ஸ்டெர்லைட்டை திறக்கவா ? “வேண்டாமா ? முடிவு செய்கிறது 3 பேர் கொண்ட குழு” தூத்துக்குடியில் பரபரப்பு..!!
தூத்துக்குடியில் செயல்பட்டு வந்த வேதாந்தா குழுமத்துக்கு சொந்தமான ஸ்டெர்லைட் ஆலையால் சுற்றுச்சூழல், உடல்நல பாதிப்பு ஏற்படுவதாகக் கூறி அப்பகுதி மக்கள் தொடர்ந்து பல் வேறு போராட்டங்களை நடத்தி வந்தனர். கடந்த மே மாதம் 22-ம் தேதி ஏற்பட்ட கலவரத்தைத் தொடர்ந்து நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் பலியானார்கள்.
இதன் தொடர்ச்சியாக ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடத் தமிழக அரசு உத்தரவிட்டது.இந்த உத்தரவை எதிர்த்து ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம், டெல்லியில் உள்ள தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்தது.அதைத்தொடர்ந்து தேசிய பசுமைத்தீர்ப்பாயம் அமைத்துள்ள ஓய்வு பெற்ற நீதிபதி தருன் தலைமையில் அமைக்கப்பட 3 பேர் கொண்ட குழு இன்று மாலை தூத்துக்குடி வருகின்றனர்.
தொடர்ந்து பேட்டியளித்த அவர் இந்த குழுவினருடன் வருவாய் , துறை , காவல்துறை ,மாசுகட்டுப்பட்டு அதிகாரிகள் உடனிருப்பர்.இந்த குழு தூப்பாக்கிசூடு சம்மந்தமாக கேட்கமாட்டார்கள் இந்த குழு ஸ்டெர்லைட் திறக்கவே , வேண்டாமா என்று கருத்து கேட்டு ஆய்வு செய்ய வருகிறார்கள் என்றார்.வாய்ப்பு இருந்தால் ஏனைய பகுதிகளுக்கு ஆய்வு நடத்த செல்வார்கள் என்றார் மாவட்ட ஆட்சியர்.
DINASUVADU