தூத்துக்குடி; லூர்தம்மாள்புரத்தில் இருந்து கடந்த 12–ந்தேதி மீனவர்கள் கடலில் மீன்பிடிக்க புறப்பட்டு சென்றனர். தூத்துக்குடி திரேஸ்புரத்தைச் சேர்ந்த சேசுராஜிக்கு சொந்தமான நாட்டுப்படகில் லூர்தம்மாள்புரத்தைச் சேர்ந்த கென்னடி வயது 43 பூபாலராயர்புரத்தைச் சேர்ந்த பிரதீப் 32 வயது,மற்றும் சதன், வெனிலாஸ், லைஸ்டன் ஆகிய 5 மீனவர்கள் கடலில் மீன்பிடிக்க சென்றனர்.
இவர்கள் கடலில் மீன்பிடித்து விட்டு, நேற்று முன்தினம் இரவில் நாட்டுப்படகில் கரைக்கு திரும்பி வந்து கொண்டிருந்தனர். திடீரென்று படகில் ஓட்டை விழுந்தது.இதனால் படகு முழுவதும் தண்ணீர் நிரம்பியதால், கடலில் மூழ்கியது. இதனால் கடலில் குதித்த 5 மீனவர்களும் தண்ணீரில் தத்தளித்தவாறு உயிருக்கு போராடினர். அப்போது அந்த வழியாக நாட்டுப்படகில் வந்த மீனவர்கள், கடலில் தத்தளித்த 5 மீனவர்களையும் மீட்கப்பட்டனர் இதில் கென்னடி என்பவர் அளவுக்கு அதிகமாக கடல்நீரை குடித்ததால், அவர் பரிதாபமாக உயிரிழந்தார். அவரது உடலை மீனவர்கள் மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். பின்னர் அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து தூத்துக்குடி கடலோர காவல்படையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னை : மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 24வது மாநில மாநாடு நேற்று விழுப்புரம் மாவட்டத்தில் நடைபெற்றது. விழுப்புரம்-சென்னை சாலையிலுள்ள தனியாா்…
சென்னை : புதுக்கோட்டை மாவட்டம் தச்சங்குறிச்சியில் இந்த ஆண்டின் முதல் ஜல்லிக்கட்டு போட்டியானது தொடங்கி நடைபெற்று வருகிறது. பல்வேறு மாவட்டங்களில்…
திருவனந்தபுரம் : கேரளா மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டத்தில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு ஆண்டுதோறும் விரதம் இருந்து வரும் பக்தர்களின்…
விழுப்புரம் : விக்கிரவாண்டியில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளியில் எல்கேஜி பயின்று வந்த லியா லட்சுமி என்ற மூன்றரை வயது…
சிட்னி : இன்று பார்டர் கவாஸ்கர் தொடரின் 5வது டெஸ்ட் போட்டியின் 2வது நாள் ஆட்டம் சிட்னி மைதானத்தில் தொடங்கி…
சென்னை: விக்கிரவாண்டியில் தனியார் பள்ளியில் செப்டிக் டேங்கில் விழுந்து, லியா லட்சுமி என்ற 5 வயது குழந்தை உயிரிழந்தது. செப்டிக் டேங்கின்…