தூத்துக்குடி ,
டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைகழக மாணவர் பேரவை தேர்தலில் இடதுசாரி மாணவர் அமைப்புகள் வெற்றி பெற்றதை கொண்டாடும் விதமாகவும் வெற்றி பெற்ற நிர்வாகிகளை வாழ்த்தும் விதமாக இந்திய மாணவர் சங்கம் தூத்துக்குடி மாவட்டக்குழு சார்பில் பழைய பேருந்து நிலையம் முன்பு பட்டாசுகள் வெடித்து இனிப்புகள் வழங்கப்பட்டது .டெல்லி பல்கலைக்கழகத்தில் மாணவர் பேரவைத் தேர்தல் சமீபத்தில் நடைபெற்றது. இதில் தலைவர், துணை தலைவர், செயலாளர், இணை செயலாளர் ஆகிய நான்கு பதவிகளுக்கு நடந்த தேர்தலில் பலத்த போட்டி காணப்பட்டது.
இந்நிலையில் நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையில் ஐக்கிய இடதுசாரி கூட்டணியை சேர்ந்த சாய் பாலாஜி தலைவர் தேர்தலிலும், சரிகா சவுத்ரி துணை தலைவர் தேர்தலிலும், ஐஜாஸ் அஹமத் ராத்தெர் பொதுச் செயலாளர் தேர்தலிலும் , அமுதா ஜெயதீப் துணை பொதுச் செயலாளர் தேர்தலிலும் முன்னிலை பெற்று வென்றனர்.இதை கொண்டாடும் விதமாக இந்தியா முழுவதும் இடதுசாரி மாணவர் அமைப்புகள் பட்டாசு வெடித்தும்,இனிப்பு வழங்கியும் கொண்டாடி வருகிறார்கள்.
அதன் ஒரு பகுதியாக இன்று இந்திய மாணவர் சங்கம்(SFI) தூத்துக்குடி மாவட்டக்குழு சார்பில் பழைய பேருந்து நிலையம் அருகில் பட்டாசு வெடித்தும் , இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினர்.அதுமட்டுமல்லாமல் மதவாத சக்திகளை வீழ்த்திடுவோம் , பாசிச பாஜக ஆட்சிக்கு முடிவு கட்டுவோம் , மதவாதத்தை முறியடிப்போம் என்ற முழக்கங்களை இந்திய மாணவர் சங்கத்தினர் எழுப்பினர்.
இந்த நிகழ்வில் இந்திய மாணவர் சங்கத்தின் தூத்துக்குடி மாவட்ட தலைவர் ஜாய்சன் தலைமை தாங்கினார்.இந்திய மாணவர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் இ.சுரேஷ் , மாவட்ட துணை தலைவர் கார்த்திக் , மாநகர செயலாளர் மணிகண்டன் , ஒன்றிய தலைவர் மாரி ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்திய மாணவர் சங்கதினர் மத்திய அரசின் மதவாதத்துக்கெதிராக எழுப்பிய கோஷம் வேடிக்கை பார்த்த பொதுமக்களை உற்சாகப்படுத்தியதாக மக்கள் தெரிவித்தனர்.அதுமட்டுமில்லாமல் மாணவர் சமுதாயத்தால் மட்டுமே இந்த நாட்டை காப்பாற்ற முடியும் அதை இந்திய மாணவர் சங்கம் செய்யும் என்று மாணவர்களை வாழ்த்தி BJPயின் ABVP தோல்வியை இனிப்பு எடுத்து கொண்டாடினர்.
DINASUVADU
சென்னை : 2025ஆம் ஆண்டுக்கான பொது விடுமுறை நாள்கள் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி, 2025-ஆம்…
பெர்த் : ஆஸ்திரேலியாவுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி பெர்த் மைதானத்தில் நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடி…
சென்னை : ஏ.ஆர்.ரஹ்மானும், சாய்ரா பானுவும் 29 வருட 29 வருட திருமண வாழ்க்கைக்குப் பிறகு விவாகரத்து செய்வதாக நவம்பர்…
மும்பை : அதானி குழுமம் மீது முன்னர் அமெரிக்காவை சேர்ந்த ஹிண்டன்பர்க் நிறுவனம் குற்றசாட்டை முன்வைத்தது அப்போது அந்த அறிக்கை…
சென்னை : ஏ.ஆர்.ரஹ்மானும் மனைவி சாய்ரா பானுவும் திருமணமாகி 29 ஆண்டுகளுக்குப் பிறகு பிரிந்து வாழ முடிவு செய்துள்ளதாகவும், இருவரும்…
டெல்லி : அதானி குழுமத் தலைவர் கெளதம் அதானி மீது அமெரிக்க வழக்கறிஞர்கள் நியூயார்க் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர். அதில்,…