தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு தொடர்பாக சிபிஐ அதிகாரிகள் திங்களன்று 3வது நாளாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக, மே, 22ல், தூத்துக்குடி ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு மக்கள் ஊர்வலமாக சென்று, போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது நடந்த காவல்துறையினரின் துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் இறந்தனர். ஏராளமான பொதுமக்களும் காயமடைந்தனர். இந்த கலவரம் தொடர்பாக, தூத்துக்குடி சிப்காட், தென்பாகம், வடபாகம் மற்றும் முத்தையாபுரம் காவல்நிலையங்களில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.
தமிழக அரசு, துப்பாக்கிச் சூடு வழக்குகளை, சி.பி.சி.ஐ.டி., விசாரணைக்கு மாற்றியது. துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக, சி.பி.ஐ., விசாரணை கோரி, உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் வழக்கு தொடரப்பட்டது. சி.பி.ஐ., விசாரணைக்கு, உயர் நீதிமன்ற கிளை கடந்த ஆக.14ல் உத்தரவிட்டது. இதனையடுத்து சென்னை, சி.பி.ஐ., சிறப்பு புலனாய்வு பிரிவு அதிகாரிகள், துப்பாக்கிச் சூடு தொடர்பாக, 20 அமைப்புகள் மீது கொலை முயற்சி, கொலை மிரட்டல், அரசு அதிகாரிகளை பணி செய்ய விடாமல் தடுத்தல், ஆயுதங்களை கொண்டு தாக்குதல் உள்ளிட்ட 13 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து விசாரணையை துவக்கினர்.
சி.பி.ஐ., எஸ்.பி., சரவணன் தலைமையில், நான்கு பேர் கொண்ட குழுவினர், சனிக்கிழமை மாலை தூத்துக்குடி வந்தனர். சிப்காட், வடபாகம், தென்பாகம் காவல்நிலையங்கள் மற்றும் ஆயுதப்படையில் துப்பாக்கிச் சூடு தொடர்பான வழக்கு ஆவணங்களை சேகரித்தனர். தொடர்ந்து, துப்பாக்கிச் சூடு தொடர்பாக, தற்போது சேகரித்த ஆவணங்களை, சி.பி.சி.ஐ.டி. காவல்துறையினர் ஒப்படைத்த ஆவணங்களுடன் ஒப்பீடு செய்தனர். துப்பாக்கிச் சூட்டிற்கு உத்தரவிட்ட வட்டாட்சியர் சந்திரனிடம், ஞாயிறன்று காலை, விருந்தினர் மாளிகையில், விசாரணை நடத்தினர்.
பின், வாகனங்கள் எரிக்கப்பட்ட நான்கு வழிச்சாலை பகுதி, துப்பாக்கிச் சூடு நடந்த ஆட்சியர் அலுவலக பகுதிகளை, எஸ்.பி., சரவணன், ஏ.எஸ்.பி., ரவி உள்ளிட்ட அதிகாரிகள் ஆய்வு செய்தனர். தூத்துக்குடியில் திங்களன்று 3வது நாளாக சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
DINASUVADU
டெல்லி : இந்திய அணியின் இளம் கிரிக்கெட் வீரர்களான ருதுராஜ் கெய்க்வாட், இஷான் கிஷன், சஞ்சு சாம்சன் போன்ற வீரர்களுக்கு…
கோவை : ஆரோக்கியசாமி சாலை, ராமச்சந்திரா சாலை, டி.பி.ரோடு, லாலி சாலை, தடாகம் சாலை, கவுலிபிரவுன் சாலை, டி.வி.சாமி சாலை,…
சென்னை : விடுதலை 2 திரைப்படம் வெற்றிமாறனின் தலை சிறந்த படைப்புகளின் பட்டியலில் இடம் பெற்றுவிட்டது என்று தான் சொல்லவேண்டும். அந்த…
சென்னை : தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் 6-முதல் 12-ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவ மாணவியர்களின் உயர் கல்விக்கான செலவை…
சென்னை : மத்திய அரசின் தேசிய தேர்வு முகமையால் நடத்தப்படும் யுஜிசி – நெட் தேர்வு 30 பாடங்களுக்கு ஜனவரி 15,…
டெல்லி : கடந்த ஆகஸ்ட் மாதம் வங்கதேசத்தில் ஏற்பட்ட உள்நாட்டு கலவரத்தில் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்தனர். இந்த உள்நாட்டு கிளர்ச்சி உச்சத்தில்…