அம்மனுவில், “தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி தூத்துக்குடி எம்ஜிஆர் திடலில் வரும் 17 ஆம் தேதி மாலை 5 மணி முதல் 10 மணி வரை அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் கண்டன பொதுக் கூட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கு அனுமதி கேட்டு தூத்துக்குடி டவுன் காவல்துறை உதவி கண்காணிப்பாளரிடம் மனு அளித்தோம்.
ஆனால், சட்டம், ஒழுங்கு பிரச்சனைகளை காரணம் காட்டி அனுமதி மறுத்துவிட்டார். ஆனால், நாங்கள் உயர்நீதிமன்றத்தின் நிபந்தனைகளின்படி பொது மக்களுக்கு இடையூறு இல்லாமல் பொதுகூட்டம் நடத்த முடிவு செய்துள்ளோம். எனவே, கண்டன பொதுக் கூட்டம் நடத்த அனுமதி அளித்து உத்தரவிட வேண்டும்” என மனுவில் கூறியிருந்தார்.
இந்த மனு இன்று (வியாழக்கிழமை) நீதிபதிகள் செல்வம், பஷீர் அகமது முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது ஏப்ரல் 17 ஆம் தேதி மாலை 5 மணி முதல் 10 வரை பொதுக்கூட்டம் நடத்துவது தொடர்பாக மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர், மனுதாரரின் மனுவை பரிசீலனை செய்து, வெள்ளிக்கிழமைக்குள் (ஏப்ரல் 13) அனுமதி வழங்குமாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.