ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராட்டம் நடத்தி வரும் மக்களுக்கு ஆதரவு தெரிவிக்க கமல்ஹாசன் தூத்துக்குடி வருகை …!

Published by
Venu

மக்கள் உயிரை பற்றி கவலைப்படாத எந்த தொழிலும் தேவையில்லை மக்களின் குரல் தமிழக அரசுக்கு கேட்கவில்லை; மத்தியில் இருப்போருக்கு கேட்கவேண்டும் குற்றத்தை அரசு கண்டிக்கவில்லை என்றால் மக்கள் செய்வார்கள்

மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல் ஹாசன் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராட்டம் நடத்தி வரும் மக்களுக்கு ஆதரவு தெரிவிக்க தூத்துக்குடி வருகை தந்துள்ளார்.

தூத்துக்குடியில் இயங்கி வரும் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக்கோரி அப்பகுதி மக்கள் கடந்த 48 நாட்களுக்கு மேலாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கு பல்வேறு தரப்பில் இருந்தும் ஆதரவு தெரிவிக்கப்பட்டு வந்த நிலையில், மக்கள் விரும்பினால் மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பாக நான் ஆதரவாக களமிறங்க தயார் என்று கமல் அறிவித்திருந்தார்.

இதன் பிறகு போராட்டக் குழுவினர் அவரை சந்தித்து போராட்டத்திற்கு ஆதரவு தரும்படி அழைப்பு விடுத்தனர். இதனால் இன்று (ஏப்ரல் 1) கமல் ஹாசன் தூத்துக்குடிக்கு வருகை தந்துள்ளார். . குமாரரெட்டிபாளையத்தில் நடக்கும் போராட்டத்தில் கலந்து கொள்ள இருக்கின்றார் கமல்ஹாசன்.

இந்நிலையில் புள்ளிவிவரங்களோடு களத்தில் சந்திப்போம் என  மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல் தெரிவித்துள்ளார்.ஸ்டெர்லைட்டுக்கு எதிராக அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டிய நேரம் இது என அவர் கூறியுள்ளார்.

 

தூத்துக்குடி விமான நிலையத்தில் பேசிய மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல் ஹாசன்,  மக்கள் உயிரை பற்றி கவலைப்படாத எந்த தொழிலும் தேவையில்லை, மக்களின் குரல் தமிழக அரசுக்கு கேட்கவில்லை. மத்தியில் இருப்போருக்கு கேட்கவேண்டும் குற்றத்தை அரசு கண்டிக்கவில்லை என்றால் மக்கள் செய்வார்கள் என மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல் ஹாசன் தெரிவித்தார்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

 

Recent Posts

“திருப்பதியில் விஐபிகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பதை கைவிட வேண்டும்” – பவன் கல்யாண்!

“திருப்பதியில் விஐபிகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பதை கைவிட வேண்டும்” – பவன் கல்யாண்!

திருப்பதி: திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வைகுண்ட ஏகாதசியின் முக்கிய நிகழ்வான பரமபத வாசல் எனும் சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. இந்த சொர்க்கவாசல்…

18 minutes ago

பள்ளி குழந்தை பலியான சம்பவம் – 3 பேருக்கும் ஜாமின்!

சென்னை: விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் தனியார் பள்ளி கழிவுநீர் தொட்டியில் தவறி விழுந்து 4 வயது சிறுமி பலியானது பெரும்…

24 minutes ago

மீண்டும், மீண்டுமா? உ.பி-க்கு ரூ.31 ஆயிரம் கோடி! தமிழ்நாட்டுக்கு ரூ.7 ஆயிரம் கோடி மட்டுமே!

சென்னை : மத்திய அரசு வசூல் செய்யும் ஜிஎஸ்டி வரித்தொகையானது, மாதந்தோறும் மாநிலங்களுக்கு பகிர்ந்தளிக்கப்படும். அவ்வாறு இன்று டிசம்பர் மாதம்…

2 hours ago

இங்கிலாந்து ஒருநாள் தொடரில் கே.எல்.ராகுலுக்கு ஓய்வு.?

கொல்கத்தா: இந்த மாதம் நடைபெறும் இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இந்திய வீரர் கே.எல்.ராகுல் பங்கேற்கமாட்டார் என கூறப்படுகிறது.…

2 hours ago

வைகுண்ட ஏகாதசி 2025-“கோவிந்தா” முழக்கத்துடன் திறக்கப்பட்ட சொர்க்கவாசல்..!

வைகுண்ட ஏகாதசியின் முக்கிய நிகழ்வான பரமபத வாசல் எனும் சொர்க்கவாசல் திறப்பு அனைத்து வைணவ ஆலயங்களிலும் கோலாகலமாக திறக்கப்பட்டது. சென்னை…

3 hours ago

காட்டு பன்றிகள் வேட்டைக்கு அனுமதி! விளக்கம் கொடுத்த அமைச்சர் பொன்முடி!

சென்னை : சமீபகாலமாக விளைநிலங்களில் கட்டு பன்றிகள் நுழைந்து சேதம் ஏற்படுத்தி வருவதால் அதற்கு தகுந்த நடவடிக்கைகளை அரசு எடுத்துக்கொள்ளவேண்டும் என…

3 hours ago