தூத்துக்குடியில் வெள்ளம் வருவதை மதிப்பீடு செய்ய புதிய முயற்சி!
தூத்துக்குடியில் வெள்ளம் வருவதை மதிப்பீடு செய்ய சென்னை அண்ணா பல்கலைகழக மாணவர்களின் உதவியுடன் ஆள் இல்லா விமானம் மூலம் கண்காணிக்க மாவட்ட ஆட்சியர் ஏற்பாடு செய்தார் .இதனால் வெள்ளம் வரும் முன்னரே அது குறித்த ஆபத்துகளை கண்டறியலாம் .
நீர்நிலை பகுதிகளில் வெள்ளம் வருவதை மதிப்பீடு செய்யவும், வெள்ள பாதிப்பு அதிகம் ஏற்படும் பகுதிகளை கண்டறியவும் உதவும் ஆள்லில்லா விமானம் மூலம் ஆய்வு செய்யும் பணியை இன்று தூத்துக்குடி கோரம்பள்ளம் குளத்தில் இருந்து உபரியாக கடலுக்கு செல்லும் காலாங்கரையில் தாம் போதி பாலத்தில் மாவட்ட ஆட்சியர் வெங்கடேஷ் ஆள் இல்லா விமானத்தை துவக்கி வைத்தார். இப்பணிகள் 40 நாட்கள் நடைபெறும் என்றும் இவ்விமாணம் 170 மீட்டர் வரை பறந்து படம் பிடிக்கும் என்றும்,ஆட்சியர் தெரிவித்தார்..
source: dinasuvadu.com