ஸ்டெர்லைட் விவகாரத்தில் பிரதமர் மோடி மவுனமாக இருப்பது ஏன் என்று காங்கிரஸ் கேள்வி எழுப்பியுள்ளது. ஸ்டெர்லைட் ஆலை உரிய அனுமதி இல்லாமல் செயல்பட்டு வந்ததாக காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது. ஆலை அமைப்பது தொடர்பாக உள்ளூர் மக்கள் கருத்தை கேட்கவில்லை என்று தெரிவித்துள்ளது. மக்களுடன் பேச கூட பிரதமருக்கு நேரம் இல்லையா என்று அபிஷேக் சிங்வி கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் தமிழக முதலமைச்சர் அரசை நடத்த தகுதியானவர்தானா? தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில்13 பேர் உயிரிலந்தும் ஒருவரை கூட பணிநீக்கம் செய்யாதது […]
தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த தனது ரசிகருக்கு நடிகர் தனுஷ் இரங்கல் தெரிவித்துள்ளார். தூத்துக்குடியில் இயங்கி வரும் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தி நேற்றைய முன்தினம் நடைபெற்ற பேரணியில் பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டனர். இப்போராட்டத்தில் ஏற்பட்ட வன்முறையைத் தொடர்ந்து காவல்துறையினர் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் இதுவரை 13 பேர் உயிரிழந்துள்ளனர். பலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில், தூத்துக்குடியில் நடைபெற்ற துப்பாக்கி சூட்டில் தனது நற்பணி மன்றத்தை சார்ந்த ரகு என்பவர் […]
தூத்துக்குடி துப்பாக்கி சூடு காரணமாக தமிழகத்தில் பல பகுதிகளில் போரட்டங்களும் அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டங்களும் நடைபெற்று வருவதாலும் மற்றும் 3 மாவட்டங்களில் இணையதள சேவை தூண்டிப்பாலும் பல்கழை தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது அதன் படி மே 25 முதல் 28ஆம் தேதி வரை நடக்கவிருந்த தேர்வுகள் ஒத்திவைப்பு மே 29 ஆம் தேதிகளில் இருந்து அட்டவணை படி தேர்வுகள் ஜீன் 5,6,7 நடைபெறும் என அண்ணா பல்கழை கழகம் அறிவித்துள்ளது. மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்
தூத்துக்குடி சம்பவத்தில் இறந்தவர்கள் உடல்களை பதப்படுத்த உத்தரவிட்டதை மாற்ற முடியாது என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. முன்னதாக துப்பாக்கிச் சூட்டில் இறந்தவர்கள் உடலை பதப்படுத்த ஐகோர்ட் உத்தரவிட்டிருந்தது. தமிழக அரசின் கோரிக்கையை நிராகரித்து உயர்நீதிமன்றம் ஆணையிட்டது. மேலும் உடல்களை மே 30-ம் தேதி வரி பதப்படுத்தி வைக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. உடலை பதப்படுத்துவதை எதிர்த்து உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து தமிழக அரசு முறையீடு செய்தது குறிப்பிடத்தக்கது
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நேற்று முன் தினம் போராட்டங்கள் தொடங்கிய நிலையில் பல்வேறு இடங்களில் வன்முறை வெடித்தது. போலீசார் மீது கற்கள் வீசப்பட்டன. காவல்துறை வாகனங்கள் உள்ளிட்ட பல்வேறு வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டதுடன் தீவைத்தும் கொளுத்தப்பட்டன. நேற்றும் போராட்டங்கள் தொடர்ந்த நிலையில் கலவரத்தில் ஈடுபட்டதாக பலரை போலீசார் கைது செய்தனர். இதுவரை 65 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்க போலீசார் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ள நிலையில் தூத்துக்குடி வன்முறைக்கு காரணமானவர்கள் என்று […]
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கத்திற்கு தடைவிதிக்கக் கோரி குமரெட்டியார்புரம் கிராம மக்கள் தொடர்ந்து 100வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டனர். தூத்துக்குடியில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் பலர் உயிரிழந்தனர்.தூத்துக்குடி மாவட்டத்தில் நடந்துவரும் கலவரங்களை அடக்குவதற்க்காக மாவட்டங்களில் ஐந்து நாட்களுக்கு இணையதள சேவையை முடக்கிப்பட்ட நிலையில் தற்போது தூத்துக்குடியில் அரசு பேருந்து பணிமனைக்குள் மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டுவீச்சு வீசப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்