தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிர்ப்பு தெரிவித்து பண்டாரம்பட்டி கிராமத்தில் போராட்டம் …!

Default Image

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிர்ப்பு தெரிவித்து  பண்டாரம்பட்டி கிராமத்தில்  போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

தூத்துக்குடியில் உள்ள காப்பர் தயாரிக்கும் ஸ்டெர்லைட் ஆலையால் விவசாயம் பாதிக்கப்படுவதோடு குடிநீரால் அப்பகுதி மக்களும் பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

இதற்கு முன் , தூத்துக்குடியில் இயங்கி வரும் ‘வேதாந்தா’ நிறுவனத்தின் அங்கமான ஸ்டெர்லைட் ஆலையின் 25 ஆண்டு ஒப்பந்தம், அடுத்த ஆண்டு முடிவடைகிறது.ஆலையின் அடுத்த விரிவாக்கத்திற்காக, அந்நிறுவனம் விரிவாக்கப் பணியினை தொடங்கி உள்ளது. ஆலையிலிருந்து வெளியாகும் நச்சுப் புகையால், சுற்றுச்சூழல் பாதிப்பும், சுற்றியுள்ள கிராம மக்களுக்கு, மூச்சுத்திணறல் முதல் புற்று நோய் வரை பல நோய்கள் வருவதாகவும் கூறி, ஸ்டெர்லைட் விரிவாக்கத்திற்கு எதிராக குமரெட்டியாபுரம் கிராம மக்கள் தொடர்ந்து போராடி வருகின்றனர்.இதனால் பொதுமக்கள் 49 நாட்களாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

தூத்துக்குடியில் கடந்த மார்ச் 24ஆம் தேதி நடைபெற்ற போராட்டத்தில், ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்றுள்ளனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. போராட்டத்திற்கு அரசியல் கட்சிகள் சார்பிலும் ஆதரவு தெரிவிக்கப்பட்டு வருகிறது. தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலை மூட வேண்டும் என வலியுறுத்தி நடைபெறும் போராட்டத்திற்கு உலக தமிழர்கள் தரப்பிலும் ஆதரவு தெரிவிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில்  ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டம் சுற்று வட்டார கிராமங்களில் பரவுகின்றது. ஸ்டெர்லைட் ஆலைக்கு அருகேயுள்ள பண்டாரம்பட்டி கிராமத்தில்  இன்று மாலை (ஏப்ரல் 1) முதல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். குமரெட்டியாபுரத்தை தொடர்ந்து போராட்டத்தில்  பண்டாரம்பட்டி கிராம மக்களும் ஈடுபட்டுள்ளனர்.இதில் ஈடுபட்டவர்கள் நாளை முதல் தொடர்ந்து போராட்டம் நடத்தப்படும் என்று போராட்டக்குழு தெரிவித்துள்ளது.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்