ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி,இந்திய மாணவர் சங்கத்தின் சார்பில் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முற்றுகை …!
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை,ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி, முற்றுகையிட முயன்ற கல்லூரி மாணவர்களுக்கும், போலீசாருக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தி, தூத்துக்குடியில் உள்ள கல்லூரி மாணவர்கள் வகுப்பு புறக்கணிப்பு போராட்டங்களில் ஈடுபட்டனர்.இந்திய மாணவர் சங்கம் சார்பில் வ.உ.சி. கல்லூரி, காமராஜர் கல்லூரி, போப் கல்லூரிகளைச் சேர்ந்த மாணவர்களும், அரசு ஐ.டி.ஐ. மாணவர்களும் இன்று வகுப்புகளைப் புறக்கணித்தனர். இவர்கள் அனைவரும் நெல்லை பைபாஸ் சாலையில் ஒன்று திரண்டு, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிடுவதற்காக ஊர்வலம் நடத்தினர். மாணவர்களைத் தடுக்க போலீசார் ஏற்படுத்தியிருந்த தடுப்புகளை அவர்கள் அகற்ற முயன்றனர். இதைத் தடுத்ததால், போலீசாருக்கும் மாணவர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
போலீசாரின் தடுப்புகளை அகற்றி வீசிய மாணவர்கள், ஸ்டெர்லை ஆலைக்கு எதிரான முழக்கங்களை எழுபபியவாறே ஆட்சியர் அலுவலக வளாகத்துக்குள் நுழைந்தனர். அங்கு ஆட்சியர் அலுவலக கட்டிடம் முன் தரையில் அமர்ந்த அவர்கள், ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.