தென்மாவட்டத்தில் புகழ்பெற்ற குடவரை கோவில் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கோவில்பட்டி அருகேயுள்ள கழுகுமலையில் இருக்கும் கழுகசாலமூர்த்தி திருக்கோவிலாகும், இக்கோவிலில் நடைபெறும் திருவிழாக்களில் பங்குனி உத்திர பிரம்மோற்சவ விழாவானது வருட வருடம் வெகுவிமரிசையாக நடைபெறும். 13நாள் நடைபெறும் இத்திருவிழா நடைபெறும். இந்தாண்டுக்கான பங்குனி உத்திர திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதனை முன்னிட்டு அதிகாலை கோவில் நடை திறக்கப்பட்டு கருவறையில் உள்ள மூலவர் மற்றும் பரிவாரமூர்த்திகளுக்கு சிறப்பு யாகம் மற்றும் பூஜைகள் நடைபெற்றது. தொடர்ந்து மூலவர் சன்னத்திக்கு எதிரே அமைந்துள்ள கொடிமரத்தில் கொடியேற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதனை தொடர்ந்து சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்கார தீபாராதனைகள் நடைபெற்றது.இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். விழாவின் ஒவ்வொரு நாளும் கழுகசாலமூர்த்தி ஒவ்வொரு வாகனத்தில் எழுந்தருளி ரத வீதியில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கவுள்ளார். விழாவின் முக்கிய நிகழ்ச்சிகளான திருத்தேரோட்டம் வரும் 29ந்தேதியும், திருக்கல்யாணம் வரும் 31ந்தேதியும் நடைபெறுகிறது.
சேலம் : பள்ளி மாணவர்களை பள்ளிகளில் வேலை வாங்கும் நிகழ்வுக்கு அவ்வபோது உயர் கல்வி அதிகாரிகள் நடவடிக்கைகள் எடுத்து வந்தாலும்,…
சென்னை : கடந்த அக்டோபர் 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் உள்ள வி.சாலை பகுதியில் தமிழக வெற்றிக் கழகம்…
சென்னை : தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் இன்று ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.…
ஆஸ்திரேலியா : அதானி குழுமத்திற்கு இந்த வாரம் அடிமேல் அடியாக விழுந்து கொண்டிருக்கிறது. ஏற்கனவே அமெரிக்க வழக்கறிஞர்கள் அளித்த லஞ்ச…
சென்னை : முன்னாள் பாலிவுட் நடிகையும், டிவி ரியாலிட்டி ஷோ 'பிக் பாஸ்' இன் மூலம் பிரபலமான சனா கான்…
பெர்த் : பார்டர்-கவாஸ்கர் கோப்பை தொடரின் முதல் போட்டி இன்று பெர்த் மைதானத்தில் தொடங்கியது. இந்த போட்டியில் முதலில் டாஸ்…