பகத்சிங் பிறந்தநாள் : இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் அனுசரிப்பு ..!!
பகத்சிங்கின் 111வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு இந்திய ஜனநாயக வாலிபர் (DYFI) சார்பில் தூத்துக்குடி 47ஆவது வார்டு பகுதியில் கொடி ஏற்றி அனுசரிக்கப்பட்டது.
இந்தியாவின் சுதந்திர போராட்ட மாவீரன் , 22 வயதில் தூக்கு கயிறுக்கு முத்தமிட்டு வீர மரணம் அடைந்து இளைஞர்கள் மத்தியில் சுத்தத்திர தாக்கத்த்தை உண்டாக்கிய இளைஞர்களின் நாயகன் பகத்சிங்கின் 111வது பிறந்தநாள் விழா இந்திய முழுவதும் அனுசரிக்கப்பட்டு வருகிறது.குறிப்பாக இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் கொடியேற்றியும் , இனிப்பு , இரத்ததனமுகாம் நடத்தியும் அனுசரிக்கின்றனர்.அந்த வகையில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் தூத்துக்குடி மாநகரகுழு சார்பில் இன்று தூத்துக்குடி 47ஆவது வார்டு பகுதியில் உள்ள இந்திய ஜனநாயக வாலிபர் சங்க கொடி கம்பத்தில் கொடி ஏற்றப்பட்டது.இதற்கு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மாநகரக்குழு உறுப்பினர் முத்துகிருஷ்ணன் தலைமை தாங்கினார்.இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மாநகரக்குழு உறுப்பினர் அருண் முன்னிலை வகித்தார்.மாநகர தலைவர் காஸ்ட்ரோ கொடி ஏற்றி பகத்சிங் குறித்து சிறப்புரை ஆற்றினார்.இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் விண்ணதிர முழக்கங்கள் எழுப்பி கொடி ஏற்றியது அந்த பகுதி மக்களை கவர்ந்தது.அதுமட்டுமில்லாமல் “மதவாதம் தரட்டும்” என்ற முழக்கங்கள் அந்த பகுதி மக்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றது.இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தூத்துக்குடி 47ஆவது வார்டு செயலாளர் ஆறுமுகம் ,பரமசிவம் , ஜேம்ஸ் மற்றும் திரளானோர் பங்கேற்றனர்.
DINASUVADU