் மருத்துவர்கள் பி. சிவனாகரன் பொது மருத்துவர் ,பால்சாமி குழந்தை மருத்துவர்,வசந்தகுமார் குழந்தை மருத்துவர் ,பாண்டியன் கண் […]
ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தி தூத்துக்குடி நகரில் பல்வேறு பகுதிகளில் பொதுமக்கள் கருப்புக் கொடி ஏற்றி போராட்டம் நடத்தினர். நேதாஜி நகர், தேவர் நகர், விஸ்வபுரம் உள்ளிட்ட பகுதிகளில் போராட்டம் நடத்தி வரும் இளைஞர்கள் ஆங்காங்கே கருப்புக் கொடி ஏற்றி வைத்துள்ளனர். இதே போன்று பனிமயமாதா பேராலயத்தின் வளாகத்தில் அமர்ந்து, இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் போராட்டம் நடத்தினர்.முத்தம்மாள் காலணி, சங்கரபேரி, வீட்டு வசதி வாரிய குடியிருப்பு உள்ளிட்ட பகுதிகளிலும் கருப்புக் கொடிகள் ஏற்றப்பட்டிருந்தன. மேலும் செய்திகளுக்கு […]
தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறில் கோவில் திருவிழா தேரோட்டத்தின்போது சேற்றில் சிக்கிய தேர் இயந்திரங்கள் கொண்டு மீட்க்கப்பட்டது. கயத்தாறில் 100 அண்டுகள் பழமை வாய்ந்ததாகக் கூறப்படும் அகிலாண்டேஸ்வரி சமேத கோதண்டராமேஸ்வரர் திருக்கோயில் சித்திரைத் தேரோட்டம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர். அப்போது ரதவீதியில் அண்மையில் பெய்த மழை காரணமாக உண்டான சகதியில் தேரின் சக்கரங்கள் சிக்கின. நீண்ட நேரம் போராடியும் வெளியே எடுக்க முடியாததால், ஜேசிபி, கிரேன் உள்ளிட்ட இயந்திரங்கள் கொண்டுவரப்பட்டு […]
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் வெங்கடேசன் , ஸ்டெர்லைட் விவகாரத்தில், மக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தும்வகையில் செயல்படுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுமென எச்சரித்துள்ளார். இதுகுறித்து அவர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில், ஸ்டெர்லைட் தாமிர உருக்காலையின் முதல் அலகை தொடர்ந்து நடத்த அனுமதி கோரிய விண்ணப்பத்தை தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் நிராகரித்தது சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அரசு உரிய நடவடிக்கை எடுத்து வரும் நிலையில், போராட்டம் சில சமூக விரோதிகளால் திசைதிருப்பப்பட்டு விரும்பத்தகாத சம்பவங்கள் நிகழ்ந்திருப்பதாக அவர் கூறியுள்ளார். பொது அமைதிக்கு குந்தகம் ஏற்படுத்தினால் […]
மதிமுக பொதுச்செயலாளர் வைகோவின் மருமகன்,காவிரி பிரச்சினைக்காக தீக்குளித்த சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். தமிழகத்தில் காவிரி பிரச்சினை தீயாகப் பற்றி எரிகிறது. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி பல தொண்டர்கள் தீக்குளித்து வருகின்றனர். சிலர் தீக்குளிப்பு முயற்சியில் மீட்கப்பட்டனர். யாரும் உயிரை மாய்த்துக் கொள்ளக்கூடாது என தலைவர்கள் வேண்டுகோள் விடுத்துவருகின்றனர். இந்நிலையில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோவின் மருமகன் சரவண சுரேஷ் (50)கடந்த வெள்ளிக்கிழமை காலை தீக்குளித்தார். 100 சதவீத தீக்காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்தார். தனது […]
தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெ.மகேந்திரன். கோவில்பட்டி கோ.வெங்கடசுவாமி நாயுடு கல்லூரியின் 52ஆவது கல்லூரி ஆண்டு விழா நிகழ்ச்சியில் அவர் மேலும் பேசியது: காலதாமதம், மறதி, சோம்பல், தூக்கம் இந்த நான்கு விசயங்களை மாணவர்கள் தவிர்த்தால் அது உங்களுடைய கல்விக்கும், வளர்ச்சிக்கும் நன்றாக இருப்பது மட்டுமின்றி, உங்களால் எதையும் சாதிக்கவும் முடியும். கிடைத்த வாய்ப்பினை பயன்படுத்தினால் அது வெற்றி, தவறவிட்டால் அது தோல்வி. இதுதான் வெற்றிக்கும், தோல்விக்கும் உள்ள வித்தியாசம். மாணவர் பருவத்தில் கிடைக்கும் வாய்ப்புகளை சரியாகப் […]
தூத்துக்குடியில் இயங்கி வரும் ஸ்டெர்லைட் ஆலை வாகனங்கள் மீது தாக்குதல் நடத்திய வழக்கில் போராட்டக்குழுவைச் சேர்ந்த 6 பேரை போலீஸார் வெள்ளிக்கிழமை கைது செய்து வழக்கு பதிவு செய்தனர் . தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடி வருவோரில் சிலர் வியாழக்கிழமை மடத்தூர் விலக்குப் பகுதி வழியாக ஆலை ஊழியர்களை ஏற்றிச் சென்ற ஆலையின் வாகனங்கள் மீது தாக்குதல் நடத்தினர். இதில், ஒரு பேருந்தில் முன்பக்க கண்ணாடியும், ஒரு வேனின் பக்கவாட்டு கண்ணாடியும் உடைந்தன. மேலும், இந்தச் […]
தூத்துக்குடியில் கனமழை பெய்து வரும் நிலையில், மழை பெய்திருப்பதால் மக்கள் மகிழ்ச்சியடைந்தனர். இதேபோல் ராமநாதபுரம் மாவட்டத்தில் கமுதி,முதுகுளத்தூர், கீழத்தூவல், நெடுங்குளம் உள்ளிட்ட பகுதிகளில் இன்று திடீரென கருமேகங்கள் திரண்டு மழை கொட்டியது. ஒரு மணி நேரத்துக்கும் அதிகமாக கொட்டிய மழை காரணமாக வெப்பம் தணிந்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர். தஞ்சை மாவட்டத்தில் தஞ்சாவூர், செல்லம்பட்டி, வெட்டிக்காடு, ஈச்சங்கோட்டை உள்ளிட்ட பகுதிகளிலும், பட்டுக்கோட்டை சுற்றுப்பகுதிகளிலும் மழை பெய்தது. இந்த திடீர் மழையால் பொதுஇடங்களில் நடமாட முடியாமல் போனாலும், குளுமையான சூழல் […]
அமைச்சர் கடம்பூர் ராஜூ ,ஸ்டெர்லைட் ஆலையை மூட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதால் தேவையின்றி போராட வேண்டாம் என கேட்டுக்கொண்டுள்ளார். கோவில்பட்டி உழவர் சந்தையில் வேளாண்துறை சார்பில் கூட்டுப்பண்ணையம் முறையில் விவசாயிகளுக்கு வேளாண் கருவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் அமைச்சர் கடம்பூர் ராஜூ கலந்து கொண்டு டிராக்டர் உள்ளிட்ட வேளாண் உபகரணங்களை வழங்கினார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து ஸ்டெர்லைட் ஆலைக்கான மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் உரிமத்தை புதுப்பிக்க மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளதாக கூறினார். மேலும் […]
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை,ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி, முற்றுகையிட முயன்ற கல்லூரி மாணவர்களுக்கும், போலீசாருக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தி, தூத்துக்குடியில் உள்ள கல்லூரி மாணவர்கள் வகுப்பு புறக்கணிப்பு போராட்டங்களில் ஈடுபட்டனர்.இந்திய மாணவர் சங்கம் சார்பில் வ.உ.சி. கல்லூரி, காமராஜர் கல்லூரி, போப் கல்லூரிகளைச் சேர்ந்த மாணவர்களும், அரசு ஐ.டி.ஐ. மாணவர்களும் இன்று வகுப்புகளைப் புறக்கணித்தனர். இவர்கள் அனைவரும் நெல்லை பைபாஸ் சாலையில் ஒன்று திரண்டு, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை […]
உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தினரின் போராட்டத்திற்கான அனுமதி மனுவை பரிசீலித்து அனுமதி வழங்க, காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளது இதுதொடர்பாக, தூத்துக்குடியை சேர்ந்த ஹென்றி தாமஸ் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல வழக்கினை தாக்கல் செய்திருந்தார். அம்மனுவில், “தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி தூத்துக்குடி எம்ஜிஆர் திடலில் வரும் 17 ஆம் தேதி மாலை 5 மணி முதல் 10 மணி வரை அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் கண்டன […]
அமைச்சர் கடம்பூர் ராஜூ தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட மாசுகட்டுப்பாட்டுவாரியம் மூலம் முதல் அமைச்சர் நடவடிக்கை மேற்கொண்டிருப்பதாக தெரிவித்துள்ளார். ஆனால் பொதுமக்கள் போராட்டம் 60 வது நாளாக தொடர்ந்து வருகிறது. தூத்துக்குடியில் செயல்பட்டுவரும் வேதாந்தா குழுமத்தின் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக குமார ரெட்டியாபுரம் பொதுமக்கள் 60 நாட்களாக தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். தூத்துக்குடி மக்கள் தன்னெழுச்சியாக ஒன்று திரண்டு ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர். ஸ்டெர்லைட் ஆலை கடந்த 25 ந்தேதி முதல் […]
தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை தொடர்ந்து இயங்க அனுமதி மறுத்துள்ளது. தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடக் கோரியும், விரிவாக்கப் பணிகளை தடுக்கக் கோரியும் அ.குமரெட்டியாபுரம் மக்களின் போராட்டம் நேற்று 57-வது நாளாக தொடர்ந்தது. பொதுமக்களின் இப்போராட்டத்துக்கு திமுக, மதிமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன. இதற்கிடையில் கடந்த மார்ச் 31-ம் தேதியுடன் ஸ்டெர்லைட் ஆலைக்கான அனுமதிக் காலம் முடிந்தது. தொடர்ந்து இயங்க அனுமதிக்கக் கோரி, தமிழக மாசு கட்டுப்பாட்டு வாரியத்திடம் ஆலை நிர்வாகம் […]