யாரும் குழந்தைகளை அழைத்து போராட்ட வேண்டாம்… தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தல்..!!
ஸ்டெர்லைட் ஆலைக்கெதிர்க்க யாரும் குழந்தைகளை அழைத்து வர வேண்டாம் என்று தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடியில் மூடப்பட்டுள்ள ஸ்டெர்லைட் ஆலையை திறக்கலாம் என்று தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டதை தொடர்ந்து தூத்துக்குடியில் மக்கள் மீண்டும் தங்களின் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர்.இந்நிலையில் மக்கள் குறை தீர்க்கும் நாளான இன்று ஏராளமான பொதுமக்கள் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக மனு அளித்த வந்தனர். இதைத்தொடர்ந்து , செய்தியர்களிடம் பேசிய மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி யாரு வேண்டுமானாலும் மனு அளிக்கலாம் , ஆனால் குழந்தைகளை அழைத்துக் கொண்டு வரவேண்டாம்.அதே போல ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக முறையீடு செய்யும் எல்லா நடவடிக்கையையும் அரசு மேற்கொண்டு வருகின்றது.எனவே ஸ்டெர்லைட் ஆலைக்கெதிராக யாரும் குழந்தைகள் , முதியோர்களை அழைத்துக்கொண்டு போராட்டம் நடத்த வேண்டாம் என்று அறிவுறுத்திய மாவட்ட ஆட்சியர் வருகின்ற ஜனவரி முதல் வாரம் முதல் தூத்துக்குடியில் பிளாஸ்டிக் பொருட்கள் நிறுத்தப்படும் அதுவரை அதற்கான விழிப்புணர்வு நடத்த இருக்கின்றோம் என்றும் தெரிவித்தார்.