அதை தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை ஆய்வு செய்ய தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் சார்பில் மேகாலயா ஐகோர்ட்டின் முன்னாள் நீதிபதி தருண் அகர்வால் தலைமையில் 3 பேர் கொண்ட குழுவினர் 22 அன்று தூத்துக்குடி வந்தனர்.அந்தக் குழு மாலையில் ஸ்டெர்லைட் கொட்டி வைத்துள்ள காப்பர் ஸ்லக் கழிவுகளை அங்கு ஆய்வு நடத்தினர்.
இதுதொடர்பாக, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி கூறுகையில், ஸ்டெர்லைட் ஆலையில் ஆய்வு செய்ய 3 பேர் கொண்ட குழு வந்துள்ளது. ஸ்டெர்லைட் ஆலை தொடர்பாக தூத்துக்குடியில் நாளை காலை 11.30 மணிக்கு இந்தக் குழு மக்களிடம் கருத்து கேட்கிறது. அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் நடக்கும் கூட்டத்தில் மக்கள் தங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாம். 2 மணி நேரம் கூட்டம் நடக்கும் என தெரிவித்தார்.
இந்நிலையில் நேற்று காலை தருண் அகர்வால் தலைமையிலான குழுவினர் ஸ்டெர்லைட் ஆலைக்கு சென்று காலை முதலே ஆய்வை தொடங்கினர்.அதை தொடர்ந்து போராட்டம் நடந்த குமாரரெட்டியாபுறம் சென்று மக்களிடம் கருத்து கேட்டனர்.அதை முடித்து விட்டு மக்களிடம் கருத்துக் கேட்க தருண் அகர்வால் தலைமையிலான குழு அரசு பாலிடெக்னிக் வந்து மக்களிடம் கருத்து கேட்டனர்.இது குறித்து இன்று செய்தியாளர்களிடம் பேசிய மதிமுக பொது செயலாளர் வைகோ ஸ்டெர்லைட் ஆலை வேண்டாம் என்று 95 விழுக்காடு மக்கள் தருண் அகர்வால் குழுவினரிடம் தெரிவித்ததாக வைகோ தெரிவித்தார்.அப்போது அவர் பேசும் போது எங்களுக்கு நோய் வருது , எங்களுக்கு முச்சு திணறல் வருது என்று தங்கள் கஷ்டங்களை சொல்லி இந்த ஆலை தங்களுக்கு வேண்டாம் என்று மக்கள் சொல்லி இருக்கீறார்கள்.ஸ்டெர்லைட் ஆலை வேண்டும் என்று ஆட்களை அழைத்து வந்து சொல்ல வைத்துள்ளனர் என்று வைகோ தெரிவித்தார்.
ஸ்டெர்லைட் ஆலை திறக்கவேண்டும் என்று வந்த ஒரு தரப்பினரை மக்கள் விரட்டியடித்தார்கள்.அது மட்டுமில்லாமல் ஸ்டெர்லைட் ஆலை வேண்டாமென்று அதிகமானோர் தெரிவித்ததாக பத்திரிக்கையாளர் சந்திப்பில் தருண் அகர்வால் தெரிவித்தது குறிப்பிடதக்கது.
DINASUVADU