தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி தொடர்ந்து 7 வது நாளாக பனிமயமாத கோவில் வளாகத்துக்குள் கருப்புக்கொடி ஏற்றி போராட்டம்!
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி பனிமயமாத கோவில் வளாகத்துக்குள் கருப்புக்கொடி ஏற்றி தொடர்ந்து 7 வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி 17 இடங்களில் பொதுமக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். அ.குமரெட்டியாபுரம் கிராமத்தில் கடந்த பிப்ரவரி மாதம் முதல் தொடர் போராட்டம் நடந்து வருகிறது. அவர்களது போராட்டம் இன்று 66-வது நாளாக நீடிக்கிறது.இதில் ஏராளமான ஆண்களும், பெண்களும் கலந்து கொண்டுள்ளனர்.
இதேபோல் தூத்துக்குடி பனிமயமாத கோவிலை சுற்றியுள்ள பொது மக்கள் அனைவரும் ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி பனிமயமாத கோவில் வளாகத்துக்குள் கருப்புக்கொடி ஏற்றி தொடர்ந்து 7 வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.மேலும் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பொதுமக்கள் ஸ்டெர்லைட் ஆலையை மூடும் வரை போராட்டம் தொடரும் என்று தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் ஸ்டெர்லைட்டு ஆலைக்கு எதிராக தூத்துக்குடியில் தற்போது 17 இடங்களில் போராட்டம் நடைபெற்று வருகிறது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.