தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலை அதிக மாசு ஏற்படுத்துவதாக கூறி ஆலையை மூட முன்னதாக தமிழக அரசு தடை உத்தரவு பிறப்பித்தது.இதனையடுத்து,தமிழக அரசின் உத்தரவுக்கு எதிராக வேதாந்தா நிறுவனம் சார்பில் தொடரப்பட்ட வழக்குகள் தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில்,ஆலை நிர்வாகம் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இந்த வழக்கு நிலுவையில் இருந்து வரும் நிலையில்,ஆலையில் உள்ள இயந்திர உபகரணங்கள் துருப்பிடித்து சேதமாகும் நிலையில் உள்ளதால் ஆலை பராமரிப்பு பணி மேற்கொள்ள அனுமதிக்க வேண்டும் என வேதாந்தா நிறுவனம் தரப்பில் கடந்த […]
தூத்துக்குடி அனல் மின்நிலையத்தின் 3 யூனிட்டுகளில் மின் உற்பத்தி நிறுத்தம். நாட்டில் தமிழ்நாடு, டெல்லி உள்ளிட்ட மாநிலங்களில் நிலக்கரி தட்டுப்பாட்டால் அனல் மின் நிலையங்களில் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டு, பல மாநிலங்களில் மின் தடை நிலவுகிறது. இதனால் மக்கள் பெரும் இன்னலுக்கு ஆளாகி வருகின்றனர். இந்த நிலையில், நிலக்கரி தட்டுப்பாடு காரணமாக தூத்துக்குடி அனல் மின்நிலையத்தின் 3 யூனிட்டுகளில் மின் உற்பத்தி நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக 3 யூனிட்டுகளில் மொத்தம் 630 மெகாவாட் மின் உற்பத்தி […]
கடந்த 2018 ஆம் ஆண்டு தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை அகற்ற கோரி மக்கள் நடத்திய பெரும் போராட்டத்தில் காவலர்கள் துப்பாக்கி சூடு நடத்தி 13 பேர் உயிரிழந்தனர். இதனையடுத்து ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடும்படி தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் உத்தரவிட்டு, ஸ்டெர்லைட் ஆலைக்கு சீல் வைக்கப்பட்டது. தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் தீர்ப்பை ரத்து செய்யகோரி வேதாந்தா நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தது. இது தொடர்பான வழக்கு தற்பொழுதும் உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் இருந்து […]
நேற்று மாலை தூத்துக்குடி துறைமுகத்திற்கு 50 ஆயிரத்து 760 மெட்ரிக் டன் நிலக்கரி வந்ததையடுத்து மின் உற்பத்தி சீரானது. கடந்த சில தினங்களுக்கு முன்பதாக தூத்துக்குடியில் நிலக்கரி பற்றாக்குறை காரணமாக தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டது. இந்நிலையில் நேற்று மாலை தூத்துக்குடி துறைமுகத்திற்கு 50 ஆயிரத்து 760 மெட்ரிக் டன் நிலக்கரி வந்தது. இதையடுத்து தற்போது அங்கு தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் மின் உற்பத்தி சீரானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த தலைமை ஆசிரியர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது. கோவில்பட்டியில் பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த தலைமை ஆசிரியர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார். மாணவியின் பெற்றோர் அளித்த புகாரின்பேரில் நாலாட்டின்புத்தூர் காவல் நிலைய ஆய்வாளர் பத்மாவதி வழக்கு பதிந்து போக்சோ சட்டத்தின் கீழ் தலைமை ஆசிரியர் தாமஸ் சாமுவேல் கைது செய்யப்பட்டுள்ளார். விருதுநகர் மாவட்டம் சாத்தூரை அடுத்துள்ள சின்னகொல்லம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் தாமஸ் சாமுவேல் (57) இவர், தூத்துக்குடி […]
தூத்துக்குடி:அனல்மின் நிலையத்துக்கு 4000 டன் நிலக்கரி வந்துள்ளது. தூத்தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் ஏற்பட்டுள்ள நிலக்கரி தட்டுப்பாடு காரணமாக மொத்தமுள்ள 5 யூனிட்டுகளில் ஒரு யூனிட்டில் மட்டுமே மின் உற்பத்தி நடைபெற்று வந்தது.இதனால்,மின் வெட்டு ஏற்படும் நிலை ஏற்படலாம் என்று கூறப்பட்டது. இந்நிலையில்,தூத்துக்குடி அனல்மின் நிலையத்துக்கு 4000 டன் நிலக்கரி வந்துள்ளது.இதனைத் தொடர்ந்து,மின் உற்பத்தி செய்யப்படும் யூனிட்டுகளின் எண்ணிக்கை இரண்டு யூனிட்டுகளாக உயர்ந்துள்ளது. அதன்படி,1,4 யூனிட்டுகளில் 210 மெகாவாட் மின் உற்பத்தி நடைபெறுகிறது,மீதமுள்ள 2,3,5 ஆகிய யூனிட்டுகளில் தொடர்ந்து […]
தூத்துக்குடியில் சினிமா பாணியில் கடத்தலில் ஈடுபட்ட கும்பலை துரத்தி பிடித்த தூத்துக்குடி போலீசாரை, சம்பவ இடத்திற்கு நேரில் சென்று எஸ்பி பாராட்டு. தூத்துக்குடி மாவட்டத்தில் 2 பேரை காரில் கடத்திய கும்பலை சினிமா பாணியில் போலீசார் துரத்தி பிடித்து காரை சுற்றி வளைத்து 5 எதிரிகளை கைது செய்து, அந்த காரையும் பறிமுதல் செய்தனர். கடத்தல் கும்பலை துரத்தி பிடித்த போலீசாரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் திரு.எல்.பாலாஜி சரவணன் அவர்கள் சுற்றி வளைத்து பிடித்த இடத்திற்கே […]
இன்று ஆந்திர மாநிலத்தில் நிலநடுக்கம் ஏற்பட்ட நிலையில் திருச்செந்தூரில் கடல் 200 மீட்டர் தூரம் வரை உள்வாங்கியது என கூறப்படுகிறது. திருச்செந்தூரில் கோவிலை ஒட்டிய பகுதிகளில் கடல் உள்வாங்கியதால் பக்தர்கள் மற்றும் பொதுமக்களுக்கு இடையே பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அமாவாசை, பவுர்ணமி நாட்களில் கடல் சிறிது தூரம் வரை உள்வாங்கிய பின் சீராகும். 2 நாட்களுக்கு முன் கடல் உள்வாங்கியது. இந்நிலையில், இன்று ஆந்திர மாநிலத்தில் நிலநடுக்கம் ஏற்பட்ட நிலையில் திருச்செந்தூரில் கடல் 200 மீட்டர் தூரம் வரை […]
தூத்துக்குடி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத்தின் மூலம் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் இன்று காலை 10.30 மணிக்கு மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நடக்கிறது. முகாமில் 10-ம் வகுப்பு,12-ம் வகுப்பு, பட்டப்படிப்பு,டிப்ளமோ,ஐ.டி.ஐ மற்றும் கம்ப்யூட்டர் பயிற்சி முடித்த பதிவுதாரர்கள் கலந்து கொள்ளலாம். தனியார் துறையில் பணிபுரிய விருப்பம் உள்ளவர்கள் தங்களது பயோடேட்டா,மற்றும் கல்வி சான்றுகளுடன் முகாமில் கலந்து கொண்டு பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். தனியார் துறை நிறுவனங்களில் பணி நியமனம் செய்யப்படும்போது,வேலைவாய்ப்பு அலுவலக பதிவு […]
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் ஒன்றாக திருச்செந்தூர் சுப்ரமணிய சுவாமி கோவில் உள்ளது. இங்கு பொதுமக்கள் பொது தரிசனம் செய்ய 20 ரூபாய், 100 ரூபாய், 250 ரூபாய் என கட்டணங்கள் சாமி தரிசனத்திற்காக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதற்கிடையில், திருச்செந்தூர் சுப்பிரமணிய சாமி கோயிலில் கட்டண முறையில் மாற்றத்தை செய்து கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது. இந்நிலையில், திருக்கோயில் இணை ஆணையர் வெளியிட்டுள்ள அறிக்கையில், திருச்செந்தூர் சுப்பிரமணிய சாமி கோயிலில் பக்தர்களின் நலன் கருதி இனி ரூ.20 மற்றும் ரூ.250 […]
தூத்துக்குடி சர்வதேச அறைகலன் பூங்கா அடிக்கல் நாட்டு விழாவில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இந்தியாவின் 3-வது பெரிய துறைமுகமாக தூத்துக்குடி திகழ்ந்து வருகிறது. அதனால்தான் அறைகலன் பூங்காவை இங்கு அமைக்க திட்டமிட்டோம். வ.உ.சியின் பொருளாதார கனவு நிறைவேறும் நாளாக அறைகலன் பூங்கா அமையும் நாள் இருக்கும். இந்தியாவிலேயே முதல்முறையாக தமிழ்நாட்டில் அறைகலன் பூங்கா அமைய உள்ளது பெருமைக்குரியது. நகரங்கள் மாநகரங்களாக மாற வேண்டும். தமிழ்நாட்டின் வளத்தை பயன்படுத்தி தொழில் வளர்ச்சியை உயர்த்தி மக்களுக்கு சிறப்பான வாழ்வை அளிப்பதே […]
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தூத்துக்குடி மாவட்டத்தில் 2 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக அலுவலகம், கலைஞர் அரங்கம் முன்பு 8 அடி உயர வெண்கலத்தால் ஆன முன்னாள் முதல்வர் கலைஞர் திருவுருவச்சிலை நேற்று முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்த நிலையில், நெல்லை, தூத்துக்குடி, சிவகங்கை, மதுரை உள்ளிட்ட தென் மாவட்டங்களில் புதிய தொழில்கள் தொடங்க ரூ.4,755 கோடி முதலீட்டில் புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் கையெழுத்து ஆனது. இதைத்தொடர்ந்து, முதல்வர் மு.க.ஸ்டாலின் […]
தூத்துக்குடி முத்தையாபுரத்தில் செயல்பட்டு வரும் Spic தனியார் உரத் தொழிற்சாலையின் பயன்பாட்டுக்காக ரூ.150.4 கோடி செலவில் 75 ஏக்கரில் அமைக்கப்பட்டுள்ள மிதக்கும் சோலார் உற்பத்தி நிலையத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து இன்று வைத்தார். தினமும் 22 மெகா வாட் என ஆண்டுக்கு 42 மி.யூனிட் மின்சாரம் உற்பத்தி செய்யும் திறனுடையது மின்நிலையம் என்று கூறப்படுகிறது. உற்பத்தியாகும் அனைத்து மின்சாரமும் ஸ்பிக், க்ரீன் ஸ்டார் உரங்களின் உற்பத்திக்காக பயன்படுத்தப்பட உள்ளது. இதனிடையே, தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக அலுவலகம், […]
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள், தூத்துக்குடி மாவட்டம் எட்டையாபுரம் சாலையில்,திமுக அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள முன்னாள் முதலமைச்சர் கலைஞரின் சிலையை திறந்து வைத்தார். இந்த நிலையில், அமைச்சர் கீதாஜீவன், கனிமொழி எம்.பி உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர். இந்த நிகழ்வில் உரையாற்றிய, முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள், உள்ளாட்சி தேர்தலில் திமுக வெற்றிக்குப் பிறகு முதல் நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளேன். இந்த உள்ளாட்சித் தேர்தலில் திமுக மிகப் பெரிய அளவிலான வெற்றியை பெற்றுள்ளது. தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் தவறு செய்தால் நிச்சயம் […]
தூத்துக்குடி உடன்குடி அனல்மின் நிலைய விரிவாக்கத் திட்டத்திற்கான பணிகளை தொடங்கியது தமிழ்நாடு அரசு. தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி அனல்மின் நிலைய விரிவாக்க திட்ட பணிகள் தொடங்கியது தமிழக அரசு. 2 மற்றும் 3-ஆம் நிலை ( 4*660) க்கான பணிகளுக்காக நிலத்தை கையகப்படுத்த அனுமதி வழங்கி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. உடன்குடியில் அனல் மின் நிலையங்களுக்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த அனல் மின் நிலையங்களின் கட்டுமானப் பணிகளை தொடர்ந்து மேற்கொண்டால் தமிழக அரசின் நிதிநிலைமை […]
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் குறித்த விசாரணை ஆணையத்தின் பதவிக்காலத்தை மே மாதம் 25-ம் தேதி வரை நீட்டித்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி கடந்த 2018 மே 22 ஆம் தேதி மக்கள் போராட்டம் நடத்தினர். போராட்டத்தைக் கலைக்க காவல்துறை நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர். துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடா்பாக ஓய்வுபெற்ற உயா்நீதிமன்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான ஒருநபா் ஆணையம் விசாரணை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், […]
தூத்துக்குடி மாநகராட்சி 59-வது வார்டு அதிமுக வேட்பாளரான, முன்னாள் அமைச்சர் சண்முகநாதனின் மகன் எஸ்.பி.எஸ்.ராஜா அவர்கள், தேர்தல் அதிகாரி ராமசந்திரனிடம் வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். தமிழ்நாட்டில் உள்ள 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள் மற்றும் 490 பேரூராட்சிகள் என 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு, தேர்தல்கள் வரும் 19-ஆம் தேதி ஒரே கட்டமாக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. இதனையடுத்து, அனைத்து அரசியல் கட்சியினரும் தேர்தல் முன்னேற்பாடு பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். நகர்ப்புற உள்ளாட்சி […]
கடந்த 4 ஆண்டுகளாக எவ்வித அடிப்படை வசதிகளையும் செய்து தரவில்லை என விளாத்திகுளம் அருகே வீடுகளில் கருப்பு கொடிகளை கட்டி போராட்டம். கோவில்பட்டி, விளாத்திகுளம் அருகே கமலாபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட துரைராஜ் நகர் பகுதியில் 15க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். ஊராட்சி சார்பில் கடந்த 4 ஆண்டுகளாக எவ்வித அடிப்படை வசதிகளையும் செய்து தரவில்லை என அப்பகுதி மக்கள் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றனர். குறிப்பாக குடிநீர் வசதி செய்து தரவில்லை என்பதால் அப்பகுதி மக்கள் 3 […]
தூத்துக்குடியில் நகர்புற உள்ளாட்சி தேர்தல் நடத்தை விதிகள் தொடர்பாக அனைத்து அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுடன் ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்ற நிலையில், 21 கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் நகர்புற உள்ளாட்சி தேர்தல் நடத்தை விதிகள் தொடர்பாக அனைத்து அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுடன் ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது. இதில் கூட்டத்தில் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர், மாவட்ட வருவாய் அலுவலர் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டு கீழ்கண்ட […]
தூத்துக்குடி அமமுக அமைப்புச் செயலாளர் ஹென்றி தாமஸ் எடப்பாடி, ஓபிஎஸ் முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார். தூத்துக்குடியின் முன்னாள் நகர் மன்ற தலைவர் ஹென்றி தாமஸ். இவர் டிடிவி தினகரனின் அமமுக கட்சியில் அமைப்பு செயலாளர் பொறுப்பு வகித்து வந்தார். இந்நிலையில், அவர் முன்னாள் முதல்வரும் அதிமுக ஒருங்கிணைப்பாளருமான எடப்படி பழனிச்சாமி, ஓ.பன்னீர்செல்வம் முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார். இவர் ஏற்கனவே அதிமுகவில் மாவட்ட செயலாளராக இருந்தவர், தூத்துக்குடி நகராட்சி மேயராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. தூத்துக்குடி வடக்கு மாவட்ட […]