தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் 1000-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் சாலை மறியல் …!
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தித் முற்றுகையிடப்பட்டது. ஸ்டெர்லைட் தாமிர ஆலையை மூட வலியுறுத்தித் தூத்துக்குடியில் பல்வேறு போராட்டங்களில் பொதுமக்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் இன்று தூத்துக்குடி குமரரேட்டியாபுரம்,சில்வர்புரம்,மடத்தூர், முருகேசன் நகர்,பாலையாபுரம்,சுப்ரமணியாபுரம்,தெற்கு வீரபாண்டியாபுரம், உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த ஆயிரத்துக்கு மேற்பட்டோர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தினர்.
அப்போது ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதற்கு மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரி அவர்கள் முழக்கமிட்டனர்.இந்நிலையில் அவர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு உள்ளே செல்ல முயன்ற போது அவர்களை போலீசார் தடுத்தனர் .உடனே 1000-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் அனைவரும் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.