ஸ்டெர்லைட் முற்றுகை 1000 பேர் கைது…!வேதாந்தாவை கைது செய்ய கே.பாலகிருஷ்ணன் வலியுறுத்தல்…!

Published by
Venu

ஸ்டெர்லைட் முற்றுகை 1000 பேர் கைது.வேதாந்தாவை கைது செய்ய கே.பாலகிருஷ்ணன் வலியுறுத்தல்.

தூத்துக்குடி ஏப்ரல்-4 ஸ்டெர்லைட் ஆலையின் நிறுவனர் வேதாந்தாவை கைது செய்ய வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வலியுறுத்தினார்.

தூத்துக்குடி நகரின் மாபெரும் துயரமாக மாறிவரும் ஸ்டெர்லைட் ஆலையை உடனடியாக மூட வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆலையை முற்றுகையிடும் போராட்டம் புதனன்று நடைபெற்றது.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன்,மத்தியக் குழு உறுப்பினர் உ.வாசுகிஆகியோர் தலைமையில் நடைபெற்ற முற்றுகை  போராட்டத்தில் தூத்துக்குடி மாவட்டச் செயலாளர் கே.எஸ்.அர்ஜுனன்,தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநிலப் பொருளாளர் கே.பி.பெருமாள்,மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு உறுப்பினர் ஆர்.மல்லிகா,மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள்,மாவட்டக் குழு உறுப்பினர்கள்,இடைக்கமிட்டிச் செயலாளர்கள் கட்சி உறுப்பினர்கள்,இந்திய  மாணவர் சங்க மாநிலத் தலைவர் மாரியப்பன் உட்பட சுமார் 1000 பேர் போராட்டத்தில் பங்கேற்றனர்.அதில் 750 பேரை காவல்துறையினர்  கைது செய்தனர்.

இரண்டு இடங்களில் தடுப்பு அரண்கள்:-

ஆலையை நோக்கி ஊர்வலமாக வந்தவர்களை காவல்துறையினர் தடுப்புகள் ஏற்படுத்தித் தடுத்தனர்.அதையும் மீறி கோரிக்கை முழக்கங்களோடு அவர்கள்  முன்னேறினர்.தொடர்ந்து இரண்டாவது இடத்திலும் காவல்துறையினர் தடுப்பு அரண்களை ஏற்படுத்தியிருந்தனர்.அதையும் மீறி ஆலையை நோக்கிச் சென்றவர்களை காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர் .இதையடுத்து கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.அவர்கள் மத்தியில் கே.பாலகிருஷ்ணன் பேசியதாவது:-

நீர்வளத்தையும்,நிலவளத்தையும் ,சுற்றுச்சூழலையும் மாசுபடுத்தும் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடுவதற்கான போராட்டத்தின் தொடக்கம் தான் இது.ஸ்டெர்லைட் ஆலையால் முச்சுத்திணறல் நோயால் ஏராளமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.கேன்சர் நோயால் பலர் இறந்துள்ளதாக மக்கள் தரப்பில்  கூறப்படுகிறது.

சுற்றுச்சூழலை மாசுபடுத்துவதோடு மட்டும் அல்லாமல் வரிஏய்ப்பு செய்வதிலும் ஸ்டெர்லைட் நிறுவனம் புகழ் வாய்ந்ததாக உள்ளது.சட்டத்தை மீறியதற்காக உச்ச நீதிமன்றமும் ,உயர்நீதிமன்றமும் ஆலைக்கு அபராதம் விதித்துள்ளது. தங்கத்தை விட விலை உயர்ந்த பொருட்களை ஆலை நிர்வாகம் கடத்துகிறது.

தூத்துக்குடி மாவட்ட மக்களின் கோரிக்கையான ஸ்டெர்லைட் ஆலையை மூட வேண்டும் என்பதை எடப்பாடி அரசு உதாசினப்படுத்துகிறது.

தூத்துக்குடி மாவட்ட மக்களுக்கு ஸ்டெர்லைட் எமனாக மாறி உள்ளது.கிரிமினல் குற்றவாளியாக இருக்கும் ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகத்தை தமிழக அரசு பாதுகாக்கிறது.ஆலையை மூடா விட்டால் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மக்களைத் திரட்டி மூடும்.ஆலைக்கு வரும் கச்சா பொருள்களையும் ஆலையில் இருந்து உற்பத்தியாகி வெளியில் செல்லும் பொருள்களையும் தடுத்து நிறுத்தும்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நடத்தியுள்ள இந்தப் போராட்டம் எடப்பாடி அரச ஒரு எச்சரிக்கையாக எடுத்துக்கொண்டு ஆலையை உடனடியாக மூட வேண்டும்.கொஞ்சம்கொஞ்சமாக மக்களைக் கொல்லும் இந்த ஆலைக்கான அனுமதியை ரத்து செய்யவேண்டும்.அதன் விரிவாக்கக் பணிகளுக்கு அனுமதி அளிக்கக்கூடாது.வேதந்தாவை உடனடியாகக் கைது செய்ய வேண்டும் என்றார்.

மத்தியக்குழு உறுப்பினர் உ.வாசுகி பேசுகையில்,சுற்றுச்சூழலை மாசுப்படுத்தும் ஸ்டெர்லைட் ஆலை மட்டும் குற்றவாளியல்ல அவர்களை பாதுகாக்கும் மத்திய,மாநில,அரசுகளும் குற்றவாளிகள் தான்.மண்ணின் வளத்தையும்,தூத்துக்குடி மக்களையும் பாதுகாக்கும் போராட்டத்தை மார்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தொடர்ந்து நடத்தும்.மக்களின் பாதுகாவலனாக இருக்கும் .ஸ்டெர்லைட் போராட்டத்தில் வெல்வது நாம்தான் என்றார்.

ஆலையின் பாதிப்புகள் குறித்து மக்கள் கூறியதாவது:- ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம் கொடுத்த வாக்குறுதிகளை மீறி நிலம்,நீர்,வாயுக்கழிவுகளை வெளியேற்றி சுற்றுச்சூழலை சீரழித்து மக்களின் வாழ்வை துச்சமன மிதித்து வருகிறது.மக்கள் போராட்டம் காரணமாக இதுவரை நான்குமுறை ஆலையின் இயக்கம் நிறுத்தப்பட்டுள்ளது.

தாமிர உற்பத்தி,கந்தக ,பாஸ்பாரிக் அமில உற்பத்தி மற்றும் ஹைட்ரோசிலிக் அமிலம் என பல்வேறு அபாயகரமான வேதியியல் பொருட்களை உற்பத்தி செய்கிறது.இவை ஒவ்வொன்றும் தனித்தனியாக தொழிற்சாலை என்றாலே அந்த பகுதி சுடுகாடாகத் தான் மாறும்.இங்கோ அனைத்தும் மொத்தமாக ஒரு இடத்தில் அதுவும் இரட்டிப்பானாலும் தூத்துக்குடியின் நிலை என்னவாகும் என்பதை யூகித்து கொள்ளுங்கள் என்றனர்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

 

Recent Posts

மீண்டும், மீண்டுமா? உ.பி-க்கு ரூ.31 ஆயிரம் கோடி! தமிழ்நாட்டுக்கு ரூ.7 ஆயிரம் கோடி மட்டுமே!

சென்னை : மத்திய அரசு வசூல் செய்யும் ஜிஎஸ்டி வரித்தொகையானது, மாதந்தோறும் மாநிலங்களுக்கு பகிர்ந்தளிக்கப்படும். அவ்வாறு இன்று டிசம்பர் மாதம்…

1 hour ago

இங்கிலாந்து ஒருநாள் தொடரில் கே.எல்.ராகுலுக்கு ஓய்வு.?

கொல்கத்தா: இந்த மாதம் நடைபெறும் இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இந்திய வீரர் கே.எல்.ராகுல் பங்கேற்கமாட்டார் என கூறப்படுகிறது.…

2 hours ago

வைகுண்ட ஏகாதசி 2025-“கோவிந்தா” முழக்கத்துடன் திறக்கப்பட்ட சொர்க்கவாசல்..!

வைகுண்ட ஏகாதசியின் முக்கிய நிகழ்வான பரமபத வாசல் எனும் சொர்க்கவாசல் திறப்பு அனைத்து வைணவ ஆலயங்களிலும் கோலாகலமாக திறக்கப்பட்டது. சென்னை…

2 hours ago

காட்டு பன்றிகள் வேட்டைக்கு அனுமதி! விளக்கம் கொடுத்த அமைச்சர் பொன்முடி!

சென்னை : சமீபகாலமாக விளைநிலங்களில் கட்டு பன்றிகள் நுழைந்து சேதம் ஏற்படுத்தி வருவதால் அதற்கு தகுந்த நடவடிக்கைகளை அரசு எடுத்துக்கொள்ளவேண்டும் என…

2 hours ago

“பெண்களுக்கு பாதுகாப்பான மாநிலம் தமிழ்நாடு தான்”…முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்!

சென்னை :  சட்டப்பேரவையின் 5-வது நாள் கூட்டத்தொடர் இன்று தொடங்கிய நிலையில், அதில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பான சட்டதிருத்த…

3 hours ago

விரைவில் த.வெ.க மாவட்ட செயலாளர்களை தனித் தனியாக சந்திக்கிறார் விஜய்!

சென்னை: தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய், கட்சி மற்றும் கட்சியின் அடுத்தக்கட்ட நடவடிக்கையில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார். அதன் ஒரு…

4 hours ago