‘ஸ்டெர்லைட் வேண்டாம்’ “வேண்டவே வேண்டாம்” 95 % மக்கள் கருத்து..!!
95 சதவிதம் மக்கள் ஸ்டெர்லைட் ஆலை வேண்டாம் என்று கருத்து தெரிவித்ததாக வைகோ கூறினார்.
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி மே மாதம் நடந்த போராட்டத்தின்போது தடியடி, துப்பாக்கி சூட்டில் 13 பேர் பலியானார்கள். இதைத்தொடர்ந்து அந்த ஆலையை நிரந்தரமாக மூட தமிழக அரசு உத்தரவிட்டது.
இதற்கு எதிராக ஸ்டெர்லைட் நிர்வாகம் தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் மனுதாக்கல் செய்தது. இதை விசாரித்த தீர்ப்பாயம் நிர்வாக பணிகளை மேற்கொள்ள ஸ்டெர்லைட் நிர்வாகத்துக்கு அனுமதி அளித்தது. மேலும் ஆலையை ஆய்வு செய்ய மேகாலயா ஐகோர்ட்டின் முன்னாள் நீதிபதி தருண் அகர்வால் தலைமையில் ஒரு குழுவை கடந்த 30-ம் தேதி தேசிய பசுமை தீர்ப்பாயம் அமைத்து உத்தரவு பிறப்பித்தது.
இதுதொடர்பாக, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி கூறுகையில், ஸ்டெர்லைட் ஆலையில் ஆய்வு செய்ய 3 பேர் கொண்ட குழு வந்துள்ளது. ஸ்டெர்லைட் ஆலை தொடர்பாக தூத்துக்குடியில் நாளை காலை 11.30 மணிக்கு இந்தக் குழு மக்களிடம் கருத்து கேட்கிறது. அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் நடக்கும் கூட்டத்தில் மக்கள் தங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாம். 2 மணி நேரம் கூட்டம் நடக்கும் என தெரிவித்தார்.
ஸ்டெர்லைட் ஆலை திறக்கவேண்டும் என்று வந்த ஒரு தரப்பினரை மக்கள் விரட்டியடித்தார்கள்.அது மட்டுமில்லாமல் ஸ்டெர்லைட் ஆலை வேண்டாமென்று அதிகமானோர் தெரிவித்ததாக பத்திரிக்கையாளர் சந்திப்பில் தருண் அகர்வால் தெரிவித்தது குறிப்பிடதக்கது.
DINASUVADU