செப்டம்பர் 1 நீட் தேர்வின் தூயரால் மாணவி அனிதா இறந்த நாள்..,
அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே குழுமூரை சேர்ந்தவர் அனிதா. இவர் கடந்த ஆண்டு நடந்து முடிந்த பிளஸ் டூ பொது தேர்வில் 1,176 மதிப்பெண்கள் எடுத்துள்ளார். மாநில பாடத்திட்டத்தில் அதிக மதிப்பெண் பெற்றவர்.அந்த ஆண்டு மருத்துவ படிப்புக்கு கண்டிப்பாக நீட் நுழைவு தேர்வு எழுத வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டிருந்தது. இதனால் அனிதாவும் நீட் நுழைவு தேர்வு எழுதினார். அதில், 700 மதிப்பெண்களுக்கு 86 மதிப்பெண்கள் மட்டுமே பெற்றிருந்தார்.
எனவே, நீட் தேர்வு அடிப்படையில் மருத்துவக் கலந்தாய்வு நடந்தால், தனக்குக் கிடைக்க வேண்டிய மருத்துவ இடம் கிடைக்காமல் போகும் என்று கூறி உச்ச நீதிமன்றத்தில் அனிதா வழக்கு தொடர்ந்திருந்தார்.ஆனால், நீட் தேர்வின்அடிப்படையில் மருத்துவ கலந்தாய்வு நடத்தும்படி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டதால் அனிதா மருத்துவம் படிக்கும் வாய்ப்பை இழந்தார். தனது கனவு சிந்ததை கண்ட அனிதா அவரது வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தற்கொலை செய்து கொண்டார் அனிதா என்ற மாணவி இறந்த நாள் செப்டம்பர் 1 ஆம் தேதி .
அந்த வகையில் நேற்று தமிழகம் முழுவதும் உள்ள கல்விநிலைய வளாகத்தில் நீட் அனிதா நினைவு நாளை நீட் எதிர்ப்பு நாளாக இந்திய மாணவர் சங்கம் சார்பில் அனுசரிக்கபப்ட்டது.அந்த தினத்தை அனுசரிக்கும் வகையில் தூத்துக்குடி மாவட்டம் எட்டையபுரம் அருகே உள்ள டான் போஸ்கோ கல்லூரி மாணவர்கள் கல்லூரி வளாகத்தில் நீட் எதிப்பு நாளாக கருதி தெருக்கூத்து நாடகம் நடித்து நீட் தேர்வின் வஞ்சகத்தை மாணவர்களுக்கு உணர வைத்தனர்..
மாணவர்கள் நாடக வடிவில் நடித்த இந்த நாடகம் மாணவர்களையும் , ஆசிரியர்களையும் வெகுவாக கவர்ந்தது.இந்த நாடகத்தை ஒருங்கிணைத்து நடித்தது இந்திய மாணவர் சங்கத்தின் தூத்துக்குடி மாவட்ட இணை செயலாளர் சங்கரலிங்கம் என்பது குறிப்பிடத்தக்கது.ஒட்டு மொத்த ஆசிரியர்கள் ,மாணவர்களிடமும் வரவேற்பை பெற்றது இந்த நாடகம்..
DINASUVADU
சென்னை : தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல், தெற்கு ஆந்திர- வடதமிழக கடலோரப்பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு…
கோவை : கலங்கல், பீடம்பள்ளி, பட்டணம், பாப்பம்பட்டி, அக்கநாயக்கன்பாளையம், பட்டணம்புதூர், பாப்பம்பட்டிப்பிரிவு, கண்ணம்பாளையம், நடுப்பாளையம் (ஒரு மண்டலம்), சின்ன குயிலி,…
சென்னை : விடாமுயற்சி படத்திற்கான அப்டேட் எப்போது வெளியாகும் என்று தான் அஜித் ரசிகர்கள் மட்டுமின்றி மற்ற சில நடிகர்களின் ரசிகர்களும்…
சென்னை : இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா ஐசிசி தரவரிசை பட்டியலில் முதலிடம் பிடித்து அசதியுள்ள…
சென்னை : மாவட்டத்தில் கிண்டி பகுதியில் உள்ள அண்ணா பல்கலைக்கழத்தில் படித்து வந்த மாணவி ஒருவர் இரண்டு பேரால் பாலியல் வன்கொடுமை…
சென்னை : கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழத்தில் படித்து வரும் ஒரு மாணவனும், மாணவியும் பல்கலைக்கழக வளாகத்தில் ஒன்றாக அமர்ந்து பேசிகொண்டிருந்த…