ஸ்டெர்லைட் ஆலையை மூட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதால் தேவையின்றி போராட வேண்டாம்…!அமைச்சர் கடம்பூர் ராஜூ
அமைச்சர் கடம்பூர் ராஜூ ,ஸ்டெர்லைட் ஆலையை மூட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதால் தேவையின்றி போராட வேண்டாம் என கேட்டுக்கொண்டுள்ளார்.
கோவில்பட்டி உழவர் சந்தையில் வேளாண்துறை சார்பில் கூட்டுப்பண்ணையம் முறையில் விவசாயிகளுக்கு வேளாண் கருவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் அமைச்சர் கடம்பூர் ராஜூ கலந்து கொண்டு டிராக்டர் உள்ளிட்ட வேளாண் உபகரணங்களை வழங்கினார்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து ஸ்டெர்லைட் ஆலைக்கான மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் உரிமத்தை புதுப்பிக்க மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளதாக கூறினார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.