தூத்துக்குடி துப்பாக்கிசூட்டில் உயிரிழந்த 13 பேரின் குடும்பத்தினருக்கு கூடுதலாக தலா 5 லட்சம் வழங்க முதலமைச்சர் உத்தரவு. தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த 13 பேரின் குடும்பத்தினருக்கு ஏற்கனவே வழங்கப்பட்ட நிதியோடு, மேலும் கூடுதலாக தலா 5 லட்சம் ரூபாய் வீதம் நிதி வழங்கிட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இதுதொடர்பான அறிக்கையில், தூத்துக்குடியில் கடந்த 2018ம் ஆண்டு ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி நடத்தப்பட்ட போராட்டத்தின்போது நடந்த துப்பாக்கிச் சூட்டில் ஏற்பட்ட உயிரிழப்புகள், காயங்கள் குறித்தும், பொது மற்றும் […]
ISRO வின் சிறியரக செயற்கைகோள் ஏவுதளத்திற்கு நிலம் கையகப்படுத்துவதற்கான கால அவகாசம் நீட்டிப்பு. தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூரில் இஸ்ரோவின் சிறிய ரக செயற்கைகோள் ஏவுதளத்து நிலம் கையகப்படுத்துவதற்கான கால அவகாசத்தை நீட்டிக்கப்பட்டது. அதன்படி, இஸ்ரோவின் சிறிய ரக செயற்கைகோள் ஏவுதளத்துக்காக நிலம் கையகப்படுத்துவதற்கான கால அவகாசத்தை மேலும் ஓராண்டு நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. மாதவன் குறிச்சியில் சிறிய ரக செயற்கைகோள் ஏவுதளம் அமைப்பதற்கான முதற்கட்ட பணிகள் 2021ல் தொடங்கப்பட்டன.
தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று மதுபான விற்பனைக்கு தடை விதித்து தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் உததரவு. தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று திருச்செந்தூர் கந்த சஷ்டி விழா மற்றும் தேவர் ஜெயந்தி அனுசரிக்கப்படும் நிலையில் ஞாயிற்றுக்கிழமையான இன்று மதுபான விற்பனைக்கு தடை விதித்து தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் உத்தரவிட்டுள்ளார். மேலும் தூத்துக்குடி மாவட்டத்தில் இயங்கி வரும் அனைத்து அரசு மதுபான கடைகளும், மதுபான கூடங்களும் மூடப்பட்டு இருக்க வேண்டும் என்றும், தடையை மீறி மதுபான விற்பனை, மதுபான […]
தூத்துக்குடி மாவட்டத்தில் நாளை மதுபான விற்பனைக்கு தடை விதித்து தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் உததரவு. தூத்துக்குடி மாவட்டத்தில் நாளை திருச்செந்தூர் கந்த சஷ்டி விழா மற்றும் தேவர் ஜெயந்தி அனுசரிக்கப்படும் நிலையில் ஞாயிற்றுக்கிழமையான நாளை மதுபான விற்பனைக்கு தடை விதித்து தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் உத்தரவிட்டுள்ளார். மேலும் தூத்துக்குடி மாவட்டத்தில் இயங்கி வரும் அனைத்து அரசு மதுபான கடைகளும், மதுபான கூடங்களும் மூடப்பட்டு இருக்க வேண்டும் என்றும், தடையை மீறி மதுபான விற்பனை, மதுபான […]
தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருவதால் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தற்காப்புக்காக துப்பாக்கி சூடு நடத்தவில்லை என அறிக்கையில் தகவல். தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பான, ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையத்தின் விசாரணை அறிக்கை சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்யப்பட்டது. அந்த அறிக்கையில், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு உள்ளே இறந்த 5 பேர்களின் கைகளில் எந்த ஆயுதமும் இல்லை, முதல் துப்பாக்கிசூடு நடைபெற்று உயிரிழப்பு ஏற்பட்ட பின்னர் தான் ஆட்சியர் வளாகத்திற்குள் முதல் வாகனங்களுக்கு தீ வைக்கப்பட்டுள்ளது. காவலர் சுடலைக்கண்ணு […]
தூத்துக்குடி மாவட்டம், கடம்பூர் பேரூராட்சி சாதாரண தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று நடைபெறும் நிலையில், அப்பகுதியில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை. தூத்துக்குடி மாவட்டம், கடம்பூர் பேரூராட்சி சாதாரண தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று நடைபெறவுள்ளது. இதனையடுத்து, பேரூராட்சி எல்லைக்குட்பட்ட பகுதிகளில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அளிக்கப்படுகிறது.
மலேசியாவில் இருந்து தூத்துக்குடி துறைமுகம் வழியாக கடத்திவரப்பட்ட 10 டன் போதை பொருட்களை மத்திய வருவாய் துறை அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர். இந்தியாவில் உள்ள துறைமுகங்களின் வாயிலாக வெளிநாட்டில் இருந்து இந்தியாவுக்குள் போதை பொருள் கடத்த முயற்சிப்பதும், அதனை அதிகாரிகள் பிடிப்பதும் அண்மைக்காலமாக தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது. அதே போல , தற்போதும் இந்திய துறைமுகத்தில் டன் கணக்கில் போதை பொருள் சிக்கியுள்ளது. தமிழகத்தில் தூத்துக்குடி துறைமுகத்தின் வழியாக, மலேசியாவில் இருந்து 10 டன் போதைபொருள்கள் கடத்த […]
குலசை தசரா திருவிழாவில் பக்தி பாடல்கள் அல்லாத பாடல்கள் மற்றும் சினிமா பாடல்கள் பாட தடை விதித்து நீதிமன்றம் உத்தரவு. ஒவ்வொரு வருடமும் குலசை தசரா திருவிழா வெகு விமர்சையாக நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டும் குலசை தசரா திருவிழா நடைபெறவுள்ள நிலையில், இந்த விழாவில் பாடல்களுக்கு நடனமாடுவதற்கு தடை விதிக்க கோரி ராம்குமார் ஆதித்தன் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், குலசை தசரா திருவிழாவில் பக்தி பாடல்கள் […]
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை வாங்குவதற்கு 7 நிறுவனங்கள் முன்வந்துள்ளதாக வேதாந்தா நிறுவனத்தின் தலைவர் அனில் அகர்வால் தகவல் அளித்துள்ளார். தூத்துக்குடியில் வேதாந்த நிறுவனத்துக்கு சொந்தமான ஸ்டெர்லைட் ஆலையால் ஏற்படும் பாதிப்பால்,தூத்துக்குடி மக்கள் இந்த ஆலையை நிரந்தரமாக மூடக் கோரி போராட்டம் நடத்தினர். அந்த வகையில், கடந்த 2018 ஆம் ஆண்டு மே 22-ஆம் தேதி நடந்த போராட்டத்தில் காவல்துறை நடத்திய தூப்பாக்கி சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர். இதனைத் தொடர்ந்து, 2018 ஆம் ஆண்டு மே 28 […]
தூத்துக்குடி பனிமய மாதா 10ஆம் நாள் திருவிழாவை முன்னிட்டு மாவட்டம் முழுவதும் ஆகஸ்ட் 5ஆம் தேதி உள்ளூர் அறிவிக்கப்பட்டுள்ளது. வருடந்தோறும் தூத்துக்குடியில் அமைந்துள்ள தூய பனிமய மாதா கோவில் திருவிழா தொடர்ந்து 10 நாட்கள் கொண்டாடப்படும். அதற்காக , இன்று கொடியேற்றத்துடன் முதல் நாள் திருவிழா ஆரம்பமானது. இந்த திருவிழாவை காண, ஜாதி, மத பேதமின்றி தூத்துக்குடி மாவட்ட மக்கள் அனைவரும் கலந்துகொள்வர். திருவிழாவின் கடைசி நாளான 10ஆம் நாள் வெகு விமர்சையாக இருக்கும். அதனை முன்னிட்டு […]
தூத்துக்குடி பனிமயமாதா பேராலயத்தின் 440வது ஆண்டு திருவிழா இன்று கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது. ஒவ்வொரு வருடமும் தூத்துக்குடி பனிமய மாதா பேராலய திருவிழா ஜூன் 26 ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் மாதம் 5ஆம் தேதி வரை நடைபெறுவது வழக்கம். இந்த நிலையில் கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா பரவல் காரணமாக பக்தர்கள் இன்றி விழா நடைபெற்றது. இதனையடுத்து, இந்த ஆண்டு திருவிழாவானது வழக்கம்போல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி தூத்துக்குடி பனிமயமாதா பேராலயத்தின் 440வது ஆண்டு […]
ஸ்டெர்லைட் ஆலையின் கழிவுகளை அகற்ற அனுமதி கோரிய வேதாந்தா நிறுவன விண்ணப்பத்தை பரிசீலிக்க உத்தரவு. தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையின் கழிவுகளை அகற்ற அனுமதி கோரிய வேதாந்தா நிறுவன விண்ணப்பத்தை தமிழ்நாடு சுற்றுச்சூழல் துறை செயலர் பரிசீலித்து 3 மாதத்தில் உரிய முடிவெடுக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு பிறப்பித்தது. இதுதொடர்பாக வேறு நபர்கள் எதிர்ப்பு தெரிவித்தால் அதையும் பரிசீலிக்க வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். ஸ்டெர்லைட் ஆலையின் கழிவுகளை அகற்ற அனுமதி கோரி வேதாந்தா நிறுவனம் […]
தூத்துக்குடி ஆட்சியர் செந்தில் ராஜ், அச்சிடப்பட்ட பேப்பரில், வடை, பஜ்ஜி தர தடை விதித்து உத்தரவிட்டுள்ளார். பொதுவாக டீ கடைகளில் வடை, பஜ்ஜி போன்ற பலகாரங்களை செய்தி தாள்களில் தான் கொடுப்பதுண்டு. இந்த நிலையில், தூத்துக்குடி ஆட்சியர் செந்தில் ராஜ், அச்சிடப்பட்ட பேப்பரில், வடை, பஜ்ஜி தர தடை விதித்து உத்தரவிட்டுள்ளார். தடையை மீறி அச்சிடப்பட்ட பேப்பரில், வடை, பஜ்ஜி விநியோகிக்கப்பட்டால், அபராதம் விதிக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.
தூத்துக்குடியில் வேதாந்த நிறுவனத்துக்கு சொந்தமான ஸ்டெர்லைட் ஆலையால் ஏற்படும் பாதிப்பால்,தூத்துக்குடி மக்கள் இந்த ஆலையை நிரந்தரமாக மூடக் கோரி போராட்டம் நடத்தினர்.அந்த வகையில்,கடந்த 2018 ஆம் ஆண்டு மே 22-ஆம் தேதி நடந்த போராட்டத்தில் காவல்துறை நடத்திய தூப்பாக்கி சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர்.இதனைத் தொடர்ந்து,2018,மே 28 ஆம் தேதி முதல் ஸ்டெர்லைட் ஆலையை மூட தமிழக அரசு உத்தரவு பிறப்பித்திருந்தது. இந்நிலையில்,தூத்துக்குடியில் உள்ள தங்களது ஸ்டெர்லைட் ஆலையை விற்பனை செய்வதாக வேதாந்தா நிறுவனம் அறிவிப்பு விடுத்துள்ளது. […]
பள்ளி வாகனத்தில் கேமரா மற்றும் வேகக்கட்டுப்பாட்டு சாதனம் இருந்தால் மட்டுமே இயக்க அனுமதி வழங்கப்படும் என்று தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். நாளை மறுநாள் தமிழகத்தில் முழுவதும் 1 முதல் 10-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில், தூத்துக்குடியில் பள்ளி வாகனங்களை ஆய்வு செய்தார் அம்மாவட்ட ஆட்சியர். இதன்பின் பேசிய அவர், பள்ளி வாகனத்தில் இது இருந்தால் மட்டுமே இயக்க அனுமதி வழங்கப்படும் என கூறினார்.
தூத்துக்குடியில்மதுபோதையில் ரயில் தண்டவாளத்தில் படுத்துறங்கிய 3 பேர் மீது ரயில் ஏறி இறங்கியதில் 2 பேர் உயிரிழப்பு. தூத்துக்குடியில் மதுபோதையில் ரயில் தண்டவாளத்தில் படுத்துறங்கிய 3 பேர் மீது ரயில் ஏறி இறங்கியதில் 2 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. ஜெபசிங், திருவிக நகரை சேர்ந்த மாரிமுத்து, பசும்பொன் நகரை சேர்ந்த மாரிமுத்து ஆகிய 3 பேரும் மதுபோதையில் 3-வது மைல் மேம்பாலத்தின் கீழே உள்ள தண்டவாளத்தில் உறங்கியுள்ளனர். அப்போது அந்த வழியே […]
தூத்துக்குடி ஸ்டெர்லைட் துப்பாக்கிசூடு வழக்கு தொடர்பாக இன்று 64 பேர் மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர். தூத்துக்குடி துப்பாக்கிசூடு வழக்கு விசாரணையை ஜூன் 6-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து மதுரை மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டது. தூத்துக்குடி ஸ்டெர்லைட் துப்பாக்கிசூடு வழக்கு தொடர்பாக இன்று 64 பேர் மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜராகினர். கடந்த 2018-ம் ஆண்டு மே மாதம் 22-ம் தேதி தூத்துக்குடி மாவட்டத்தில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடியதால் 13 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். இந்த போராட்டம் தொடர்பாக […]
தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் உயிரிழந்தவர்களுக்கு இன்று 4-ஆம் ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது. தூத்துக்குடியில் இயங்கி வந்த ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக,கடந்த 2018-ம் ஆண்டு மே மாதம் 22-ம் தேதி தூத்துக்குடி மக்கள் நடத்திய போராட்டத்தில் போலீசார் துப்பாக்கி சூடு நடத்தினர்.இதில்,13 பேர் பரிதாமாக கொல்லப்பட்டனர்.இந்த சம்பவம் தமிழகத்தையே உலுக்கியது. இந்நிலையில்,தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் உயிரிழந்தவர்களுக்கு இன்று 4-ஆம் ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது.இந்த நிலையில்,காவல் சட்டம் நடைமுறையில் உள்ளதால் வெளி மாவட்டத்தினர் கலந்து கொள்ள அனுமதியில்லை […]
தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் உயிரிழந்தவர்களுக்கு நாளை 4-ஆம் ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்படவுள்ளது. தூத்துக்குடியில் இயங்கி வந்த ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக, தூத்துக்குடி மக்கள் நடத்திய போராட்டத்தில் போலீசார் துப்பாக்கி சூடு நடத்தினர். இதில், 13 பேர் பரிதாமாக கொல்லப்பட்டனர்.இந்த சம்பவம் நடந்து 4 ஆண்டுகள் கடந்துள்ளது. தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் உயிரிழந்தவர்களுக்கு நாளை 4-ஆம் ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்படவுள்ளது. இந்த நிலையில், காவல் சட்டம் நடைமுறையில் உள்ளதால் வெளி மாவட்டத்தினர் கலந்து கொள்ள அனுமதியில்லை […]