போராட்டத்தில் ஈடுபட்ட இந்திய மாணவர் சங்கத்தினர் மீது பொய் வழக்கை பதிவு செய்து கைது செய்யும் தூத்துக்குடி சிப்காட் காவல்துறை ஆய்வாளர் ஹரிஹரன்.
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது.குறிப்பாக கடந்த 13 ஆம் தேதி இந்திய மாணவர் சங்கம் சார்பில் கல்லுரி மாணவர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.இப்போராட்டத்தில் 500க்கும் மேற்பட்ட கல்லுரி மாணவர்கள் பங்கேற்றனர்.இப்போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களை படிக்கும் மாணவர்கள் என்று பார்க்காமல் 6-பிரிவுகளில் 16-மாணவர்கள் மீது பொய் வழக்கை பதிவு செய்தார் தூத்துக்குடி சிப்காட் காவல்துறை ஆய்வாளர் ஹரிஹரன் .
போராட்டம் நடந்த 13ஆம் தேதி தூத்துக்குடி பழைய பேருந்து நிலையத்தில் போராட்டத்தில் ஈடுபடாத கல்லூரி மாணவர்களை வலு கட்டாயமாக மிரட்டி போலீஸ் வாகனத்தில் ஏற்றி சென்றுள்ளனர்.உடனே தகவல் அறிந்து அங்கே சென்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சின் மத்தியக்குழு உறுப்பினர் உ.வாசுகி மற்றும் மாவட்ட செயலாளர் அர்ச்சுனன் , மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் சென்று மாணவர்களை மீட்டு வந்தனர் …
அதை தொடர்ந்து நேற்று 15 அன்று பைக்கில் சென்ற இந்திய மாணவர் சங்கத்தின் மாணவர்கள் 4 பேரை போலீஸ் அழைத்து சென்று தென்பாக காவல்நிலையத்தில் வைத்து இரவு 8 மணிக்கு மேல் விடுவித்தனர்..
மேலும் நேற்று கல்லுரி சென்ற மாணவர்களை மிரட்டி மீண்டும், பயம் முறுத்தும் வேலையை கல்லூரி வளாகம் முன்பு நின்று தூத்துக்குடி காவல்துறை தொடர்ந்து செய்து வருகின்றது.நேற்று காலை 11 மணிக்கு ஐஐடி(ITI) வளாகம் முன்பு நின்று கொண்டு டீ குடிக்க சென்ற இசக்கிமாரி என்ற மாணவனை போலீஸ் வலுக்கட்டாயமாக அழைத்து சென்றனர்..
அதே போல இன்று அதிகாலை மாசனமுத்து என்ற மாணவனை வீட்டுக்கு சென்று அராஜகமான முறையில் போலீஸ் கைது செய்தது. அதே போல இந்திய மாணவர் சங்கம் மாவட்ட தலைவர் R.அமர்நாத் வீட்டில் இல்லாததால் அவரது தம்பியை வேலை செய்யும் நிறுவனத்திற்கு சென்று விசாரணை என்ற பெயரில் அதிகாலை அழைத்து 4-மணிவரை வைத்து மிரட்டியுள்ளனர்.
இதேபோல் இன்று காலை கல்லூரிக்கு தேர்வு எழுத சென்ற போப் கல்லூரி மாணவன் ஜாய்சனை போலீசார் பேருந்தில் இருந்து கீழே இறக்கி வலுக்கட்டாயமாக காவல் நிலையத்துக்கு அழைத்து சென்றனர்.அதேபோல் மாரிமுத்து என்ற மாணவனையும் போலீசார் வலுகட்டாயமாக கைது செய்து சென்றனர்.தொடர்ந்து சிப்காட் போலீசார் மாணவர்கள் மீது பொய் வழக்கு பதிவு செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதுவரையில் தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டம் தொடர்பாக 250 பேர் மீது சிப்காட் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு 12 பேர் கைது செய்யப்பட்டனர்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
சென்னை: விக்கிரவாண்டியில் தனியார் பள்ளியில் செப்டிக் டேங்கில் விழுந்து, லியா லட்சுமி என்ற 5 வயது குழந்தை உயிரிழந்தது. செப்டிக் டேங்கின்…
சென்னை: பொங்கல் திருநாளையொட்டி சொந்த ஊருக்கு செல்லும் மக்களுக்காக திருச்சி -தாம்பரம் - திருச்சி இடையே ஜன் சதாப்தி சிறப்பு…
புதுச்சேரி: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு புதுச்சேரியில் பொங்கல் தொகுப்பிற்கு பதிலாக, அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் ரூ. 750 வங்கி கணக்கில்…
கோவா: நடிகை சாக்ஷி அகர்வால் தனது சிறுவயது நண்பரான நவனீத் மிஸ்ராவை காதலித்து திருமணம் செய்திருக்கிறார். அவர்களின் திருமணம் நேற்று…
தெலுங்கானா: ஹைதராபாத்தில் உள்ள சந்தியா திரையரங்கில் கடந்த டிச,4-ம் தேதி அன்று ‘புஷ்பா 2’ படத்தின் சிறப்பு காட்சி திரையிடலை…
சென்னை: தமிழக வெற்றிக் கழகம் கட்சி தொடங்கி ஒரு ஆண்டு நிறைவையெட்டி தமிழக முழுவதும் மக்கள் நலப்பணிகளை தீவிரப்படுத்தி தவெக…