ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக சிறப்பு சட்டம்…..மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேண்டுகோள்…!!
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக தமிழக தமிழக சட்டப்பேரவையில் சிறப்பு சட்டம் இயற்ற வேண்டும் என்று வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.
தூத்துக்குடியில் வேதாந்தா நிறுவனம் நடத்தி வரும் ஸ்டெர்லைட் காப்பர் உருக்கு ஆலையில் சுற்றுசூழலுக்கு தீங்கு நடைபெறுகின்றது என்று தூத்துக்குடியில் மக்கள் போராட்டம் நடைபெற்றது.இந்த போராட்டத்தின் 100-வது நாள் போலீஸ் துப்பாக்கி சூட்டில் 13 பேர் உயிரிழந்து தமிழக அரசு ஆலைக்கு சீல் வைத்து
இந்நிலையில் தமிழக அரசின் இந்த உத்தரவை எதிர்த்து வேதாந்தா நிறுவனம் தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் மேல்முறையீடு செய்ததை அடுத்து பசுமை தீர்ப்பாயம் ஓய்வு பெற்ற நீதிபதி தருண் அகர்வால் தலைமையிலான 3 பேர் கொண்ட குழுவை நியமித்து ஆய்வை மேற்கொண்டது.தருண் அகர்வால் குழுவும் தன்னுடைய ஆய்வறிக்கையை தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் சமர்ப்பித்தது.
இந்நிலையில் தேசிய பசுமை தீர்ப்பாயம் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக தமிழக அரசு எடுத்த நடவடிக்கையை ரத்து செய்த்து , ஸ்டெர்லைட் ஆலை இயங்க அனுமதியளித்து உத்தரவிட்டது.இதனால் மக்கள் மீண்டும் ஆத்திரமடைந்தனர்.ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக தமிழக அரசு சிறப்பு சட்டம் இயற்ற வேண்டுமென்று கோரிக்கை வைக்கின்றனர்.
இதை தொடர்ந்து இன்று மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் தூத்துக்குடி மாவட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் அர்ஜூனன் தலைமையில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக தமிழக தமிழக சட்டப்பேரவையில் சிறப்பு சட்டம் இயற்ற வேண்டும் என்று வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.
மேலும் ஸ்டெர்லைட் நிர்வாகம் கூறுவதை தேசிய பசுமை தீர்ப்பாயம் அப்படியே கேட்டுள்ளது.நீதிபதி தருண் அகர்வால் குழு ஸ்டெர்லைட் ஆலையின் பாதிப்பு குறித்து அறிக்கையை அளிப்பதை விட்டுவிட்டு ஸ்டெர்லைட் ஆலையை சீல் வைத்த அரசானைக்கெதிராக பரிந்துரைப்பது நியாயமற்றது என்றும் மனுவில் தெரிவிக்கப்பட்டது.
dinasuvadu.com