இன்று வைகாசி விசாக திருவிழா… திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு ஏராளமான பக்தர்கள் நடந்து சென்றனர்.!

Tiruchendur murugan temple

இன்று வைகாசி விசாக திருவிழாவை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு ஏராளமான பக்தர்கள் நடந்து சென்றனர்.

அசுர சக்திகளை வீழ்த்த முருகன் தோன்றிய தினம் தான்  வைகாசி விசாகமாக ஆண்டு தோறும் வைகாசி மாதம் கொண்டாடப்படுகிறது.  இந்த வைகாசி விசாகமானது திருச்செந்தூர் சுப்ரமணியன் கோவிலில் (முருகன் கோவில்) பக்தர்கள் மத்தியில் வெகு விமரிசையாக கொண்டாப்படுகிறது.

இந்த வைகாசி தினத்தை முன்னிட்டு திரளான பக்தர்கள் திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு நடந்தே செல்வது வழக்கம். தூத்துக்குடியில் இருந்து மட்டுமல்லாது தென்தமிழகத்தின் பல்வேறு பகுதியில் இருந்து பல நாட்கள் நடந்து திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு வருவார்கள்.

இன்று வைகாசி விசாக திருவிழாஎன்பதால் , நேற்று மாலை முதலே லட்சக்கணக்கான பக்தர்கள் பாதை யாத்திரையாக திருச்செந்தூர் புறப்பட்டனர். வழிநெடுகிலும், பக்தர்கள் இளைப்பாற தன்னார்வலர்கள் தண்ணீர், குளிர்பானம், நீர் ஆகாரம், உணவு என கொடுத்து வந்தனர். இன்று திருச்செந்தூரில் வைகாசி விசாக திருவிழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்