தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு திமுக சார்பில் தலா 2 லட்ச ரூபாய் நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது. திமுக தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், உயிரிழந்த 13 பேரின் குடும்பத்திற்கு தலா 2 லட்ச ரூபாய் வீதம் மொத்தம் 26 லட்ச ரூபாயை செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் வழங்கியதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. உயிரிழந்தவர்களின் குடும்பங்களையும், படுகாயமடைந்து மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருபவர்களையும் மு.க.ஸ்டாலின் நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்ததாகவும் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் […]
தூத்துக்குடி தூப்பாக்கி சூட்டில் 13 பேர் உரிரிழந்தனர் பலர் காயமடைந்தனர் இந்த நிலையில் தமிழகத்தில் ஸ்டெர்லைட் ஆலை செயல்படாது என அரசாணை வெளியிட வலியுறுத்தல் அரசாணை வெளியிட்டால் மட்டுமே துப்பாக்கிச்சூட்டில் பலியானவர்களின் உடலை உடற்கூறாய்வு செய்ய ஒப்புக் கொள்வோம் தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் பலியானவர்களில் 6 பேரின் குடும்பத்தினர் அரசுக்கு வலியுறுத்தல். மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்
தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்திலும்,தடை மீறி போரட்டம் நடத்தியது மற்றும் கலவரத்தை ஏற்படுத்தியது போன்றவைகளில் போராட்டத்தில் ஈடுபட்ட போரட்டக்காரர்கள் பலரை கைது செய்தது காவல் துறை இந்த நிலையில் தூத்துக்குடி மாவட்ட நீதிமன்றம் கைது செய்தவர்களை விடுவிக்க வேண்டும் என உத்தரவு பிறப்பித்துள்ளது. தூத்துக்குடியில் கைது செய்யப்பட்ட மேலும் 74 பேரை விடுவிக்க தூத்துக்குடி மாவட்ட நீதிமன்றம் உத்தரவு. ஏற்கனவே 65 பேரை சொந்த ஜாமீனில் விடுவிக்க தூத்துக்குடி நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது. மேலும் போராட்டத்தில் […]
தூத்துக்குடியில் இயல்பு நிலை திரும்பி வரும் நிலையில் மீண்டும் அங்கு பெட்ரோல் குண்டு காவல் நிலையம் மீது வீசப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி விளாத்திகுளம் அருகே குளத்தூர் காவல்நிலைய வளாகத்தில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இருசக்கர வாகனத்தில் வந்த மர்ப நபர்கள் தப்பி ஓட்டம் அடையாளம் தெரியாத நபர் குறித்து போலிசார் விசாரனை நேற்று இதே பகுதில் அரசு பேருந்து ஒன்றுக்கு மர்ப நபர்கள் தீ வைத்ததில் 2 பெண்கள் உட்பட சிலருக்கு தீ […]
ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டக்களமாக காட்சியளித்த தூத்துக்குடியில் படிப்படியாக இயல்புநிலை திரும்பி வருகிறது. தூத்துக்குடியில் ஆட்சியர், எஸ்.பி. மற்றும் சிறப்பு அதிகாரிகள், வணிகர்கள் மற்றும் முக்கியஸ்தர்களுடன் வியாழக்கிழமை அமைதிப் பேச்சுவார்த்தை நடத்தினர். இதன் பேரில் வ.உ.சி காய்கறிச் சந்தையில் அனைத்து கடைகளும் திறக்கப்பட்டன. ஒட்டன் சத்திரம் மற்றும் மதுரையிலிருந்து காயகறி ஏற்றிய லாரிகள் வந்து செல்லத் தொடங்கியதால், மற்ற நகரங்களைப் போன்ற இயல்பான விலையில் காய்கறிகள் விற்கப்பட்டன. பழைய பேருந்து நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் 50 சதவீத […]
தூத்துக்குடியில் இணையதள சேவையை சீரமைப்பது குறித்து நாளைக்குள் ஆய்வு செய்து முடிவு எடுக்க வேண்டும் என உயர்நீதி மன்ற மதுரை கிளை தெரிவித்தது. மேலும் தூத்துக்குடி போராட்டத்தில் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்படுகிறதா என்பதை சட்ட உதவிக்குழு நேரில் ஆய்வு செய்து ஜீன் 6 ஆம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். காயமடைந்தவர்களை மேல்சிக்கிச்சைக்காக மதுரை அல்லது தனியார் மருத்துவமனையில் சேர்க்க வேண்டும் மருத்துவ செலவை அரசே ஏற்க வேண்டும் என உயர்நீதி […]
தூத்துக்குடியில் பதற்றம் மிக்க பகுதிகளை மூன்று ஆளில்லா விமானங்கள் மூலம் காவல்துறையினர் கண்காணித்து வருகின்றனர். தூத்துக்குடி அரசு மருத்துவமனையை ஒட்டி உள்ள அண்ணாநகர் பகுதியில் 3 நாட்களாக பதற்றம் நிலவி வருகிறது. ஒன்றுக் கொன்று தொடர்புள்ள 12 நீண்ட தெருக்களைக் கொண்ட இப்பகுதியில், மர்மநபர்கள் எளிதில் ஊடுருவிப் பதுங்கி இருப்பதாக காவல்துறை தரப்பில் கூறப்படுகிறது. பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறைக் காலம் என்பதால், 13 முதல் 17 வயதுவரை உள்ள சிறுவர்களை போராட்டக் காரர்கள் தூண்டி விட்டு பெட்ரோல் […]
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கத்திற்கு தடைவிதிக்கக் கோரி குமரெட்டியார்புரம் கிராம மக்கள் தொடர்ந்து 100வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டனர்.காவல்துறையினர், 3 முறை துப்பாக்கிச் சூடும் நடத்தினர். தூத்துக்குடியில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர் தூத்துக்குடியே கலவர பூமியானது. இந்நிலையில் ஸ்டெர்லை ஆலையில் சுற்றுச் சூழல் அதிகாரிகள் ஆய்வு செய்ய மத்திய அமைச்சர் ஹர்ஷ வர்தன் உத்தரவிட்டுள்ளார். இது குறித்து கூறுகையில் ஆலைக்கான அனுமதியை முந்தைய அரசு கொடுத்ததூ.13 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் வருத்தம் அளிக்கிறது என்று […]
தூத்துக்குடியில் கடைகள் அடைக்கப்பட்டுள்ளதால்,பொதுமக்களின் சிரமத்தை போக்கும் வகையில் தனியார் உணவகம் சார்பில் 10 ரூபாய்க்கு உணவு வழங்கப்படுகிறது. ஸ்டெர்லைட் போரட்டத்தினால் ஏற்பட்ட கலவரம் காரணமாக தூத்துக்குடியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.அங்குள்ள கடைகள் அடைக்கப்பட்டுள்ளதால் மாவட்ட அரசு மருத்துவமனையில் உள்ள நோயாளிகளும்,அவரது உறவினர்களும் உணவு கிடைக்காமல் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகினர். இந்த நிலையில் தான் இதனை அறிந்த தனியார் உணவகத்தை சேர்ந்தவர்கள்,10 ரூபாய்க்கு பிரியாணி மற்றறும் சாம்பார் சாதத்தை பொதுமக்களுக்கு வழங்கி வருகின்றனர்.தூத்துக்குடி ஆட்சியர் உத்தரவின் பெயரில் […]