ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் 100- க்கும் மேற்பட்டோர் போராட்டம்!
ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் சுமார் 100 க்கும் மேற்பட்டோர் ஸ்டெர்லைட் ஆலையை முற்றுகையிடும் போராட்டத்தில் ஈடுபட்டனர் .
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக 16 இடங்களுக்கும் மேலாக பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் போராடிவருகின்றனர். இதனை அடக்கும் விதமாக காவல்துறையும் பல்வேறு அடக்குமுறைகளை கையாண்டு வருகின்றது .இந்நிலையில் இன்று ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் சுமார் 100 க்கும் மேற்பட்டோர் ஸ்டெர்லைட் ஆலையை முற்றுகையிடும் போராட்டத்தில் ஈடுபட்டனர் .இப்போரட்டதிற்கு அனுமதி வழங்காததால் காவல்துறைக்கும் போரட்டகாரர்களுக்கும் இடையில் தள்ளுமுள்ளு ஏற்ப்பட்டது பின்னர் அவர்களை கட்டுபடுத்த முடியாமல் அனைவரையும் கைது செய்தனர்.
இப்போராட்டத்தில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மாநில துனைசெயலாளர் ரெஜிஸ்குமார் தலைமை தாங்கினார். மேலும் சங்கத்தின் மாவட்ட செயலாளர் எம் எஸ் முத்து மற்றும் நிர்வாகிகள் என பலர் கலந்து கொண்டனர்.இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது .
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள் ….