“மக்களுக்காக களம் இறங்கிய DYFI முதல்கட்டமாக கையெழுத்து இயக்கம்…!!
கோவில்பட்டி ,
கோவில்பட்டி தமிழக நகராட்சிகளிலே முதன்மையான நகராட்சி என்ற அங்கீகாரத்தை சமீபத்தில் பெற்றது.ஆனால் இன்று வரை கோவில்பட்டி நகராட்சியில் தரமான , சுத்தமான பொதுகழிப்பிடம் என்பது இல்லை.அதிக மக்கள் தொகையையும் , அதிக வணிக வளாகம் கொண்ட கோவில்பட்டியில் கட்டமைப்பு வசதி என்பது மிகவும் குறைவு என்பது பொது மக்களின் குற்றச்சாட்டாக இருக்கிறது.
இந்நிலையில் கோவில்பட்டியில் பொது கழிப்பிடம் அமைக்க கோரி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம்(DYFI ) சார்பில் கையெழுத்து இயக்கம் நடத்தப்பட்டது.அதில் மக்களின் நலன் கருதி முன்னோடி நகராட்சி என்பதை ஏற்றுக்கொள்ளும் வகையில் தரமான கழிப்பிடம் வசதி வேண்டும் என்று கோரிக்கை வாசகம் இருந்தது.இன்று பொதுமக்கள் , வணிக வியாபாரிகள் , குடியிருப்பு வாசிகள் , மாணவர்கள் மற்றும் வாலிபர்கள் என அனைத்து பகுதி மக்களிடமும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் (DYFI ) சார்பில் கையெழுத்து வாங்கப்பட்டது.
இதற்கு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் கோவில்பட்டி நகர செயலாளர் மாடசாமி தலைமை தாங்கினார்.கோவில்பட்டி நகர தலைவர் துணை தலைவர் மகாராஜன் , துணை செயலாளர் உமா சங்கர் உட்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.இதுகுறித்து இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் தெரிவிக்கையில், கோவில்பட்டி நகராட்சிக்கு தரமான கழிப்பிட வசதி வேண்டும்.இது ஒரு அமைச்சரின் சட்டமன்ற தொகுதி எனவே நாங்கள் முதல்கட்டமாக நடத்தும் இந்த கையெழுத்து இயக்கம் அமைச்சரின் கவனத்திற்கு சென்று உடனே பொது கழிப்பிடம் அமைக்க வேண்டும் இல்லையென்றால் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் (DYFI ) சார்பில் வலுவான போராட்டம் நடத்துவோம் என்றனர்.
இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் (DYFI ) நடத்திய இந்த கையெழுத்து இயக்கம் மற்றும் பொதுக்கழிப்பிட கோரிக்கைக்காக நடத்த இருக்கும் போராட்டம் கோவில்பட்டி மக்களிடையே ஒரு தன்னம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளதாக பொதுமக்கள் கருதுவதாக உற்சாகத்துடன் தெரிவித்தனர்.
DINASUVADU