“இந்திய மாணவர் சங்கம் தூத்துக்குடியில் நூதன போராட்டம்” உயர்கல்வி அமைச்சருக்கு அஞ்சல் அட்டையை அனுப்பினர்..!!
திருநெல்வேலி மாவட்டம் , அபிஷேகப்பட்டியில் உள்ள மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம்.இது திருநெல்வேலி , தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி என 3 மாவட்டத்தில் உள்ள 70 க்கும் மேற்பட்ட கல்லூரிகளை கட்டுப்படுத்தி வருகின்றது. இப்பல்கலைக்கழகத்திற்கு உட்பட்டு சுமார் ஒண்டரை லட்சம் மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர்.அப்பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் பாஸ்கர் அனைத்து கல்லூரிகளுக்கும் ஒரு அறிக்கை வெளியிடடார்.
அவ்வறிக்கையில் பல்கலைக்கழகத்திற்கு கீழ் செயல்படும் கல்லூரிகள் இதுவரை தமிழில் தேர்வு எழுதிக் கொண்டு இருந்தது தற்போது தடை விதிக்கப்பட்டுள்ளது என்றும் இனிமேல் தேர்வை ஆங்கிலத்தில் தான் எழுத வேண்டும் என்றும் அதில் இருந்ததாக மாணவர்கள் குற்றம் சாட்டினர்..
ஆங்கிலத்தில் தேர்வு எழுத வேண்டும் என்ற முடிவு மாணவர்கள் மத்தியில் எதிர்ப்பு கிளப்பியது.இதனால் இந்திய மாணவர் சங்கம் சார்பில் கல்லூரி மாணவர்கள் கல்லூரி வளாகத்தில் போராட்டத்தை தொடங்குவதாக அறிவித்தனர்.
கல்லூரி வளாகத்தில் கையெழுத்து இயக்கம் , கருப்பு அட்டை அணிந்து செல்லுதல் , வகுப்பு புறக்கணிப்பு போராட்டம் என போராட்டத்தை முன்னெடுத்தனர்.அது மட்டுமில்லாமல் திருநெல்வேலி , தூத்துக்குடி , கன்னியாகுமரி ஆகிய மூன்று மாவட்டத்தில் உள்ள ஆயிரக்கணக்கான மாணவர்களை திரட்டி பல்கலைக்கழகம் முற்றுகை போராட்டமும் நடத்தினர்.இதில் இந்திய மாணவர் சங்கத்தின் மாநில செயற்குழு உறுப்பினர்கள் சுரேஷ் , சத்யா மற்றும் மாநிலக்குழு உறுப்பினர்கள் தினேஷ் , ஜாய்சன் , சுப்புலெட்சுமி மற்றும் திருநெல்வேலி , தூத்துக்குடி , கன்னியாகுமரி மாவட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.அப்போது பல்கலைக்கழக நிர்வாகம் மாணவர்களிடம் நடத்திய பேச்சுவார்த்தையில் பல்கலைக்கழக நிர்வாகம் அளித்த வாக்குறுதியின் அடிப்படையில் போராட்டத்தை தற்காலிகமாக ஒத்தி வைத்தனர்.இந்நிலையில் பல்கலைகழக நிர்வாகம் மாணவர்களிடம் அளித்த வாக்குறுதியை நிறைவேற்றுவதாக இல்லை என்று தெரிகிறது.இதனால் ஆத்திரமடைந்த மாணவர்கள் பல்கலை கழகத்தின் ஆங்கில மொழி கட்டாயமாக்கலுக்கு எதிராக இந்திய மாணவர் சங்கம் சார்பில் மீண்டும்போராட்டத்தை அறிவித்தனர்.குறிப்பாக இந்திய மாணவர் சங்கம் (SFI) தூத்துக்குடி மாவட்டக்குழு சார்பில் இன்று மீண்டும் ஆங்கில மொழி தேர்வு முறையை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தியும் , உயர்த்தப்படட கான்டொனேசன் கட்டணத்தை முழுமையாக ரத்து செய்ய வேண்டி தமிழக உயர்க்கல்வி அமைச்சருக்கு தபால் அட்டை அனுப்பும் நூதன போராட்டத்தை தொடங்கினர்.இதற்கு இந்திய மாணவர் சங்கம் தூத்துக்குடி மாவட்ட தலைவர் ஜாய்சன் தலைமை தாங்கினார்.மாவட்ட செயலாளர் இ.சுரேஷ் முன்னிலை வகித்தார்.மாநிலக்குழு உறுப்பினர் சுப்புலட்சுமி தபால்அட்டையை அனுப்பி தொடக்கி வைத்தார்.
இதில் இந்திய மாணவர் சங்கத்தின் தூத்துக்குடி மாவட்ட துணை தலைவர் கார்த்திக் , தூத்துக்குடி மாவட்ட செயற்குழு உறுப்பினர் மஹேஸ்வரி , மாநகர தலைவர் மணி மற்றும் காமராஜ் கல்லூரி மாணவ மாணவிகள் ஆயிரக்கணக்கான தபால் அட்டைகளுடன் கலந்து கொண்டனர்.
இந்திய மாணவர் சங்கம் (SFI) தூத்துக்குடி மாவட்ட தலைவர் , செயலாளர் கூறுகையில் , திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகதின் துணை வேந்தர் பாஸ்கர் ஏழை மாணவர்களின் கல்வியை சீரழிக்க வேண்டுமென்று செயல்படுகிறார்.பல்கலைகழக நிர்வாகம் முழுவதும் ஊழல் நிறைந்துள்ளது. பல்கலைக்கழக துணைவேந்தர் 1 1/2 லட்சம் மாணவ மாணவிகளின் கல்வியை சீரழிக்கும் எல்லா நடவடிக்கைகளிலும் ஈடுபட்டு விட்டு பரிகாரம் தேடிக்கொள்வதற்காக “கோவில் கோவிலாக சென்று சாமி” ஆடிவருகிறார்.தமிழில் தேர்வு எழுத வேண்டும் என்று காலகாலமாக இருந்த பழைய நடைமுறையை மாற்றும் முடிவை கைவிட வேண்டும்.அது மட்டும் இல்லாமல் புதிதாக உயர்த்தியுள்ள கான்டொனேசன் கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும் இல்லையென்றால் இந்திய மாணவர் சங்கம் தமிழகம் முழுவதும் மாணவர்களை திரட்டி போராட்டம் நடத்தும் தெரிவித்துக் கொள்கிறோம் என்று தெரிவித்தனர்.
DINASUVADU