ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தியும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரியும் ஜெர்மனியில் தமிழர்கள் போராட்டம்…!
ஜெர்மனியின் மூனிச் நகரில் வாழும் தமிழர்கள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரியும், ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தியும், போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மூனிச் நகரில் ஒலிம்பிக் விளையாட்டு அரங்கம் அருகே ஒன்றுகூடிய தமிழர்கள், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கவும், நியுட்ரினோ திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஸ்டெர்லைட் ஆலையை மூடவும், ஆறுகளை இணைக்க வேண்டும் என்றும் பதாகைகளை ஏந்தி முழக்கமிட்ட அவர்கள், தமிழகத்தையும், விவசாயத்தை காக்க வேண்டும் என, மத்திய, மாநில அரசுகளுக்கு கோரிக்கை விடுத்தனர்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.