தூத்துக்குடி ,ராமநாதபுரம் பகுதிகளில் மழை…!
தமிழகத்தில் தூத்துக்குடி மற்றும் ராமநாதபுரம் பகுதிகளில் மழை பெய்து வருகிறது.
ராமநாதபுரம் அரண்மனை, கேணிக்கரை, மாவட்ட ஆட்சியர் அலுவலகம், பேராவூர், காட்டூரணி, பட்டினம்காத்தான், உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நல்ல மழை பெய்து வருகிறது. அதேபோன்று தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று பரவலான மழை பெய்த நிலையில் இன்று மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது.
இந்த இடங்களில் தொடர்ந்து கோடைவெயில் தகித்து வந்த நிலையில் நீண்ட நாட்களுக்குப் பிறகு பெய்த மழையால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.