ஸ்டெர்லைட் ஆலையை மூடுவது உறுதி ! எந்த அடக்குமுறை வந்தாலும் அதை எதிர்கொண்டு மூடுவேன்! வைகோ
மதிமுக பொதுச் செயலாளர் வைகோ ,எந்த அடக்குமுறை வந்தாலும் அதனை எதிர்கொண்டு ஸ்டெர்லைட் ஆலையை மூடாமல் விடமாட்டேன் என கூறினார்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக வாகனப் பயணம் மேற்கொண்ட வைகோ செய்தியாளர்களைச் சந்தித்தார். வரும் 28ஆம் தேதி தூத்துக்குடியில் நடக்கும் போராட்டத்தில் பல்லாயிரக்கணக்கான மக்கள் பங்கேற்க வேண்டும் என அப்போது அவர் அழைப்பு விடுத்தார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.