நாங்க நினைச்சா ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட முடியாது! அமைச்சர் கடம்பூர் ராஜூ
அமைச்சர் கடம்பூர் ராஜூ, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ முதலில் தமது மனநிலையைச் சரிசெய்து கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளார்.
கோவில்பட்டியில் பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கிய பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கடம்பூர் ராஜூ, ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான மக்களின் போராட்டத்தை மதித்து தமிழக அரசின் மாசுக்கட்டுப்பாடு வாரியம் அதன் உரிமத்தை ரத்து செய்திருப்பதாக தெரிவித்தார். ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடுவது மாநில அரசின் கையில் இல்லை எனினும், அதற்கான வழிவகைகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார். இந்த விவகாரத்தில் வைகோ பொறுப்புள்ள தலைவருக்குரிய பண்போடு பேசவில்லை என்றும் அமைச்சர் கடம்பூர் ராஜூ விமர்சித்தார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.