ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக ஏ.பீ.சி.மகாலட்சுமி மகளிர் கல்லூரியில் இந்திய மாணவர் சங்கம் தலைமையில் போராட்டம் …!

Default Image

ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி இந்திய மாணவர் சங்கம் தலைமையில் ஏ.பீ.சி.மகாலட்சுமி மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் போராட்டம் நடைபெற்றுவருகிறது.

தூத்துக்குடியில் இயங்கி வரும் ‘வேதாந்தா’ நிறுவனத்தின் அங்கமான ஸ்டெர்லைட் ஆலையின் 25 ஆண்டு ஒப்பந்தம், அடுத்த ஆண்டு முடிவடைகிறது.ஆலையின் அடுத்த விரிவாக்கத்திற்காக, அந்நிறுவனம் விரிவாக்கப் பணியினை தொடங்கி உள்ளது. ஆலையிலிருந்து வெளியாகும் நச்சுப் புகையால், சுற்றுச்சூழல் பாதிப்பும், சுற்றியுள்ள கிராம மக்களுக்கு, மூச்சுத்திணறல் முதல் புற்று நோய் வரை பல நோய்கள் வருவதாகவும் கூறி, ஸ்டெர்லைட் விரிவாக்கத்திற்கு எதிராக குமரெட்டியாபுரம் கிராம மக்கள் தொடர்ந்து போராடி வருகின்றனர்.ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தும், ஆலையை மூடக்கோரியும் 52-ஆம் நாளாக குமரெட்டியாபுரம் மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி இந்திய மாணவர் சங்கம் தலைமையில் ஏ.பீ.சி.மகாலட்சுமி மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் போராட்டம் நடைபெற்றுவருகிறது.இதில் இந்திய மாணவர் சங்க மாநில தலைவர் மாரியப்பன்,மாவட்ட தலைவர் ஆர்.அமர்நாத்,மாவட்ட இணை செயலாளர் இ.சுரேஷ்,மாநகர இணைச் செயலாளர் சுப்புலட்சுமி,ஏ.பீ.சி.கல்லூரி கிளை  பொறுப்பாளர் விக்னேஸ்வரி ஆகியோர் முன்னிலையில் போராட்டம் நடைபெற்றுவருகிறது.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்